அத்தியாயம்  அல் அஃலா  87 : 1-19 / 19
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
87:1 (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! 87:2 அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் அமைத்தான்; 87:3 மேலும் விதியை நிர்ணயித்தான்; பிறகு வழிகாட்டினான். 87:4 மேலும், தாவரங்களை முளைக்கச் செய்தான். 87:5 பின்னர், அவற்றைக் காய்ந்து கருகிய குப்பைக் கூளங்களாய் ஆக்கினான். 87:6 (நபியே!) நாம் உம்மை ஓதிடச் செய்வோம். பிறகு நீர் மறக்க மாட்டீர்; 87:7 ஆனால், அல்லாஹ் நாடியதைத் தவிர! திண்ணமாக, அவன் வெளிப்படையாகவும், மறைவாகவும் இருக்கும் யாவற்றையும் அறிகின்றான். 87:8 மேலும், இலகுவான பாதையை நாம் உமக்கு ஏற்படுத்தித் தருவோம். 87:9 எனவே, அறிவுரை வழங்குவீராக, அறிவுரை பலனளிக்குமாயின்! 87:10 எவர் அஞ்சுகிறாரோ, அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்வார். 87:11 ஆனால் துர்ப்பாக்கியவானோ அதனைத் தவிர்த்துக்கொள்வான். 87:12 அவன் பெரும் நெருப்பில் நுழைவான்; 87:13 பிறகு அதில் மரணமடையவும் மாட்டான்; வாழவும் மாட்டான்! 87:14 நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டார், தூய்மையை மேற்கொண்டு 87:15 மேலும், தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து தொழுகையை நிறைவேற்றியவர். 87:16 ஆனால், நீங்கள் இம்மை வாழ்விற்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள். 87:17 உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது. 87:18 நிச்சயமாக இதே விஷயம் முன்னர் அருளப்பட்ட வேதங்களிலும் சொல்லப்பட்டிருந்தது; 87:19 இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களில்!
அத்தியாயம்  அல் ஃகாஷியா  88 : 1-26 / 26
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
88:1 சூழ்ந்து கொள்ளக் கூடிய துன்பம் (அதாவது மறுமை) பற்றிய செய்தி உமக்கு வந்ததா? 88:2 அந்நாளில் சில முகங்கள் பீதியுற்றிருக்கும்; 88:3 கடுமையான சிரமத்தை மேற் கொண்டிருக்கும்; களைத்துப் போயிருக்கும்; 88:4 கனன்றெழும் நெருப்பில் கருகிக் கொண்டிருக்கும்; 88:5 கொதிக்கும் ஊற்றுநீர் அவர்களுக்கு அருந்தக் கொடுக்கப்படும்; 88:6 முட்கள் நிறைந்த காய்ந்துபோன புற்பூண்டைத் தவிர வேறெந்த உணவும் அவர்களுக்குக் கிடைக்காது. 88:7 அது ஊட்டமும் தராது; பசியையும் போக்காது! 88:8 வேறு சில முகங்கள் அந்நாளில் பொலிவுற்றிருக்கும்; 88:9 தன் செயல்கள் குறித்து திருப்தியடைந்திருக்கும்; 88:10 உன்னதமான சுவனத்தில் இருக்கும்; 88:11 அவை அங்கு வீணானவற்றைச் செவியுற மாட்டா. 88:12 ஓடிக்கொண்டிருக்கும் நீரூற்று அங்கு உண்டு; 88:13 உயர்ந்த கட்டில்கள் அங்கு இருக்கும்; 88:14 மேலும், கிண்ணங்களும் வைக்கப்பட்டிருக்கும். 88:15 தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்; 88:16 எழிலான விரிப்புகளும் விரிக்கப்பட்டிருக்கும். 88:17 (இம்மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை எனில்,) ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று! 88:18 மேலும், வானத்தைப் பார்க்க வில்லையா, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று! 88:19 மேலும், மலைகளைப் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு ஊன்றப்பட்டுள்ளன என்று! 88:20 மேலும், பூமியைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று! 88:21 சரி (நபியே!) நீர் அறிவுரை புரிந்தவண்ணம் இருப்பீராக! திண்ணமாக, நீர் அறிவுரை புரிபவர் மட்டுமே ஆவீர்! 88:22 அவர்களை நீர் நிர்ப்பந்திப்பவர் அல்லர். 88:23 ஆனால், எவன் புறக்கணித்தானோ மேலும், நிராகரித்தானோ 88:24 அவனுக்கு அல்லாஹ் கடினமான தண்டனை அளிப்பான். 88:25 திண்ணமாக, இவர்கள் நம் பக்கமே திரும்பி வர வேண்டியுள்ளது. 88:26 பிறகு, இவர்களிடம் கணக்கு வாங்கும் பொறுப்பு நம்மீதே உள்ளது.
அத்தியாயம்  அல் ஃபஜ்ர்  89 : 1-30 / 30
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
89:1 வைகறைப் பொழுதின் மீது சத்தியமாக! 89:2 மேலும், பத்து இரவுகளின் மீதும், 89:3 இரட்டை மற்றும் ஒற்றையின் மீதும், 89:4 சென்று கொண்டிருக்கும் இரவின் மீதும் சத்தியமாக! 89:5 அறிவுள்ள ஒருவருக்கு இனியும் சத்தியம் தேவையா, என்ன? 89:6 ஆது கூட்டத்தாருடன் உம் இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? 89:7 (அவர்கள்) உயரமான தூண்களையுடைய இரம் எனும் நகரவாசிகள்; 89:8 அவர்களைப் போன்று எந்தச் சமுதாயமும் உலகநாடுகளில் படைக்கப்படவில்லை; 89:9 மேலும், பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்த ஸமூத் சமுதாயத்தாருடனும் 89:10 மேலும், முளைகளையுடைய ஃபிர்அவ்னுடனும் (உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) 89:11 அந்த மக்களோ உலக நாடுகளில் வரம்புமீறிய செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள்; 89:12 அங்கு பெரும் குழப்பத்தை விளைவித்திருந்தார்கள். 89:13 இறுதியில், அவர்கள் மீது உம் இறைவன் தண்டனையின் சாட்டைகளைப் பொழிந்தான். 89:14 உண்மையில், உம் இறைவன் குறிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றான். 89:15 ஆனால், மனிதனின் நிலை எப்படி இருக்கின்றதெனில், அவனுடைய இறைவன் அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனை கண்ணியப்படுத்தி, அருட்கொடைகளையும் வழங்கினால், “என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்” என்று கூறுகின்றான். 89:16 மேலும், அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனுடைய வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால் “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” என்று கூறுகின்றான். 89:17 ஒருபோதும் இல்லை! ஆனால், அநாதையுடன் கண்ணியமாய் நீங்கள் நடந்து கொள்வதில்லை; 89:18 மேலும், வறியவர்க்கு உணவளிக்க ஒருவரையொருவர் தூண்டுவதுமில்லை! 89:19 மேலும், வாரிசுச் சொத்துக்களை முழுமையாக நீங்களே விழுங்கிவிடுகின்றீர்கள். 89:20 மேலும், செல்வத்தின் மீது அளவு கடந்த மோகம் கொண்டுள்ளீர்கள். 89:21 ஒருபோதுமில்லை! பூமி தூள் தூளாக அடித்து நொறுக்கப்படும்போது, 89:22 மேலும் வானவர்கள் அணி அணியாக நிற்கும் நிலையில் உம் இறைவன் வருகை தரும்போது, 89:23 மேலும், அந்நாளில் நரகம் கண்ணெதிரில் கொண்டு வரப்படும்போது அந்நாளில்தான் மனிதன் புரிந்து கொள்வான். அப்போது அவன் புரிந்துகொள்வது என்ன பயனை அளிக்கும்? 89:24 அவன் புலம்புவான்: ‘அய்யகோ! எனது இந்த வாழ்க்கைக்காக சில ஏற்பாடுகளை, நான் முன்னரே செய்திருக்கக்கூடாதா? 89:25 அந்நாளில் அல்லாஹ் தண்டிப்பதுபோல், தண்டிப்பவர் எவருமிலர். 89:26 அவன் கட்டுவதுபோல் கட்டுபவரும் எவரும் இலர். 89:27 (மற்றொரு புறத்தில் அறிவிக்கப்படும்:) ஓ! அமைதியடைந்த ஆன்மாவே! 89:28 செல் உன் இறைவனின் பக்கம்! (உன் நல்ல முடிவைக்கொண்டு) மகிழ்ந்த நிலையில்; (மேலும் உன் இறைவனின்) திருப்தியைப் பெற்ற நிலையில்! 89:29 இணைந்துவிடு, என்னுடைய (நல்) அடியார்களுடன்! 89:30 மேலும், புகுந்துவிடு, என்னுடைய சுவனத்தில்!”
அத்தியாயம்  அல் பலத்  90 : 1-20 / 20
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
90:1 இல்லை! இந்த (மக்கா) நகரின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்! 90:2 மேலும், நிலைமை என்னவெனில், (நபியே!) இந்நகரத்தில் நீர் ஆகுமாக்கப்பட்டுள்ளீர்! 90:3 மேலும் தந்தை (ஆதம்) மீதும் அவரிலிருந்து பிறந்த மக்கள் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். 90:4 திண்ணமாக, நாம் மனிதனைப் பெரும் கஷ்டத்தில் படைத்திருக்கின்றோம். 90:5 ‘அவன் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது’ என்று அவன் நினைத்திருக்கின்றானா? 90:6 “ஏராளமான செல்வங்களை வாரி இறைத்துவிட்டேன்” என்று அவன் கூறுகின்றான். 90:7 யாருமே அவனைப் பார்க்கவில்லை என்று அவன் கருதுகின்றானா? 90:8 அவனுக்கு நாம் இரு கண்களையும் 90:9 ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா? 90:10 மேலும், (நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டிவிட்டோம். (இல்லையா?) 90:11 ஆயினும், அவன் கடினமான மலைப் பாதையைக் கடந்து செல்லத் துணியவில்லை. 90:12 கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன? 90:13 (அதுதான்) ஒருவனை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பது ஆகும்; 90:14 அல்லது பட்டினி நாளில் உணவளிப்பதும் ஆகும். 90:15 உறவினரான அநாதைக்கோ 90:16 அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ (உணவளிப்பதும் ஆகும்!) 90:17 பின்னர் (அத்துடன்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, பொறுமையை மேற்கொள்ளவும் (மக்கள் மீது) இரக்கம் காட்டவும், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுகின்றார்களோ, அவர்களில் ஒருவனாக அவன் இருக்கவேண்டும். 90:18 இத்தகையோர்தாம் வலப்பக்கத்தார். 90:19 மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் இடப் பக்கத்தார். 90:20 அவர்கள் மீது நெருப்பு படர்ந்திருக்கும்.
அத்தியாயம்  அஷ்ஷம்ஸ்  91 : 1-15 / 15
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
91:1 சூரியன் மீதும் அதன் வெயிலின் மீதும் சத்தியமாக! 91:2 மேலும், சந்திரன் மீது சத்தியமாக, அது சூரியனைத் தொடர்ந்து வரும்போது! 91:3 மேலும், பகலின் மீது சத்தியமாக, அது சூரியனை வெளிப்படுத்திக் காட்டும்போது! 91:4 மேலும், இரவின் மீது சத்தியமாக, அது சூரியனை மூடி மறைத்துக் கொள்ளும்போது! 91:5 மேலும், வானத்தின் மீதும் அதை அமைத்தவன் மீதும் சத்தியமாக! 91:6 மேலும், பூமியின் மீதும் அதை விரித்தவன் மீதும் சத்தியமாக! 91:7 மேலும், மனித ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மைப்படுத்தி பின்னர், 91:8 அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீதும் சத்தியமாக! 91:9 திண்ணமாக, வெற்றி பெற்றுவிட்டான் மனத்தைத் தூய்மைப்படுத்தியவன்; 91:10 மேலும், தோற்றுவிட்டான் அதனை நசுக்கியவன்! 91:11 ஸமூத் சமுதாயத்தார் தங்கள் வரம்பு மீறிய போக்கினால் பொய்யெனத் தூற்றினார்கள். 91:12 அவர்களில் மிகவும் கேடுகெட்ட ஒருவன் எழுந்து வந்தபோது 91:13 அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் கூறினார்: “எச்சரிக்கை! அல்லாஹ்வின் ஒட்டகம் (அதன் மீது கை வைக்காதீர்கள்;) அது நீர் அருந்துவதைத் (தடுக்காதீர்கள்).” 91:14 ஆனால், அம்மக்கள் அவருடைய பேச்சைப் பொய்யெனத் தூற்றினார்கள். மேலும், ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள். இறுதியில், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பாவத்தின் விளைவாக கடுமையானதொரு ஆபத்தை இறக்கி, அனைவரையும் அழித்து, மண்ணோடு மண்ணாக்கி விட்டான். 91:15 மேலும், (தனது இந்தச் செயலின்) எந்தவொரு தீயவிளைவு பற்றியும் அவனுக்கு அச்சம் இல்லை.
அத்தியாயம்  அல்லைல்  92 : 1-21 / 21
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
92:1 இரவின் மீது சத்தியமாக, அது மூடி மறைத்துக் கொள்ளும்போது! 92:2 பகலின் மீது சத்தியமாக, அது ஒளிரும் போது! 92:3 மேலும், ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக! 92:4 உண்மையில் உங்களுடைய முயற்சிகள் பலதரப்பட்டவையாக இருக்கின்றன. 92:5 எனவே, எவர் (இறைவழியில்) பொருளை வழங்கினாரோ மேலும் (இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து) விலகியிருந்தாரோ 92:6 மேலும், நன்மையை உண்மையென ஏற்றுக்கொண்டாரோ, 92:7 அவருக்கு இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம். 92:8 எவர் கஞ்சத்தனம் செய்கின்றாரோ மேலும் (தன் இறைவனைப்) பொருட்படுத்தாமல் நடந்தாரோ; 92:9 இன்னும் நன்மையைப் பொய்யென நிராகரித்தாரோ 92:10 அவருக்கு கடினமான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம். 92:11 அவனுடைய செல்வம் அவன் அழிந்து விடும்போது அவனுக்கு என்ன பயன் அளிக்கப்போகின்றது? 92:12 திண்ணமாக, வழிகாட்டுவது எமது பொறுப்பேயாகும். 92:13 மேலும், உண்மையில் மறுமை மற்றும் இம்மை இரண்டும் நமக்கே உரியனவாகும். 92:14 எனவே, கொழுந்துவிட்டெரியும் நெருப்பைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கை செய்துவிட்டேன். 92:15 ஆனால், அதில் யாரும் எரிந்துபோக மாட்டார்கள், பெரும் துர்ப்பாக்கியவானைத் தவிர! 92:16 அவர்கள் பொய்யென மறுத்தார்கள், புறக்கணித்தார்கள். 92:17 மேலும், அதனைவிட்டுத் தொலைவில் வைக்கப்படுவார், மிகுந்த இறையச்சம் உடையவர். 92:18 அவரோ தூய நிலை அடையும் பொருட்டு தம் செல்வத்தை வழங்குகின்றார் 92:19 கைமாறு செய்யும் அளவுக்கு எவருக்கும் அவர் நன்றிக்கடன் படவில்லை. 92:20 ஆனாலும், அவர் உயர்வுமிக்க தம் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே இதைச் செய்கின்றார். 92:21 மேலும், (அவரைக் குறித்து) அவசியம் அவன் திருப்தியடைவான்.
அத்தியாயம்  அள்ளுஹா  93 : 1-11 / 11
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
93:1 ஒளிமிக்க பகலின் மீது சத்தியமாக! 93:2 மேலும், இரவின் மீதும் சத்தியமாக, அது அமைதியாக வந்தடையும் போது! 93:3 (நபியே!) உம் இறைவன் உம்மை ஒருபோதும் கைவிடவில்லை; கோபம் கொள்ளவும் இல்லை. 93:4 மேலும், திண்ணமாக, பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தைவிட உமக்கு மிகவும் சிறந்ததாயிருக்கும். 93:5 மேலும், விரைவில் உம் இறைவன் நீர் திருப்தியடைந்து விடுமளவு உமக்கு வழங்குவான். 93:6 அவன் உம்மை அநாதையாய்க் காணவில்லையா? பிறகு, புகலிடம் தந்தான் அல்லவா? 93:7 மேலும், அவன் உம்மை வழியறியாதவராய்க் கண்டான்; பிறகு, நேர்வழி காண்பித்தான். 93:8 மேலும், அவன் உம்மை ஏழையாய்க் கண்டான்; பிறகு செல்வராய் ஆக்கினான். 93:9 ஆகவே, நீர் அநாதைகளுடன் கடுமையாய் நடந்து கொள்ளாதீர். 93:10 மேலும், யாசகம் கேட்பவரை விரட்டாதீர். 93:11 மேலும், உம் இறைவனின் அருட்கொடைபற்றி எடுத்துரைப்பீர்.
அத்தியாயம்  அலம் நஷ்ரஹ்  94 : 1-8 / 8
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
94:1 (நபியே!) நாம் உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா? 94:2 மேலும், உம்முடைய சுமையை உம்மைவிட்டு நாம் இறக்கிவைத்தோம். 94:3 (அது) உம்முடைய முதுகை முறித்துக் கொண்டிருந்தது. 94:4 மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம். 94:5 உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது. 94:6 திண்ணமாக, சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது. 94:7 எனவே, நீர் ஓய்வு பெறும்போது வணக்க வழிபாட்டின் கடும் உழைப்பில் முனைப்புடன் ஈடுபடுவீராக! 94:8 மேலும், உம் இறைவனின் பக்கமே ஆர்வம் கொள்வீராக!
அத்தியாயம்  அத்தீன்  95 : 1-8 / 8
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
95:1 அத்தியின் மீதும் ஒலிவத்தின் மீதும் சத்தியமாக! 95:2 சினாய் மலையின் மீதும் 95:3 மேலும், அமைதியான இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக! 95:4 திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம். 95:5 பிறகு, நேர்மாறாக, தாழ்ந்தவர்களில் மிகவும் தாழ்ந்தவனாக அவனை ஆக்கினோம். 95:6 ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தவர்களைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத நற்கூலி இருக்கின்றது. 95:7 எனவே (நபியே!) இதன் பிறகும் நற்கூலிதண்டனை வழங்கப்படும் விஷயத்தில் உம்மை யாரால் பொய்யர் எனத் தூற்ற முடியும்? 95:8 அல்லாஹ் ஆட்சியாளர்கள் அனைவரிலும் மாபெரும் ஆட்சியாளன் இல்லையா?
அத்தியாயம்  அல் அலக்  96 : 1-19 / 19
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
96:1 ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! 96:2 (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! 96:3 மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், 96:4 அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; 96:5 மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். 96:6 அவ்வாறன்று! மனிதன் வரம்பு மீறி நடக்கின்றான்; 96:7 அவன் தன்னைத் தன்னிறைவுடையவன் என்று கருதிக் கொண்டதால்! 96:8 ஆனால், திரும்பிச் செல்வது திண்ணமாக, உம் இறைவனின் பக்கமே ஆகும். 96:9 தடுப்பவனை நீர் பார்த்தீரா? 96:10 அடியார் ஒருவர் தொழுது கொண்டிருக்கையில் அவரைத் தடுப்பவனை நீர் பார்த்தீரா? 96:11 நீர் என்ன நினைக்கிறீர்? அவர் நேர்வழியில் நடந்தாலுமா? 96:12 அல்லது தூய்மையை மேற்கொள்ளும்படி ஏவினாலுமா? 96:13 (தடுக்கக்கூடிய இந்த மனிதன் சத்தியத்தைப்) பொய்யென்று தூற்றினால் மேலும், புறக்கணிக்கவும் செய்தால் (அவனைப் பற்றி) நீர் என்ன கருதுகின்றீர்? 96:14 அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது அவனுக்குத் தெரியாதா? 96:15 அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், திண்ணமாக, அவனது நெற்றி முடியைப் பிடித்து இழுப்போம், 96:16 கடும் தவறிழைத்த பொய்யுரைத்த அந்த நெற்றியை! 96:17 அவன் தன் (ஆதரவாளர்களின்) கூட்டத்தை அழைத்துக் கொள்ளட்டும்; 96:18 தண்டனை தரும் வானவர்களை நாமும் அழைத்துக் கொள்வோம். 96:19 ஒருபோதும் அவ்வாறில்லை! அவனுக்குக் கீழ்ப்படியாதீர். மேலும், சிரம் பணிவீராக! மேலும் (உம் இறைவனின்) நெருக்கத்தைப் பெறுவீராக!
அத்தியாயம்  அல்கத்ர்  97 : 1-5 / 5
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
97:1 திண்ணமாக, நாம் இதனை (குர்ஆனை) மாட் சிமை மிக்க இரவில் இறக்கி வைத்தோம். 97:2 மாட்சிமை மிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன? 97:3 மாட்சிமை மிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்! 97:4 அதில் வானவர்களும் ரூஹும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகின்றார்கள். 97:5 அந்த இரவு முழுவதும் நலம் பொருந்தியதாகத் திகழ்கின்றது, வைகறை உதயமாகும் வரை!
அத்தியாயம்  அல் பய்யினா  98 : 1-8 / 8
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
98:1 வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள இறைநிராகரிப்பாளர்கள் தங்களுடைய நிராகரிப்பிலிருந்து விலகிவிடக்கூடியவராய் இருக்கவில்லை, தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை! 98:2 தூய்மையான வேத நூல்களை ஓதிக் காண்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து வரும்வரை! 98:3 அவற்றில் முற்றிலும் நேர்மையான நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டிருக்கும். 98:4 முன்பு வேதம் அருளப்பட்டவர்கள் பிளவுபட்டுப் போனது (நேர்வழி குறித்து) தெளிவான சான்று அவர்களிடம் வந்த பிறகுதான்! 98:5 மேலும், தங்கள் தீனை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாகவும், முற்றிலும் ஒருமனப்பட்டவர்களாய் அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டும் என்பதையும், தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஜகாத்தும் கொடுக்க வேண்டும் என்பதையும் தவிர வேறு எந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை. இதுதான் மிகவும் சரியான, நேரிய தீன் ஆகும். 98:6 வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள நிராகரிப்பாளர்கள் திண்ணமாக, நரக நெருப்பில்தான் வீழ்வார்கள்; அதில் நிரந்தரமாய் வீழ்ந்து கிடப்பார்கள். அவர்கள்தாம் படைப்பினங்களில் மிகக் கீழ்த்தரமானவர்கள். 98:7 எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள். 98:8 அவர்களின் கூலி அவர்களுடைய அதிபதியிடம் நிலையாகத் தங்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியுற்றார்கள். இவை அனைத்தும் தம் இறைவனை அஞ்சக்கூடிய மனிதருக்குரியவையாகும்.
அத்தியாயம்  அஸ்ஸில்ஸால்  99 : 1-8 / 8
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
99:1 பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது 99:2 மேலும் பூமி தன்னுள்ளிருக்கும் சுமைகள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்து விடும்போது, 99:3 மேலும், “அதற்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று மனிதன் கேட்கும்போது 99:4 அந்நாளில் அது தன் மீது நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும். 99:5 ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு எடுத்துரைக்கும்படி) ஆணையிட்டிருப்பான். 99:6 அன்று மக்கள் பல்வேறு நிலைமைகளில் திரும்புவார்கள், தங்களுடைய செயல்கள் தங்களுக்குக் காண்பிக்கப்படுவதற்காக! 99:7 பிறகு, எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனைக் கண்டு கொள்வான். 99:8 மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனைக் கண்டுகொள்வான்.
அத்தியாயம்  அல் ஆதியாத்  100 : 1-11 / 11
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
100:1 மூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகின்றவை (குதிரைகள்) மீது சத்தியமாக! 100:2 பின்னர், குளம்புகளிலிருந்து தீப்பொறியை எழுப்புகின்ற 100:3 மேலும், அதிகாலையில் பாய்ந்து தாக்குதல் நடத்தி, 100:4 அதனால் புழுதியினைக் கிளப்பி 100:5 மேலும், ஏதேனும் கூட்டத்தின் நடுவில் நுழைந்துவிடுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக! 100:6 உண்மையில் மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான். 100:7 அவனே அதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான் 100:8 மேலும், அவன் செல்வத்தின் மீது அளவு கடந்து மோகம் கொண்டிருக்கின்றான். 100:9 மண்ணறைகளில் (அடக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிக்கொணரப்படும் நேரத்தையும்; 100:10 மேலும், நெஞ்சங்களில் (மறைக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படும் நேரத்தையும் அவன் அறியமாட்டானா? 100:11 திண்ணமாக, அந்நாளில் அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி நன்கறிந்தவனாக இருப்பான்.
அத்தியாயம்  அல் காரிஆ  101 : 1-11 / 11
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
101:1 பயங்கரமான நிகழ்ச்சி! 101:2 அந்த பயங்கரமான நிகழ்ச்சி என்ன? 101:3 அந்தப் பயங்கரமான நிகழ்ச்சி எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன? 101:4 அந்நாளில் மக்கள், சிதறிக் கிடக்கும் ஈசல்கள் போலவும் 101:5 மேலும், மலைகள் கடையப்பட்ட வண்ண வண்ணக் கம்பளியைப் போலவும் ஆகிவிடும்! 101:6 பிறகு, எவருடைய எடைத்தட்டுகள் கனத்திருக்குமோ 101:7 அவர் மனத்திற்குகந்த வாழ்வைப் பெறுவார். 101:8 மேலும், எவருடைய எடைத்தட்டுகள் இலேசாக இருக்குமோ 101:9 அவருடைய தங்குமிடம் ஆழமான படுகுழிதான்! 101:10 அது என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன? 101:11 கொழுந்து விட்டெரியும் நெருப்பு!
அத்தியாயம்  அத்தகாஸுர்  102 : 1-8 / 8
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
102:1 பிறரைவிடக் கூடுதலாக உலக வசதிகளைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது. 102:2 நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்). 102:3 அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும். 102:4 இன்னும் (கேட்டுக் கொள்ளுங்கள்:) அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும் 102:5 (இந்த நடத்தையின் இறுதி முடிவினை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால் (உங்கள் நடத்தை இப்படி இருந்திருக்காது). 102:6 திண்ணமாக, நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள். 102:7 இன்னும் (கேட்டுக் கொள்ளுங்கள்) திண்ணமாக நீங்கள் அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகின்றீர்கள் 102:8 பிறகு அந்நாளில் இந்த அருட்கொடைகளைப் பற்றி கட்டாயம் நீங்கள் வினவப் படத்தான் போகின்றீர்கள்.
அத்தியாயம்  அல் அஸ்ர்  103 : 1-3 / 3
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
103:1 காலத்தின் மீது சத்தியமாக! 103:2 மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். 103:3 ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர!
அத்தியாயம்  அல்ஹுமஸா  104 : 1-9 / 9
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
104:1 (மக்களை நேருக்கு நேர்) இழித்துரைத்துக் கொண்டும், (முதுகுக்குப் பின்) குறை கூறிக் கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான். 104:2 அவன் பொருளைச் சேகரிக்கின்றான். 104:3 மேலும் அதனை எண்ணி எண்ணி வைக்கின்றான். அவன் கருதுகின்றான், தன்னுடைய பொருள் தன்னிடம் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று! 104:4 அவ்வாறன்று! சிதைத்துச் சின்னாபின்னமாக்குகின்ற ஓரிடத்தில் அவன் வீசியெறியப்படுவான். 104:5 மேலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் அந்த இடம் எதுவென்று உமக்குத் தெரியுமா என்ன? 104:6 அது அல்லாஹ்வின் நெருப்பு; அதி உக்கிரமாக மூட்டப்பட்டிருக்கின்றது; 104:7 இதயங்கள் வரைச் சென்று பரவுகின்றது; 104:8 நிச்சயமாக அதனால் அவர்கள் சூழப்பட்டு மூடப்படுவார்கள். 104:9 உயர உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்பட்ட நிலையில்).
அத்தியாயம்  அல்ஃபீல்  105 : 1-5 / 5
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
105:1 யானைப் படையினருடன் உம் இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா? 105:2 அவர்களின் சதித்திட்டத்தை அவன் வீணடித்து விடவில்லையா? 105:3 மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அவன் அனுப்பினான். 105:4 அவை அவர்களின் மீது சுடப்பட்ட களிமண் கற்களை எறிந்து கொண்டிருந்தன. 105:5 பிறகு (கால்நடைகளால்) மென்று தின்னப்பட்ட வைக்கோல் போன்று அவர்களை ஆக்கிவிட்டான்.
அத்தியாயம்  குறைஷ்  106 : 1-4 / 4
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
106:1 குறைஷிகள் நன்கு பழக்கப்பட்டுவிட்டார்கள். 106:2 (அதாவது) குளிர்கால மற்றும் கோடைகாலப் பயணங்களில் நன்கு பழக்கப்பட்டு விட்டார்கள். 106:3 எனவே அவர்கள் இந்த இல்லத்தின் அதிபதியை அடிபணிந்து வணங்கட்டும். 106:4 அவனோ அவர்களைப் பசியிலிருந்து காப்பாற்றி உண்ணக் கொடுத்தான். மேலும், அச்சத்திலிருந்து அவர்களை மீட்டு அமைதியை வழங்கினான்.
அத்தியாயம்  அல்மாவூன்  107 : 1-7 / 7
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
107:1 மறுமையில் நற்கூலி தண்டனை கொடுக் கப்படுவதைப் பொய்யென்று கூறுபவனை நீர் பார்த்திருக்கிறீரா? 107:2 அவன்தான் அநாதையை மிரட்டி விரட்டுகின்றான். 107:3 மேலும், வறியவரின் உணவை அளிக்கும்படித் தூண்டுவதில்லை. 107:4 மேலும் கேடுதான், தொழுகையாளிகளுக்கு! 107:5 அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள் 107:6 அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள். 107:7 மேலும், சாதாரணத் தேவைகளுக்கான பொருள்களைக் கூட (மக்களுக்குக்) கொடுத்துதவுவதைத் தடுக்கின்றார்கள்.
அத்தியாயம்  அல் கவ்ஸர்  108 : 1-3 / 3
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
108:1 (நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம். 108:2 எனவே, நீர் உம் இறைவனுக்காகவே தொழுவீராக! பலி (குர்பானி)யும் கொடுப்பீராக! 108:3 திண்ணமாக உம் பகைவன்தான் வேரறுந்தவன் ஆவான்.
அத்தியாயம்  அல் காஃபிரூன்  109 : 1-6 / 6
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
109:1 கூறிவிடுவீராக! “ஓ! நிராகரிப்பாளர்களே! 109:2 நீங்கள் எவற்றை வணங்குகிறீர்களோ அவற்றை நான் வணங்குவதில்லை. 109:3 நான் யாரை வணங்குகின்றேனோ அவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். 109:4 மேலும், நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவன் அல்லன். 109:5 நான் யாரை வணங்குகின்றேனோ அவனை நீங்கள் வணங்குகின்றவர்கள் அல்லர். 109:6 உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.
அத்தியாயம்  அந் நஸ்ர்  110 : 1-3 / 3
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
110:1 அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வந்து விடும்போது 110:2 மேலும் (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் திரள்திரளாக நுழைவதை நீர் காணும்போது 110:3 நீர் உம் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதிப்பீராக! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன், பாவமன்னிப்புக் கோரிக்கையை பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான்.
அத்தியாயம்  அல் லஹப்  111 : 1-5 / 5
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
111:1 அபூலஹபின் கைகள் முறிந்துவிட்டன. மேலும், அவன் நாசமாகி விட்டான். 111:2 அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை. 111:3 விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் போடப்படுவான். 111:4 அவனுடன் அவனுடைய மனைவியும் அவளோ (இங்கும் அங்கும்) புறம்பேசித் திரிபவள். 111:5 அவளது கழுத்தில் முறுக்கேற்றப்பட்ட கயிறு இருக்கும்!
அத்தியாயம்  அல் இக்லாஸ்  112 : 1-4 / 4
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
112:1 கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன், 112:2 அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! 112:3 அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை. 112:4 மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.
அத்தியாயம்  அல் ஃபலக்  113 : 1-5 / 5
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
113:1 கூறுவீராக! வைகறையின் அதிபதியிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்; 113:2 அவன் படைத்துள்ள ஒவ்வொன்றின் தீங்கிலிருந்தும்! 113:3 இரவுடைய இருளின் தீங்கிலிருந்தும்! அந்த இருள் படரும்போது! 113:4 முடிச்சுகளில் ஊதுகின்ற (ஆண்) பெண்களின் தீங்கிலிருந்தும் 113:5 மேலும், பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்தும், அவர்கள் பொறாமை கொள்ளும்போது (பாதுகாப்புத் தேடுகின்றேன்).
அத்தியாயம்  அந் நாஸ்  114 : 1-6 / 6
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
114:1 கூறுவீராக! மக்களின் அதிபதியிடம் நான் பாதுகாப்பு தேடுகின்றேன்; 114:2 மக்களின் மன்னனிடம் 114:3 மக்களின் உண்மையான இறைவனிடம் (நான் பாதுகாப்பு தேடுகின்றேன்;) 114:4 திரும்பத் திரும்ப வந்து ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்து. 114:5 அவன் எத்தகையவன் எனில், மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துகின்றான். 114:6 அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாயினும் மனித இனத்தைச் சேர்ந்தவனாயினும் சரியே.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)