அத்தியாயம்  அல் ஜின்னு  72 : 1-28 / 28
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
72:1 (நபியே!) நீர் கூறும்: எனக்கு இவ்வாறு வஹி* அனுப்பப்பட்டிருக்கின்றது: ஜின்களில் ஒரு குழுவினர் கவனமாகக் கேட்டனர். பின்னர் (தம் சமூக மக்களிடம் சென்று) கூறினர்: “நாங்கள் மிகவும் அற்புதமானதொரு குர்ஆனைச் செவியுற்றோம். 72:2 அது நேரிய பாதையின் பக்கம் வழிகாட்டுகின்றது. ஆகையால், நாங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டோம். மேலும், நாங்கள் எங்களுடைய இறைவனுடன் எவரையும் இணையாக்கமாட்டோம். 72:3 மேலும், எங்களுடைய இறைவனின் மாட்சிமை மிகவும் உயர்ந்தது; உன்னதமானது. அவன் எவரையும் மனைவியாகவோ, மகனாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. 72:4 மேலும், நம்மிலுள்ள அறிவிலிகள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்குப் புறம்பான பல விஷயங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். 72:5 மேலும், அல்லாஹ்வின் விஷயத்தில் பொய் சொல்ல முடியாது என்று நாங்கள் கருதியிருந்தோம். 72:6 மேலும், மனிதர்களில் சிலர் சில ஜின்களிடம் பாதுகாவல் கோரக் கூடியவர்களாய் இருந்தனர். இவ்வாறு செய்து அவர்கள் ஜின்களின் ஆணவத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டார்கள். 72:7 மேலும், மனிதர்களும் நீங்கள் நினைத்திருந்தது போன்றுதான் நினைத்திருந்தார்கள்; 72:8 அல்லாஹ் எவரையும் தூதராக அனுப்பமாட்டான் என்று! மேலும், நாங்கள் வானத்தைத் துளாவிப் பார்த்தோம். 72:9 அது பலமான காவலர்களால் நிரப்பப்பட்டிருப்பதையும் எரி நட்சத்திரங்கள் பொழிந்து கொண்டிருப்பதையும் கண்டோம். மேலும், இதற்கு முன் ஒட்டுக் கேட்பதற்கு வானத்தில் அமர்விடங்கள் நமக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது யாரேனும் ஒட்டுக் கேட்க முயன்றால் ஓர் எரிநட்சத்திரம் அவருக்காகக் குறி வைத்துக் காத்திருப்பதைக் காண்கின்றார்.” 72:10 மேலும், (கூறினார்:) “பூமியிலுள்ளவர்களுக்கு ஏதேனும் தீமை நாடப்பட்டுள்ளதா அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நேர்வழி காட்ட விரும்புகின்றானா என்பதை நாம் அறியோம். 72:11 மேலும், நம்மில் சில நல்லவர்களும் இருக்கின்றனர். அவ்வாறு அல்லாதோரும் இன்னும் சிலர் நம்மில் இருக்கின்றனர். 72:12 நாம் பல வழிகளில் பிளவுண்டு கிடக்கின்றோம். மேலும், நம்மால் பூமியில் அல்லாஹ்வை வென்றிட முடியாது என்பதையும், எங்கேனும் ஓடிச் சென்று அவனைத் தோல்வியுறச் செய்திட முடியாது என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம். 72:13 மேலும், நேர்வழி காட்டும் அறிவுரையை நாங்கள் கேள்விப்பட்டபோது அதன் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இனி, எவரேனும் தன்னுடைய இறைவன் மீது நம்பிக்கை கொள்வாராயின் அவருக்கு இழப்பு அல்லது அநீதி பற்றி எந்த அச்சமும் இருக்காது. 72:14 மேலும், நம்மில் சிலர் முஸ்லிம்களாயும் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர்களாயும்) வேறு சிலர் சத்தியத்திலிருந்து பிறழ்ந்தவர்களாயும் உள்ளனர். எவர்கள் இஸ்லாத்தை (இறைவனுக்குக் கீழ்ப்படியும் மார்க்கத்தை) தேர்ந்தெடுத்துக் கொண்டார்களோ அவர்கள் ஈடேற்றத்தின் பாதையை தேடிப் பெற்றுக் கொண்டனர். 72:15 ஆனால், எவர்கள் சத்தியத்திலிருந்து விலகிக் கொண்டார்களோ, அவர்கள் நரகத்தின் எரிபொருள்களாய் ஆகிவிட்டார்கள்.” 72:16 மேலும், (நபியே! நீர் கூறும்: “இன்னும் எனக்கு வஹி அனுப்பப்பட்டிருப்பது என்னவெனில்) மக்கள் நேர்வழியில் நிலைகுலையாமல் இருந்திருந்தால் நாம் அவர்களுக்கு மழையை தாராளமாகப் பொழியச் செய்திருப்போம். 72:17 இந்த அருட்கொடையின் மூலம் அவர்களைச் சோதிப்பதற்காக! மேலும், எவரேனும் தன்னுடைய இறைவனின் அறிவுரையைப் புறக்கணித்தால் அவரை அவருடைய இறைவன் கடுமையான வேதனையில் ஆழ்த்தி விடுவான். 72:18 மேலும், மஸ்ஜித்கள் பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். எனவே, அங்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள்” 72:19 அல்லாஹ்வின் அடியார் அவனை அழைப்பதற்காக எழுந்து நின்றபோது மக்கள் அவர் மீது பாய முனைந்துவிட்டார்கள். 72:20 (நபியே!) நீர் கூறும்: “நான் என் இறைவனையே அழைக்கின்றேன். மேலும், அவனுடன் யாரையும் நான் இணையாக்குவதில்லை.” 72:21 கூறும்: “உங்களுக்கு ஏதேனும் தீமையோ, நன்மையோ செய்திடும் ஆற்றல் எனக்கில்லை.” 72:22 கூறும்: “அல்லாஹ்வின் பிடியிலிருந்து எவராலும் என்னைக் காப்பாற்ற முடியாது. மேலும், அவனைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் என்னால் பெற முடியாது. 72:23 அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அவனுடைய தூதுச் செய்திகளையும் சேர்ப்பித்து விடுவதைத் தவிர வேறு எந்தப் பணியும் எனக்கில்லை.” இனி, எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் திண்ணமாக அவருக்கு நரக நெருப்பு இருக்கின்றது. மேலும் இப்படிப்பட்டவர்கள் அதில் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். 72:24 இந்த மக்கள் தங்களுடைய நடத்தையைக் கைவிட மாட்டார்கள்; எதுவரையெனில், அவர்களுக்கு வாக்களிக்கப்படும் விஷயத்தை அவர்கள் நேரில் காணும் வரை! அப்போது, எவருடைய உதவியாளர்கள் பலவீனர்கள், எவருடைய கூட்டம் எண்ணிக்கையில் குறைவானது என்பதை அவசியம் அறிந்துகொள்வார்கள். 72:25 மேலும், கூறும்: “உங்களுக்கு வாக்களிக்கப்படும் விஷயம் அண்மையில் உள்ளதா அல்லது என் இறைவன் அதற்கென நீண்டதொரு காலத்தை நிர்ணயித்துள்ளானா என்பதை நான் அறியேன். 72:26 அவன் மறைவானவற்றை அறிந்தவன். தான் மறைவாக வைத்திருப்பவற்றை எவருக்கும் அறிவித்துக் கொடுப்பதில்லை. (அவற்றை அறிவித்துக் கொடுப்பதற்கென) 72:27 அவன் விரும்பிய தூதருக்கே தவிர! பிறகு, அவருக்கு முன்பும் பின்பும் பாதுகாவலரை நியமிக்கின்றான்; 72:28 அந்தத் தூதர்கள் தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளைச் சேர்ப்பித்துவிட்டார்கள் என்பதை அவன் அறிந்துகொள்வதற்காக! மேலும், அவன் அவர்களிடம் உள்ளவை அனைத்தையும் சூழ்ந்து அறிந்திருக்கின்றான். மேலும், ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக் கணக்கிட்டு வைத்துள்ளான்.
அத்தியாயம்  அல் முஸ்ஸம்மில்  73 : 1-20 / 20
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
73:1 போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே! 73:2 இரவில் எழுந்து தொழுவீராக; ஆனால் கொஞ்ச நேரம்! 73:3 அதாவது, பாதி இரவு அல்லது அதைவிடச் சற்று குறைவாகவோ 73:4 அல்லது கூடுதலாகவோ (தொழுவீராக!) மேலும், குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! 73:5 திண்ணமாக, நாம் உம் மீது கன மானதொரு வாக்கை இறக்கப் போகின்றோம். 73:6 உண்மையில், இரவில் எழுந்திருப்பது மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் (குர்ஆனை) நேர்த்தியாக ஓதுவதற்கு மிகவும் ஏற்றதாகவும் இருக்கின்றது. 73:7 பகல் நேரங்களிலோ உமக்கு நிறையப் பணிகள் உள்ளன. 73:8 உம் இறைவனின் பெயரை நினைவுகூர்ந்து கொண்டிருப்பீராக! மேலும், அனைத்தையும் விட்டு அவனுக்காகவே ஆகிவிடுவீராக! 73:9 அவன் கிழக்கு மேற்குத் திசைகளின் அதிபதி ஆவான். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, அவனையே உமக்குப் பொறுப்பேற்பவனாக (வகீல்) ஆக்கிக் கொள்வீராக! 73:10 மேலும், இம்மக்கள் எவற்றையெல்லாம் புனைந்துரைக்கின்றார்களோ அவற்றின் மீது பொறுமை கொள்வீராக! மேலும், கண்ணியமான முறையில் அவர்களை விட்டும் விலகிவிடுவீராக! 73:11 பொய்யென வாதிடுபவர்களான இந்த சுகவாசிகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுவீராக! மேலும், சிறிது காலத்திற்கு இவர்களை இப்படியே விட்டு வைப்பீராக. 73:12 நம்மிடம் (இவர்களுக்காகக்) கனத்த விலங்குகளும் கொழுந்துவிட்டெரியும் நெருப்பும், 73:13 தொண்டையில் சிக்கிக் கொள்ளும் உணவும், துன்புறுத்தும் வேதனையும் உள்ளன. 73:14 இது நடைபெறும் அந்நாளில் பூமியும் மலைகளும் நடுங்கும். மேலும், மலைகள் சரிந்து போகும்; மணற்குவியலைப் போன்றாகிவிடும். 73:15 திண்ணமாக, நாம் ஒரு தூதரை, உங்களின் மீது சான்று பகரக்கூடியவராக ஆக்கி உங்களிடம் அனுப்பினோம்; ஃபிர்அவ்னிடம் நாம் ஒரு தூதரை அனுப்பியது போன்று! 73:16 (பிறகு, பார்த்துக் கொள்ளுங்கள்:) ஃபிர்அவ்ன் அந்தத் தூதரின் பேச்சை ஏற்காதபோது, நாம் அவனை மிகவும் கடுமையாகப் பிடித்தோம். 73:17 நீங்கள் நிராகரித்து விட்டால் அந்த நாளில் எப்படித் தப்பித்துக் கொள்வீர்கள்? அதுவோ, குழந்தைகளை நரைக்கச் செய்துவிடும்; 73:18 அதன் கடினத்தால் வானம் வெடித் துத் தகர்ந்து போய்விடும். அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீர வேண்டியுள்ளது. 73:19 திண்ணமாக, இது ஓர் அறிவுரையாகும். எனவே, இனி விரும்புகிறவர் தன்னுடைய இறைவனின் பக்கம் செல்லும் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். 73:20 (நபியே!) உம் இறைவன் அறிந்திருக்கின்றான் ஏறத்தாழ இரவின் மூன்றில் இரண்டு பகுதி வரை, சில சமயம் பாதி இரவு வரை, சிலசமயம் அதன் மூன்றில் ஒரு பகுதி வரை, நீர் இறைவழிபாட்டில் கழிக்கின்றீர் என்பதையும், உம்முடைய தோழர்களிலும் ஒரு குழுவினர் இவ்வாறு செய்து வருகின்றார்கள் என்பதையும்! அல்லாஹ்தான் இரவையும் பகலையும் கணக்கிட்டு வைத்துள்ளான். அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட உங்களால் முடியாது என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால், அவன் உங்கள் மீது கருணை புரிந்தான். உங்களுக்கு குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக் கொள்ளுங்கள். உங்களில் சிலர் நோயாளிகளாய் இருப்பார்கள் என்பதும், வேறு சிலர் அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்கின்றார்கள் என்பதும், இன்னும் சிலர் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள் என்பதும் அவனுக்கு நன்கு தெரியும். எனவே, குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக் கொள்ளுங்கள்; தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அழகிய கடனை அளித்து வாருங்கள். நீங்கள் உங்களுக்காக முன்கூட்டியே செய்து அனுப்பும் நன்மைகள் எவையோ அவற்றை அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். அதுவே மிகச் சிறந்ததாகும். அதன் கூலியும் மகத்தானதாகும். அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
அத்தியாயம்  அல் முத்தஸ்ஸிர்  74 : 1-56 / 56
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
74:1 போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே! 74:2 எழுந்து எச்சரிக்கை செய்வீராக! 74:3 மேலும், உம் இறைவனின் மேன்மையைப் பிரகடனப்படுத்துவீராக! 74:4 மேலும், உம் ஆடைகளைத் தூய்மையாக்குவீராக! 74:5 அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக! 74:6 ஆதாயம் கருதி பிறருக்கு உதவி செய்யாதீர்; 74:7 உம் இறைவனுக்காகப் பொறுமையைக் கைக்கொள்வீராக! 74:8 எக்காளம் ஊதப்பட்டுவிட்டாலோ; 74:9 அந்த நாள் மிகக் கடுமையான நாளாய் இருக்கும். 74:10 நிராகரிப்பாளர்களுக்கு இலேசானதாய் இராது. 74:11 நான் தன்னந்தனியாகப் படைத்திருக்கின்ற அந்த மனிதனை என்னிடம் விட்டுவிடுவீராக! 74:12 அவனுக்கு நான் அதிகமான செல்வத்தை வழங்கினேன். 74:13 அவனுடனேயே இருக்கக்கூடிய புதல்வர்களையும் அளித்தேன். 74:14 மேலும், அவனுக்குத் தலைமை தாங்கும் வழிவகையையும் வகுத்துக் கொடுத்தேன். 74:15 இதன் பிறகு நான் அவனுக்கு இன்னும் அதிகமாக வழங்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகின்றான். 74:16 ஒருபோதுமில்லை! அவன் நம்முடைய வசனங்களுடன் பகைமை கொண்டவனாக இருக்கின்றான். 74:17 நான் அவனை அதிவிரைவில் வேதனையின் 74:18 சிகரத்திற்கு ஏறச் செய்வேன். அவன் சிந்தித்தான்; சில விஷயங்களைப் புனைந்துகூற முயன்றான்! 74:19 இறைவன் அவனை அழிக்கட்டும். அவன் எப்படிப்பட்ட விஷயங்களைப் புனைந்து கூற முற்பட்டுவிட்டான். 74:20 ஆம்! இறைவன் அவனை அழிக்கட்டும். எப்படிப்பட்ட விஷயங்களைப் புனைந்துரைக்க அவன் முற்பட்டு விட்டான்! 74:21 பிறகு (மக்களைப்) பார்த்தான்; 74:22 பிறகு புருவத்தை நெரித்தான். பின்னர், முகத்தைச் சுளித்தான்; 74:23 பிறகு, திரும்பிச் சென்றான்; மேலும், தற்பெருமை கொண்டான்; 74:24 இறுதியில் கூறினான்: “இது ஒன்றுமில்லை; ஒரு சூனியம்தான்: முன்பிருந்தே சொல்லப்பட்டு வருவதுதான்! 74:25 இது ஒரு மனித வாக்கேதான்!” 74:26 அதிவிரைவில் நான் அவனை நரகத்தில் வீசி எறிவேன். 74:27 மேலும், அந்த நரகம் என்னவென்று நீர் அறிவீரா, என்ன? 74:28 அது இருக்கவும் விடாது; விட்டும் வைக்காது! 74:29 அது சருமத்தைக் கரித்துவிடக்கூடியது. 74:30 பத்தொன்பது பேர் காவலர்களாய் அதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 74:31 நாம் வானவர்களையே இந்த நரகத்தின் காவலர்களாய் ஆக்கியுள்ளோம். அவர்களின் இந்த எண்ணிக்கையை நிராகரிப்பாளர்களுக்கு சோதனையாக ஆக்கியுள்ளோம். எதற்காகவெனில், வேதம் வழங்கப்பட்ட மக்களுக்கு உறுதி ஏற்படுவதற்காகவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காகவும், மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் எவ்வித ஐயத்திற்கும் ஆளாகக்கூடாது என்பதற்காகவும், மேலும், நெஞ்சில் நோய் உள்ளவர்களும், நிராகரிப்பாளர்களும் “அல்லாஹ் இந்த விநோதமான சொல்லால் என்ன நாடுகின்றான்?” என்று கேட்பதற்காகவும்தான்! இவ்வாறு அல்லாஹ் தான் நாடுபவர்களை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றான். மேலும், தான் நாடுபவர்களுக்கு நேர்வழியை அளிக்கின்றான். மேலும், உம் இறைவனின் படைகளை அவனைத் தவிர வேறெவரும் அறிந்திட மாட்டார் நரகத்தைப் பற்றிய இந்த விவரம் எடுத்துரைக்கப்பட்டதன் நோக்கம், மக்களுக்கு இதன் மூலம் ஓர் அறிவுரை கிடைக்கட்டும் என்பதே அன்றி வேறில்லை. 74:32 ஒருபோதுமில்லை! சந்திரன் மீது சத்தியமாக! 74:33 இரவின் மீதும் சத்தியமாக, அது திரும்பிச் செல்லும்போது! 74:34 விடியற்காலையின் மீது சத்தியமாக, அது பிரகாசமடையும்போது! 74:35 இந்த நரகம் மிகப்பெரியவற்றுள் ஒன்றாகும். 74:36 அது மனிதர்களை அச்சுறுத்தக்கூடியதாகும்; 74:37 உங்களில் முன்னேறிச் செல்வதற்கோ பின்தங்கி விடுவதற்கோ விரும்பும் ஒவ்வொரு மனிதரையும் அச்சுறுத்தக் கூடியதாகும். 74:38 ஒவ்வொரு மனிதனும் தன் சம்பாத்தியத்திற்குப் பகரமாக பிணையாக இருக்கின்றான்; 74:39 வலப்பக்கத்தாரைத் தவிர! 74:40 அவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள். 74:41 அவர்கள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள்: 74:42 “உங்களை நரகத்திற்குக் கொண்டு வந்தது எது?” 74:43 அதற்கு அவர்கள் கூறுவார்கள்: “தொழக்கூடியவர்களில் நாங்கள் இருக்கவில்லை. 74:44 நாங்கள் ஏழைகளுக்கு உணவு அளிக்கவில்லை. 74:45 மேலும், சத்தியத்திற்கெதிராகப் பேசுகிறவர்களுடன் நாங்களும் சேர்ந்து அதில் ஈடுபட்டோம். 74:46 மேலும், கூலி கொடுக்கும் நாளினைப் பொய்யென்று கூறி வந்தோம்; 74:47 அந்த உறுதியான விஷயம் எங்களை வந்தடையும் வரை!” 74:48 அந்நேரத்தில் பரிந்துரை செய்வோரின் பரிந்துரை எதுவும் அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது. 74:49 இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் இந்த அறிவுரையைப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்களே! 74:50 மிரண்டு விரண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல 74:51 அதுவும் சிங்கத்தைக் கண்டு மிரண்டு (விரண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல இருக்கின்றனர்); 74:52 அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய பெயருக்குத் திறந்த மடல் அனுப்பப்பட வேண்டும் என்று விரும்புகின்றார்கள். 74:53 ஒருபோதுமில்லை! உண்மை யாதெனில், இவர்கள் மறுமையைக் குறித்துப் பயப்படுவதில்லை. 74:54 ஒருபோதுமில்லை! இது ஓர் அறிவுரையே ஆகும். 74:55 இனி எவர் விரும்புகின்றாரோ அவர் இதிலிருந்து படிப்பினை பெற்றுக்கொள்ளட்டும். 74:56 இவர்கள் எந்தப் படிப்பினையும் பெறமாட்டார்கள்; அல்லாஹ் அதை நாடினாலே தவிர! அஞ்சப்படுவதற்குத் தகுதியுடையவன் அவன் ஒருவனே! தனக்கு அஞ்சுபவர்களை மன்னிப்பதற்கு அவனே தகுதியுடையவனாக இருக்கின்றான்.
அத்தியாயம்  அல் கியாமா  75 : 1-40 / 40
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
75:1 இல்லை! நான் மறுமைநாளின் மீது சத்தியம் செய்கின்றேன். 75:2 இல்லவே இல்லை; இடித்துரைக்கும் மனத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன். 75:3 அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்றுதிரட்ட முடியாது என்று மனிதன் கருதிக் கொண்டிருக்கின்றானா? 75:4 ஏன் முடியாது? நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக்கூட மிகத் துல்லியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம். 75:5 ஆனால், மனிதன் எதிர்காலத்திலும் தீமைகளைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகின்றான். 75:6 “அந்த மறுமைநாள் எப்போது வரும்?” என்று அவன் கேட்கின்றான். 75:7 பிறகு, பார்வை நிலைகுத்தி விடும்போது, 75:8 மேலும், சந்திரன் ஒளி குன்றிப் போகும்போது, 75:9 மேலும் சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணைக்கப்படும்போது; 75:10 அந்நாளில் இதே மனிதன் “நான் எங்கே சென்று ஓடி ஒளிவது?” என்று கேட்பான். 75:11 ஒருபோதுமில்லை! அங்கு எந்தப் புகலிடமும் இருக்காது. 75:12 அந்த நாளில் உன் அதிபதியின் முன்பே சென்றடைய வேண்டியிருக்கும். 75:13 அந்த நாளில் மனிதனுக்கு, அவனுடைய முந்தைய, பிந்தைய செயல்கள் அனைத்தும் எடுத்துக் காண்பிக்கப்படும். 75:14 ஏன், மனிதன் தன்னைப் பற்றி நன்கு அறிந்தவனாக இருப்பான்; 75:15 அவன் எவ்வளவுதான் சாக்கு போக்குகளைக் கூறினாலும் சரியே! 75:16 (நபியே!) இந்த வஹியை* அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்! 75:17 அதை நினைவில் நிறுத்தச் செய்வதும், ஓதும்படிச் செய்வதும் நமது பொறுப்பாகும்; 75:18 ஆகையால் நாம் இதனை ஓதிக் காட்டும்போது அவ்வாறு ஓதிக்காட்டுவதை நீர் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கவும். 75:19 பின்னர், இதன் கருத்தை விளக்குவதும் நமது பொறுப்பே ஆகும். 75:20 ஒருபோதுமில்லை. உண்மை யாதெனில், நீங்கள் உடனடியாகக் கிடைக்கக் கூடியதை (அதாவது இம்மையை) நேசிக்கின்றீர்கள்; 75:21 மறுமையை விட்டுவிடுகின்றீர்கள். 75:22 அந் நாளில் சில முகங்கள் பொலிவுடன் விளங்கும்; 75:23 தம்முடைய அதிபதியைப் பார்த்த வண்ணமிருக்கும். 75:24 வேறுசில முகங்கள் துயரமடைந்திருக்கும். 75:25 மேலும், இடுப்பை முறிக்கும் அனுபவங்கள் அவற்றிற்கு ஏற்படப்போகின்றன என்று புரிந்து கொண்டிருக்கும். 75:26 ஒருபோதுமில்லை! உயிர் தொண்டை வரை எட்டும்போது, 75:27 மேலும், “மந்திரித்து ஊதுபவர் எவரேனும் உண்டா?” என்று கேட்கப்படும்போது, 75:28 மேலும் இது உலகைவிட்டுப் பிரியும் நேரம் என்று மனிதன் புரிந்துகொள்ளும் போது, 75:29 கெண்டைக்கால், கெண்டைக்காலுடன் பின்னிப் பிணையும் போது, 75:30 அந்நாளில்தான் உன் அதிபதியின் பக்கம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். 75:31 ஆனால், அவன் உண்மையென ஏற்கவுமில்லை; தொழவுமில்லை. 75:32 மாறாகப் பொய்யென வாதிட்டான்; திரும்பிச் சென்றான். 75:33 பின்னர், ஆணவம் கொண்டு தன் குடும்பத்தாரிடம் சென்றுவிட்டான். 75:34 இந்த நடத்தை உனக்குத்தான் பொருத்தமானது; உனக்குத்தான் அழகானது! 75:35 ஆம்! இந்த நடத்தை உனக்குத்தான் பொருத்தமானது; உனக்குத்தான் அழகானது! 75:36 மனிதன் வெறுமனே விட்டுவிடப்படுவான் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றானா என்ன? 75:37 (கருவறையில்) செலுத்தப்படும் அற்பமான இந்திரியத் துளியாய் அவன் இருக்கவில்லையா? 75:38 பின்னர் அவன் ஓர் இரத்தக்கட்டியாக ஆனான். பின்னர், அல்லாஹ் அவனுடைய உடலைப் படைத்தான். அவனுடைய உறுப்புகளைப் பொருத்தமாக அமைத்தான். 75:39 பிறகு, அவனிலிருந்து ஆண்பெண் என இரு இனங்களை உருவாக்கினான். 75:40 இத்தகைய இறைவன் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் இல்லையா, என்ன?
அத்தியாயம்  அத்தஹ்ர்  76 : 1-31 / 31
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
76:1 மனிதன் மீது, அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே இல்லாதிருந்த ஒரு நீண்ட காலகட்டம் செல்லவில்லையா? 76:2 நாம் மனிதனை கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்; நாம் அவனைச் சோதிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், இந் நோக்கத்திற்காக நாம் அவனைச் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். 76:3 நாம் அவனுக்கு வழிகாட்டினோம். இனி, அவன் நன்றியுள்ளவனாகவும் இருக்கலாம் அல்லது நன்றி கொன்றவனாகவும் இருக்கலாம். 76:4 நன்றி கொல்பவர்களுக்குத் திண்ணமாக, நாம் சங்கிலிகளையும், விலங்குகளையும், கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும் தயார் செய்து வைத்திருக்கின்றோம். 76:5 நன்மக்கள் (சுவனத்தில்) கிண்ணங்களிலிருந்து கற்பூரம் கலந்திருக்கும் மது அருந்துவார்கள். 76:6 அது ஓடிக் கொண்டிருக்கும் ஊற்றின் நீராகும். இதன் நீரைக் கலந்தே அல்லாஹ்வின் அடியார்கள் மது அருந்துவார்கள். மேலும், தாம் விரும்பும் இடங்களுக்கு அதன் கிளைகளை எளிதாக ஏற்படுத்திக் கொள்வார்கள். 76:7 இவர்கள் எத்தகையவர்கள் என்றால், (இந்த உலகத்தில்) நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் துன்பங்கள் பரவக்கூடிய அந்த (மறுமை) நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள். 76:8 மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள். 76:9 (மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:) “நாங்கள் அல்லாஹ்வுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்கவில்லை. 76:10 நீண்ட, கடும் துன்பத்திற்குரிய ஒருநாளின் வேதனையைக் குறித்துதான் எங்கள் இறைவனிடம் நாங்கள் அஞ்சுகின்றோம்.” 76:11 எனவே, அல்லாஹ் அவர்களை அந்நாளின் தீங்கிலிருந்து காப்பாற்றிக் கொள்வான்; அவர்களுக்குப் பொலிவையும் மகிழ்வையும் அளிப்பான். 76:12 மேலும், அவர்களின் பொறுமைக்குப் பகரமாக சுவனத்தையும் பட்டாடையையும் அவர்களுக்கு வழங்குவான். 76:13 அங்கு அவர்கள் உயர்ந்த கட்டில்களில் தலையணைகள் வைத்து சாய்ந்திருப்பார்கள். வெயிலின் வெப்பமோ, கடும் குளிரோ அங்கு அவர்களைத் துன்புறுத்தாது. 76:14 சுவனத்தின் நிழல்கள் அவர்களின் மீது தாழ்ந்திருக்கும். மேலும், அதன் கனிகள் எப்போதும் (அவர்கள் விரும்பியபடி பறித்துக் கொள்ளும் அளவில்) அவர்களின் அருகில் இருக்கும். 76:15 வெள்ளிப் பாத்திரங்களும் கண்ணாடிக் குவளைகளும் அவர்களுக்கு முன்னிலையில் சுற்றிச் சுற்றி வருமாறு செய்யப்பட்டிருக்கும். 76:16 அந்தக் கண்ணாடிகளும் வெள்ளி வகையைச் சேர்ந்ததாக இருக்கும். அவற்றைச் (சுவனத்தின் ஊழியர்கள்) சரியான அளவில் நிரப்பியிருப்பார்கள். 76:17 அந்தக் கிண்ணங்களில் இருந்து இஞ்சிச்சுவை கலந்திருக்கும் பானங்கள் அவர்களுக்கு அங்கு குடிப்பதற்கு வழங்கப்படும். 76:18 அது சுவனத்தில் உள்ள ஒரு நீரூற்றாகும். அதன் பெயர் ‘ஸல்ஸபீல்.’ 76:19 மாறாத இளமையுடைய சிறுவர்கள் அவர்களுக்(கு ஊழியம் புரிவதற்)காக சுற்றித் திரிந்து கொண்டேயிருப்பார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் தெளித்துக் கிடக்கும் முத்துக்கள் என்று எண்ணுவீர். 76:20 அங்கு நீர் எந்தப் பக்கம் நோக்கினாலும் அருட்கொடைகள் நிறைந்திருப்பதையும், மாபெரும் பேரரசுக்கான அத்தனை சாதனங்களையும் காண்பீர். 76:21 மென்மையான மற்றும் கனமான பச்சைநிறப் பட்டாடைகள் அவர்களின் மீதிருக்கும். மேலும், அவர்களுக்கு வெள்ளிக்காப்புகள் அணிவிக்கப்படும். அவர்களின் அதிபதி அவர்களுக்குத் தூய்மை மிக்க பானத்தைப் புகட்டுவான். 76:22 திண்ணமாக, இதுதான் உங்களுக்குரிய கூலி. உங்களுடைய உழைப்பு மதிப்புக்குரியதாக ஆகிவிட்டிருக்கிறது. 76:23 (நபியே!) நாம்தாம் உம்மீது இந்தக் குர்ஆனை சிறிது சிறிதாக இறக்கியிருக்கின்றோம். 76:24 எனவே, நீர் உம் அதிபதியின் கட்டளைப்படி பொறுமையை மேற்கொள்ளும்! இவர்களில் தீயசெயல் செய்பவனுக்கோ சத்தியத்தை நிராகரிப்பவனுக்கோ இணங்கிப் போகாதீர்! 76:25 உம் அதிபதியின் பெயரைக் காலையிலும் மாலையிலும் நினைவுகூரும். 76:26 மேலும், இரவிலும் அவனது திருமுன் ஸஜ்தா செய்யும்! மேலும், இரவின் நீண்ட நேரங்களில் அவனைத் துதித்துக்கொண்டிரும். 76:27 இவர்கள் உடனடியாகக் கிடைக்கக்கூடியதை (இம்மையை) நேசிக்கிறார்கள். ஆனால், பிறகு வரவிருக்கும் கடினமான நாளினை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். 76:28 நாமே இவர்களைப் படைத்தோம். இவர்களுடைய எலும்பு மூட்டுக்களை உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால், இவர்களின் வடிவங்களை மாற்றி அமைத்துவிடுவோம். 76:29 இது ஒரு நல்லுரையாகும். இனி, விருப்பமுள்ளவர் தன்னுடைய அதிபதியின் பக்கம் செல்லும் வழியை மேற்கொள்ளட்டும். 76:30 மேலும், நீங்கள் விரும்புவதால் எதுவும் நடக்கப்போவதில்லை, அல்லாஹ் நாடினால் அன்றி! திண்ணமாக, அல்லாஹ் பேரறிவாளனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 76:31 தான் நாடுவோரை தனது கருணையில் நுழையச் செய்கின்றான். மேலும், கொடுமைக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றான்.
அத்தியாயம்  அல் முர்ஸலாத்  77 : 1-50 / 50
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
77:1 தொடர்ந்து அனுப்பப்படுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக; 77:2 பிறகு, புயல் வேகத்தில் வீசுகின்றவற்றின் மீது சத்தியமாக; 77:3 (மேகங்களை) பரப்புகின்றவற்றின் மீது சத்தியமாக; 77:4 பிறகு, அவற்றைத் துண்டு துண்டாகப் பிளக்கின்றவற்றின் மீது சத்தியமாக; 77:5 பிறகு, (இதயங்களில் இறைவனின்) நினைவை உண்டாக்குபவைமீது சத்தியமாக; 77:6 மன்னிப்புப் பெறுவதற்காக அல்லது அச்சமூட்டி எச்சரிப்பதற்காக! 77:7 எதைப் பற்றி உங்களிடம் வாக்களிக்கப்படுகின்றதோ, அது திண்ணமாக நிகழக்கூடியதே! 77:8 பிறகு, நட்சத்திரங்கள் ஒளியிழந்து போகும்பொழுது, 77:9 வானம் பிளக்கப்படும்பொழுது, 77:10 மலைகள் தூள்தூளாக் கப்படும்பொழுது, 77:11 இறைத்தூதர்கள் ஆஜராகும் நேரம் வரும் பொழுது (அது நிகழ்ந்துவிடும்). 77:12 எந்த நாளுக்காக இந்தக் காரியம் பிற்படுத்தப்பட்டுள்ளது? 77:13 தீர்ப்பு நாளுக்காகத் தான்! 77:14 அந்தத் தீர்ப்புநாள் என்னவென்று உமக்குத் தெரியுமா? 77:15 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:16 நாம் முன் சென்றோரை அழிக்கவில்லையா, என்ன? 77:17 பின்னர் அவர்களின் அடிச்சுவட்டில்தானே பின்வருவோரையும் நடக்கச் செய்வோம்! 77:18 குற்றவாளிகளிடம் நாம் இப்படித்தான் நடந்துகொள்கின்றோம். 77:19 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:20 என்ன, நாம் உங்களை அற்பமானதொரு நீரிலிருந்து படைக்கவில்லையா? 77:21 மேலும், அதனை பாதுகாப்பான ஓர் இடத்தில் வைக்கவில்லையா 77:22 ஒரு குறிப்பிட்ட காலம்வரை. 77:23 (இதோ பாருங்கள்!) நாம் இதற்கான ஆற்றலுடையவர்கள்தாம். ஆம்! நாம் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவர்கள்தாம்! 77:24 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:25 நாம் பூமியை ஒன்று திரட்டி வைக்கக்கூடியதாக ஆக்கவில்லையா? 77:26 உயிருள்ளவர்களையும் மரித்தவர்களையும். 77:27 மேலும், மிக உயர்ந்த மலைகளை அதில் நாம் நாட்டவில்லையா? உங்களுக்கு சுவையான நீரைப் புகட்டவும் இல்லையா, என்ன? 77:28 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:29 இப்போது செல்லுங்கள், நீங்கள் எதனைப் பொய்யென்று கூறிக் கொண்டிருந்தீர்களோ அதன் பக்கம்! 77:30 செல்லுங்கள், மூன்று கிளைகளையுடைய நிழலின் பக்கம்! 77:31 அது குளிரச் செய்யக்கூடியதுமன்று, தீச்சுவாலையிலிருந்து காப்பாற்றக்கூடியதுமன்று. 77:32 அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும். 77:33 அது (குமுறி எழும்போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போலிருக்கும். 77:34 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:35 இது எத்தகைய நாள் எனில், இதில் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்; 77:36 எந்தச் சாக்குப்போக்கும் கூறிட அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது. 77:37 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:38 இது தீர்ப்பளிக்கும் நாளாகும். நாம் உங்களையும் உங்களுக்கு முன் சென்றவர்களையும் ஒன்று திரட்டியுள்ளோம். 77:39 இப்போது உங்களால் ஏதேனும் சூழ்ச்சி செய்ய முடியுமெனில், எனக்கெதிராக சூழ்ச்சி செய்து பாருங்கள்! 77:40 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:41 இறையச்சம் கொண்டோர் (இன்று) நிழல்களிலும், ஊற்றுகளிலும் தங்கி வாழ்கிறார்கள். 77:42 மேலும், அவர்கள் விரும்பும் பழங்கள் (அவர்களுக்காக உள்ளன). 77:43 நன்கு உண்ணுங்கள்; பருகுங்கள்; நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பரிசாக! 77:44 நாம் நல்லவர்களுக்கு இத்தகைய கூலியைத்தான் வழங்குகின்றோம். 77:45 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:46 உண்ணுங்கள்; சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள், சில நாட்களுக்கு! உண்மையில் நீங்கள் குற்றவாளிகள்தாம். 77:47 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவு தான்! 77:48 “(அல்லாஹ்வின் திருமுன்) அடிபணிந்து விடுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அடிபணிவதில்லை. 77:49 பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்! 77:50 இனி, இதற்குப் பின் (இந்தக் குர்ஆனுக்குப்பின்) இவர்கள் எந்த வாக்கின் மீதுதான் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள்?
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)