அத்தியாயம்  அல்அன்ஆம்  6 : 111-165 / 165
6:111 நாம் வானவர்களை அவர்களிடம் இறக்கி வைத்தாலும், இறந்து போனவர்கள் வந்து அவர்களிடம் பேசினாலும் (உலகிலுள்ள) அனைத்தையும் அவர்களின் கண்ணெதிரே கொண்டு வந்து குவித்தாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ஆனால் (அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று) அல்லாஹ் நாடினாலே தவிர! ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறிவற்ற பேச்சுகளைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். 6:112 இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள ஷைத்தான்களைப் பகைவர்களாக்கினோம். அவர்களில் சிலர், வேறு சிலரிடம் ஏமாற்றும் நோக்குடன் அலங்காரமான சொற்களைக் கூறிக் கொண்டேயிருக்கின்றனர். உம்முடைய இறைவன் நாடியிருந்தால் அவர்கள் ஒருபோதும் இச்செயலைச் செய்திருக்க மாட்டார்கள். 6:113 எனவே நீர் அவர்களை விட்டுவிடும்! அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருக்கட்டும்! மேலும் (இச்செயல்களைச் செய்யுமாறு அவர்களை நாம் ஏன் விட்டு வைத்திருக்கின்றோம் என்றால்) மறுமையை நம்பாதவர்களின் மனம் இந்த அலங்காரமான (ஏமாற்று)ப் பேச்சின் பக்கம் சாய்ந்து அதனை அவர்கள் மனநிறைவு கொள்வதற்காகவும், மேலும் அவர்கள் சம்பாதிக்க விரும்பும் தீவினைகளை அவர்கள் சம்பாதிப்பதற்காகவும்தான்! 6:114 இவ்வாறிருக்க, அல்லாஹ்வை விடுத்து வேறொரு தீர்ப்பாளனையா நான் தேடுவேன்? அவனோ முழு விளக்கத்துடன் உங்களுக்கு வேதத்தை இறக்கியுள்ளான். மேலும் (உங்களுக்கு முன்னால்) எவர்களுக்கு நாம் வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இவ்வேதம் உம்முடைய இறைவனிடமிருந்து சத்தியத்துடன் இறங்கியிருக்கின்றது என்பதை நன்கறிவார்கள். எனவே சந்தேகம் கொள்வோரில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம். 6:115 உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும் நீதியும் முழுமையாக உள்ளன! அவனுடைய கட்டளைகளை மாற்றக்கூடியவர் எவருமிலர். மேலும், அவன் அனைத்தையும் செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 6:116 மேலும் (நபியே,) உலகில் வாழும் மக்களில் பெரும்பான்மை(யினரின் கூற்று)க்கு நீர் கீழ்ப்படிவீராயின் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் வழியிலிருந்து பிறழச் செய்து விடுவார்கள்! அவர்களோ வெறும் யூகங்களையே பின்பற்றுகின்றார்கள். மேலும், கற்பனைகளிலேயே மூழ்கிக் கிடக்கின்றார்கள். 6:117 நிச்சயமாக உம் இறைவன் தன் வழியிலிருந்து தவறியிருப்பவர் யார்; இன்னும் நேர்வழியில் செல்பவர்கள் யார் என்பதை நன்கறிபவனாக இருக்கின்றான். 6:118 நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்கள் மீது நம்பிக்கை உடையோராயின் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணிகளின் மாமிசத்தைப் புசியுங்கள்! 6:119 அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியை நீங்கள் புசிக்காமல் இருக்க என்ன காரணம்? கட்டாயச் சூழ்நிலைகளைத் தவிர மற்ற சமயங்களில் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளவை பற்றி ஏற்கனவே உங்களுக்கு விளக்யிருக்கின்றானே...! ஆனால், பெரும்பான்மையினரின் நிலை என்னவெனில், அறிவில்லாமல் தம் மன இச்சைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மக்களை வழி பிறழச் செய்கின்றார்கள். திண்ணமாக, உம் இறைவன் வரம்பு மீறி நடப்போரை நன்கறிவான். 6:120 வெளிப்படையான, மறைவான பாவங்கள் அனைத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்! எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றின் கூலி அதிவிரைவில் வழங்கப்படும். 6:121 மேலும், அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத பிராணியின் மாமிசத்தை நீங்கள் புசிக்காதீர்கள்! நிச்சயமாக, இவ்வாறு செய்வது பாவமாகும். திண்ணமாக, ஷைத்தான்கள் தம் நண்பர்களின் உள்ளங்களில் ஐயப்பாடுகளையும் ஆட்சேபணைகளையும் விதைக்கின்றார்கள்; அவர்கள் உங்களோடு தர்க்கம் புரிய வேண்டும் என்பதற்காக! ஆனால், நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீர்களாயின் நிச்சயமாக நீங்களும் இணைவைப்பவர்கள்தாம்! 6:122 இறந்துவிட்டிருந்த ஒருவனுக்கு நாம் உயிர் கொடுத்தோம். பின்னர் அவனுக்கு ஓர் ஒளியையும் வழங்கினோம். அதன் உதவியால் அவன் மக்களிடையே நடமாடுகின்றான். இப்படிப்பட்டவனும் இருள்களில் சிக்கி, எவ்விதத்திலும் அவற்றிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனும் சமம் ஆவார்களா? நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன. 6:123 மேலும் இதேபோன்று ஒவ்வோர் ஊரிலும் அங்குள்ள பெரும் பெரும் குற்றவாளிகளை நாம் விட்டு வைத்திருக்கின்றோம்; தங்களுடைய ஏமாற்று வலையை அங்கு அவர்கள் விரித்து வைக்கட்டும் என்பதற்காக! உண்மையில் அவர்களே தங்களின் ஏமாற்று வலையில் சிக்கிக் கொள்கின்றார்கள். ஆனால் அதை அவர்கள் உணர்வதில்லை. 6:124 அவர்களிடம் ஏதேனுமொரு சான்று வந்தால் “இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று எங்களுக்கும் கொடுக்கப்படாத வரை நாங்கள் அதை ஏற்கமாட்டோம்” என்று கூறுகின்றார்கள். தூதுத்துவப் பணியை யாரிடம் வாங்க வேண்டும், எவ்வாறு வாங்க வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிவான். இத்தகைய குற்றவாளிகள் அதிவிரைவில் தாங்கள் செய்துகொண்டிருக்கும் சூழ்ச்சிகளுக்குப் பகரமாக அல்லாஹ்விடம் இழிவையும் கடுமையான வேதனையையும் அடைவார்கள். 6:125 எனவே எவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட நாடுகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவாக்கிவிடுகின்றான். எவனை வழிகேட்டிலாழ்த்த நாடுகின்றானோ அவனது நெஞ்சத்தை இறுக்கமாக்கி விடுகின்றான்; எந்த அளவுக்கெனில் (இஸ்லாத்தைப் பற்றி நினைத்ததுமே) அவனுடைய உயிர் வானத்தை நோக்கி ஏறுவதைப் போல் உணர்கின்றான். இவ்வாறாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது (சத்தியத்தை விட்டு விரண்டோடுவது, அதன் மீது வெறுப்புக் கொள்வது போன்ற) தூய்மையற்ற நிலையைத் திணித்துவிடுகின்றான். 6:126 ஆயினும், இவ்வழி உம் இறைவனின் நேர்வழியாகும். திண்ணமாக, நல்லுரையினை ஏற்கும் மக்களுக்கு அதன் சான்றுகளை நாம் தெளிவுபடுத்திவிட்டோம். 6:127 அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குச் சாந்தி அளிக்கும் இல்லம் உண்டு. மேலும், அவர்கள் மேற்கொண்ட நேரிய செயல்முறையின் காரணமாக அவனே அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவனாக இருக்கின்றான். 6:128 மேலும், எந்நாளில் அவர்கள் எல்லோரையும் அல்லாஹ் ஒன்று திரட்டுவானோ அந்நாளில் ஜின்களை (ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தான்களை) நோக்கி அவன் கூறுவான்: “ஜின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் பெரும்பாலோரை உங்கள் பக்கம் நன்கு கவர்ந்திழுத்துக் கொண்டீர்களே!” மேலும், மனிதர்களில் யார் யார் அவர்களுக்கு நண்பர்களாக இருந்தார்களோ அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு பயன்படுத்திக் கொண்டோம். எந்த நேரத்தை எங்களுக்காக நீ விதித்திருந்தாயோ அந்த நேரத்தை இப்பொழுது நாங்கள் அடைந்திருக்கின்றோம்.” அப்போது அல்லாஹ் கூறுவான்: “இனி நரகம்தான் உங்களின் தங்குமிடமாகும். அதில் நீங்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பீர்கள்!” அதிலிருந்து அல்லாஹ் யாரைக் காப்பாற்ற நாடுகின்றானோ அவர்கள் மட்டுமே அதிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். நிச்சயமாக, உம் இறைவன் நுண்ணறிவாளனும், பேரறிவு கொண்டவனுமாவான். 6:129 (பாருங்கள்!) இவ்வாறே அக்கிரமக்காரர்கள் (உலகில் ஒன்றிணைந்து) சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றின் காரணத்தால், (மறுமையில்) அவர்களில் சிலரை வேறு சிலருக்கு நண்பர்கள் ஆக்குவோம். 6:130 (அச்சமயத்தில் அல்லாஹ் அவர்களிடம் இப்படி வினவுவான்:) “ஜின் மற்றும் மனிதக் கூட்டத்தார்களே! உங்களுக்கு என் வசனங்களை ஓதிக் காட்டி நீங்கள் சந்திக்கப்போகும் இந்நாளின் விளைவு குறித்து எச்சரிக்கை செய்கின்ற தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” அதற்கு அவர்கள் “ஆம் (வந்தார்கள்); எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகின்றோம்” என்று கூறுவார்கள். இந்த உலக வாழ்க்கை இன்று அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. ஆனால் அவர்கள் நிராகரிப்பாளர்களாய் வாழ்ந்ததாக அன்று தங்களுக்கு எதிராக சாட்சி கூறுவார்கள். 6:131 (இவ்வாறு அவர்களிடம் சாட்சியம் பெறுவது) எதற்காகவெனில், உம் இறைவன் எந்த ஊரையும் அங்கு வாழ்வோர் உண்மையை அறியாதிருக்கும் நிலையில் அநியாயமாய் அழிப்பதில்லை (எனும் உண்மை நிரூபணமாவதற்காகத்தான்!) 6:132 ஒவ்வொருவருக்கும் அவரவரின் செயல்களைப் பொறுத்து சில படித்தரங்கள் உள்ளன. உம் இறைவன் அவர்கள் செய்கின்ற செயல்களைப் பற்றி கவனமற்றவனாய் இல்லை. 6:133 மேலும், உம்முடைய இறைவன் தன்னிறைவானவனும், இரக்கம் உடையவனுமாய் இருக்கின்றான். அவன் நாடினால் உங்களை அகற்றிவிட்டு, இதற்கு முன்பு இதர மக்களின் சந்ததியிலிருந்து உங்களைக் கொண்டு வந்தது போல், உங்களுடைய இடத்தில் தான் நாடுகின்ற மற்றவர்களைக் கொண்டுவந்து விடுவான். 6:134 உங்களுக்கு வாக்களிக்கப்படும் விஷயம் திண்ணமாக வந்தே தீரும். (இறைவனை) இயலாமைக்குள்ளாக்கும் வலிமை உங்களுக்கில்லை! 6:135 (நபியே!) கூறுவீராக: “என் சமூகத்தாரே! நீங்கள் உங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருங்கள்; நானும் எனது வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இவ்வுலக வாழ்வின் இறுதி விளைவு யாருக்குச் சாதகமாக அமையும் என்பதை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள். அக்கிரமக்காரர்கள் வெற்றியடைய மாட்டார்கள் என்பது எந்நிலையிலும் எதார்த்த உண்மையாகும்.” 6:136 இந்த மக்கள் அல்லாஹ்வுக்காக, அவனே உற்பத்தி செய்த வேளாண்மை, கால்நடைகள் ஆகியவற்றிலிருந்து ஒரு பாகத்தை ஒதுக்கி, இது அல்லாஹ்வுக்குரியது என்றும், (மற்றொரு பாகத்தை ஒதுக்கி) இது நாங்கள் ஏற்படுத்திய இணைத்தெய்வங்களுக்கு உரியது என்றும் (எந்த அடிப்படையுமில்லாமல்) கூறுகின்றார்கள். எப்பாகம் அவர்களுடைய இணைத்தெய்வங்களுக்கு உரியதோ அது அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. ஆனால் எது அல்லாஹ்வுக்கு உரியதோ அது அவர்களின் இணைத்தெய்வங்களுக்குச் சேருகின்றது! அவர்கள் எடுக்கும் முடிவு எவ்வளவு மோசமானது! 6:137 இவ்வாறே இணைவைப்பாளர்களில் பலருக்குத் தங்கள் குழந்தைகளைத் (தாங்களே) கொலை செய்வதை அவர்களுடைய இணைத்தெய்வங்கள் அழகாக்கினார்கள். எதற்காகவெனில், அவர்களை அழிவுக்குள்ளாக்க வேண்டும்; அவர்களின் தீனை நெறியை அவர்களுக்கு குழப்பமாக்க வேண்டும் என்பதற்காக! அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். எனவே புனைந்து கூறிக் கொண்டிருக்கும் நிலையிலேயே நீர் அவர்களை விட்டுவிடும். 6:138 “இந்தக் கால்நடைகளும், வேளாண்மையும் (நேர்ச்சைக்காக) விடப்பட்டவையாகும். நாங்கள் யாரை விரும்பி அனுமதிக்கின்றோமோ அவர்கள் மட்டுமே இவற்றை உண்ணலாம்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். எனினும் இது அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட கட்டுப்பாடாகும்! வேறு சில கால்நடைகள் உண்டு; அவற்றின் மீது சவாரி செய்வதும் சுமை ஏற்றிச் செல்வதும் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், சில கால்நடைகளுண்டு; அவற்றை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரை அவர்கள் உச்சரிப்பதில்லை. இவை அனைத்தையும் அல்லாஹ்வின் பெயரில் புனைந்து கூறியுள்ளார்கள். அவர்கள் புனைந்து கூறிக் கொண்டிருந்தமைக்காக அதிவிரைவில் அல்லாஹ் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான். 6:139 இன்னும் “இக்கால்நடைகளின் வயிற்றிலுள்ள குட்டிகள் எங்களைச் சேர்ந்த ஆண்களுக்கு மட்டுமே உரித்தானவையாகவும், எங்களைச் சேர்ந்த பெண்களுக்குத் தடுக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. ஆனால் அவை செத்துப் போயிருந்தால், அவற்றைப் புசிப்பதில் இரு பாலாருக்கும் பங்கு உண்டு” என்று கூறுகின்றார்கள். அவர்களே புனைந்து கூறிய பொய்க்கூற்றுக்கான தண்டனையை அல்லாஹ் அவர்களுக்கு அளித்தே தீருவான். நிச்சயமாக அவன் நுண்ணறிவாளனும் யாவற்றையும் அறிந்தவனுமாயிருக்கின்றான். 6:140 எவர்கள் தம் குழந்தைகளை அறியாமையினாலும் மூடத்தனத்தினாலும் கொன்றுவிட்டார்களோ மேலும், அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி, அவர்களுக்கு வழங்கியிருந்தவற்றைத் தாங்களாகவே தடைசெய்து கொண்டார்களோ, அவர்கள் நிச்சயமாக பேரிழப்புக்கு ஆளாகிவிட்டார்கள். திண்ணமாக, அவர்கள் வழிதவறிப் போய் விட்டார்கள். அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெற்றவர்களாய் இருக்கவில்லை. 6:141 மேலும் (பந்தல்களில்) படரும் கொடிகள், படராத செடிகள் ஆகியவற்றைக் கொண்ட (விதவிதமான) தோட்டங்களையும், பேரீச்சந் தோப்புகளையும் பலவகைப்பட்ட உண்பொருள்களை அளிக்கக்கூடிய தாவரங்களையும் மற்றும் தோற்றத்தில் ஒரே மாதிரியாகவும் (சுவையில்) வேறுபட்டும் இருக்கும் ஒலிவம், மாதுளை ஆகியவற்றையும் படைத்தவன் அந்த அல்லாஹ்தான்! அவை காய்க்கும்போது அவற்றின் பலன்களை புசியுங்கள்! அவற்றின் அறுவடை நாளில் அல்லாஹ்வுக்குரிய பங்கினைக் கொடுத்து விடுங்கள். மேலும் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. 6:142 சுமை சுமப்பதற்கு பயன்படக் கூடிய சில பிராணிகளையும் (உணவுக்கும் விரிப்புக்கும் பயன்படக்கூடிய) சில பிராணிகளையும் அவன்தான் படைத்தான். எனவே அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றைப் புசியுங்கள். மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! திண்ணமாக, அவன் உங்களுக்கு வெளிப்படையான விரோதியாவான். 6:143 இவை எட்டு வகை (ஆண், பெண் பிராணி)கள் ஆகும். செம்மறி ஆட்டு வகையில் இரண்டும், வெள்ளாட்டு வகையில் இரண்டுமாகும். (நபியே!) அவர்களிடம் நீர் கேளும்: “அல்லாஹ் இவற்றில் எதனைத் தடுத்திருக்கிறான்? ஆணையா? பெண்ணையா? அல்லது அந்த இருவகை ஆடுகளின் கருவறைகளில் இருக்கும் குட்டிகளையா? நீங்கள் உண்மையாளர்களாயின் அறிவின் அடிப்படையில் துல்லியமாக விளக்குங்கள்.” 6:144 மேலும், இதே போன்று ஒட்டகத்தில் இருவகையும், மாட்டில் இருவகையும் உள்ளன. கேளுங்கள்: இவற்றில் எதனை அல்லாஹ் தடுத்திருக்கின்றான்? ஆணையா? பெண்ணையா? அந்த இருவகைப் பெண் பிராணிகளின் கருவறைகளில் உள்ள குட்டிகளையா? அல்லது இவை கூடாது என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டபோது (அங்கு) நீங்கள் இருந்தீர்களா? எவ்வித அறிவுமின்றி மக்களை வழிகெடுப்பதற்காக அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட பெரிய அக்கிரமக்காரன் யார்? நிச்சயமாக இத்தகைய அக்கிரமக்காரர்களை அல்லாஹ் ஒரு போதும் நேர்வழியில் செலுத்த மாட்டான். 6:145 (நபியே! இவர்களிடம்) கூறும்: எனக்கு அருளப்பட்ட வஹியில், உண்பவர்களுக்கு எந்த உணவும் தடை செய்யப்பட்டதாக நான் காணவில்லை; ஆனால் செத்த பிராணியையும், ஓடும் இரத்தத்தையும், பன்றி இறைச்சியையும் தவிர! திண்ணமாக இவை அசுத்தங்களாகும். மேலும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டபாவமானவற்றைத் தவிர! பின்னர் யாரேனும் ஒருவர் மாறு செய்யும் நோக்கம் இன்றியும், வரம்பு மீறாமலும் இப்பொருள்களில் ஒன்றைப் புசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டால் திண்ணமாக, உம் இறைவன் பெரிதும் மன்னிப்பவனாகவும், கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான். 6:146 மேலும், யூதர்களுக்கு நகமுடைய பிராணிகள் எல்லாவற்றையும் நாம் தடை செய்திருந்தோம். ஆடு, மாடுகளின் கொழுப்பையும் (நாம் தடை செய்திருந்தோம்). ஆனால் அவற்றின் முதுகுகளில் அல்லது குடல்களில் அல்லது எலும்போடு கலந்திருக்கின்ற கொழுப்பைத் தவிர! அவர்கள் வரம்பு மீறிச் செயல்பட்டதன் காரணமாக, இவ்வாறு அவர்களுக்கு நாம் தண்டனை அளித்தோம். திண்ணமாக நாம் முற்றிலும் உண்மை கூறுபவர்களாய் இருக்கின்றோம். 6: 147 இனி அவர்கள் உம்மைப் பொய்யர் என்று கூறினால், “உங்கள் இறைவன் விசாலமான கருணையாளன்; எனினும், அவனுடைய தண்டனை குற்றவாளிகளை விட்டு நீக்கப்படமாட்டாது” என்று அவர்களிடம் நீர் கூறுவீராக! 6:148 (உமது இக்கூற்றுக்கு மறுமொழியாக) இணைவைப்பாளர்கள் திண்ணமாக கூறுவார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்கள் இணைவைத்திருக்க மாட்டோம்; எங்கள் மூதாதையர்களும் இணைவைத்திருக்க மாட்டார்கள். மேலும் நாங்கள் எப்பொருளையும் தடை செய்திருக்கவும் மாட்டோம்.” இவர்களுக்கு முன்சென்றவர்களும் இவ்வாறு கூறித்தான் சத்தியத்தைப் பொய்யெனக் கூறிக்கொண்டிருந்தார்கள். இறுதியில் நம்முடைய வேதனையின் சுவையை அவர்கள் அனுபவித்தார்கள். இவர்களிடம் நீர் கூறும்: “அறிவார்ந்த ஆதாரம் ஏதேனும் உங்களிடம் உண்டா? இருந்தால் அதனை எங்கள் முன் எடுத்து வையுங்கள்! நீங்கள் வெறும் யூகத்தைத்தான் பின்பற்றிச் செல்கின்றீர்கள். மேலும், நீங்கள் கற்பனையின் அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.” 6:149 மேலும், நீர் கூறுவீராக: “(உங்களுடைய வாதத்திற்கு எதிராக) எதார்த்தத்தைக் கொண்டுள்ள முழுமையான வாதம் அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன் நாடியிருந்தால் நிச்ச யமாக உங்கள் அனைவரையும் நேர்வழியில் செலுத்தியிருப்பான்.” 6:150 “அல்லாஹ்தான் இப்பொருள்களைத் தடை செய்திருக்கின்றான் என்று சாட்சி கூறக்கூடிய உங்களின் சாட்சியாளர்களை அழைத்து வாருங்கள்” என அவர்களிடம் கூறுவீராக! பிறகு அவர்கள் சாட்சியம் அளித்துவிட்டால் நீர் அவர்களுடன் சேர்ந்து சாட்சியம் அளிக்க வேண்டாம். நம்முடைய வசனங்களைப் பொய்யென வாதிடுபவர்கள், மற்றும் மறுமையை மறுப்பவர்கள், மேலும், தங்களின் இறைவனோடு மற்றவர்களைச் சமம் ஆக்குகின்றவர்கள் ஆகியோரின் விருப்பங்களை நீர் பின் தொடராதீர்! 6:151 (நபியே! இவர்களிடம்) கூறும்: “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது சுமத்தியுள்ள நிபந்தனைகள் எவை என்பதை நான் கூறுகின்றேன். (அதாவது) அவனோடு யாரையும் எதையும் இணை வைக்காதீர்கள். மேலும், பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். மேலும், வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். நாமே உங்களுக்கும் உணவளிக்கின்றோம்; அவர்களுக்கும் அளிப்போம். மேலும், மானக்கேடான செயல்களின் அருகேகூடச் செல்லாதீர்கள்! அவை வெளிப்படையானவையாயினும் மறைவானவையாயினும் சரியே! மேலும் அல்லாஹ் கண்ணியத்திற்கு உரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்! நீங்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காக இவற்றைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான். 6:152 மேலும், அநாதைகளின் செல்வத்தை அவர்கள் பருவ வயதினை அடையும்வரை நியாயமான முறையில் அன்றி நெருங்காதீர்கள்! மேலும், அளவையிலும், நிறுவையிலும் நீதியைக் கடைப்பிடியுங்கள். எந்த மனிதன் மீதும் அவனது சக்திக்கு ஏற்பவே தவிர நாம் பொறுப்பு சுமத்துவதில்லை. இன்னும் பேசும்போது நீதியுடன் பேசுங்கள்! உங்கள் நெருங்கிய உறவினர் பற்றிய விவகாரமாயினும் சரியே! மேலும் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள்! நீங்கள் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காக இவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு நல்லுரை கூறுகின்றான். 6:153 மேலும், அவன் அறிவுறுத்துகின்றான்: நிச்சயமாக இதுதான் என்னுடைய நேரான வழியாகும். எனவே, நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். வேறு வழிகளைப் பின்பற்றாதீர்கள்! ஏனெனில் அவை நேரான வழியிலிருந்து உங்களைச் சிதறடித்துவிடும். உங்களுடைய இறைவன் உங்களுக்கு நல்கியுள்ள அறிவுரைகள் இவைதாம். இவற்றின் மூலம் நீங்கள் தவறான வழியைத் தவிர்த்து வாழக்கூடும். 6:154 பிறகு நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவ்வேதம் நன்னடத்தையை மேற்கொண்டோருக்கு அருட் கொடையை நிறைவு செய்யத்தக்கதாகவும் அவசியமான ஒவ்வொன்றையும் விளக்கக் கூடியதாகவும் நேர்வழி காட்டக்கூடியதாகவும் அருள் மிக்கதாகவும் அமைந்திருந்தது. மக்கள் தம் இறைவனைச் சந்திப்போம் என்று நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அவ்வேதத்தை நாம் வழங்கினோம்)! 6:155 மேலும் (இதே போன்று) இவ்வேதத்தையும் நாம்தான் இறக்கினோம். இது மிக்க அருள்வளமுடையது. எனவே நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். மேலும், இறையச்சமுள்ள போக்கினை மேற்கொள்ளுங்கள்! உங்கள் மீது இரக்கம் காட்டப்படலாம். 6:156 “எங்களுக்கு முன்சென்ற இருகூட்டத்தாருக்குத்தான் வேதம் வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் எதனைப் படித்தார்கள்; கற்பித்தார்கள் என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று இனி நீங்கள் கூற முடியாது. 6:157 அல்லது எங்கள் மீது வேதம் இறக்கியருளப் பட்டிருந்தால் அவர்களைவிட நல்ல முறையில் நேர்வழி நடப்பவர்களாக விளங்கியிருப்போம் என்றும் இனி நீங்கள் சாக்குப்போக்குக் கூறிட முடியாது. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றும் நேர்வழியும் அருட்கொடையும் உங்களிடம் வந்துள்ளன. இனி எவன் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யானவை என வாதிட்டு, அவற்றைப் புறக்கணித்தானோ அவனைவிட அக்கிரமக்காரன் யார்? எவர்கள் நம்முடைய வசனங்களைப் புறக்கணிக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்கள் புறக்கணித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இழிவான தண்டனையை நாம் அளித்தே தீருவோம். 6:158 என்ன, இப்போது இவர்கள் தங்கள் முன்னால் வானவர்கள் வந்து நிற்க வேண்டும்; அல்லது உம் இறைவனே வரவேண்டும்; அல்லது உம் இறைவனின் தெளிவான சான்றுகள் சில வெளிப்பட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றார்களா? உம் இறைவனின் சான்றுகளில் சில வெளிப்படும் நாளில் முன்னரே நம்பிக்கை கொள்ளாதவர்க்கும் அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் அதனுடன் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காதவர்க்கும் அவருடைய நம்பிக்கை எவ்வித பயனையும் அளிக்காது. எனவே (நபியே! இவர்களிடம்) கூறும்: “சரி, நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம்.” 6:159 எவர்கள் தங்களுடைய தீனை நெறியை துண்டு துண்டாக்கி, பல்வேறு குழுக்களாய் பிரிந்து விட்டார்களோ அவர்களோடு நிச்சயமாக உமக்கு எவ்விதத் தொடர்புமில்லை. அவர்களுடைய விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பிலேயே உள்ளது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவனே அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். 6:160 எவர் இறைவனின் திருமுன் நன்மையைக் கொண்டு வருவாரோ அவருக்கு அதைப்போல் பத்து மடங்கு நற்கூலி உண்டு. எவர் தீமையைக் கொண்டு வருவாரோ அவருக்கு அவர் செய்த தீமை அளவுக்குத்தான் தண்டனை கொடுக்கப்படும். மேலும், யாருக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது. 6:161 (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன், எனக்கு நேரான வழியைக் காட்டிவிட்டான். அது முற்றிலும் சரியான கோணல் இல்லாத தீன் (நெறி) ஆகும்; மன ஓர்மையுடன் இப்ராஹீம் கடைப்பிடித்து வந்த வழிமுறையும் ஆகும்; மேலும், அவர் இணைவைப்பாளர்களில் ஒருவராய் இருக்கவில்லை.” 6:162 கூறுவீராக: “நிச்சயமாக, எனது தொழுகையும் என்னுடைய வழிபாடுகளும் என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.” 6:163 அவனுக்கோ யாரும் இணையில்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும், நான் இறைவனுக்குக் கீழ்ப்படிவோரில் (முஸ்லிம்களில்) முதன்மையானவனாக உள்ளேன்.” 6:164 மேலும் கூறுவீராக: “அல்லாஹ்வே அனைத்திற்கும் அதிபதியாக இருக்க, அவனை விடுத்து வேறொரு அதிபதியை நான் தேடுவேனா? மேலும், எவரெவர் எதைச் சம்பாதிக்கின்றார்களோ அதற்கு அவரவரே பொறுப்பாளிகளாவர். மேலும், ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள். பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் அதிபதியிடமே திரும்ப வேண்டியுள்ளது. அச்சமயம் நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதன் உண்மை நிலையை அவன் உங்களுக்கு வெளிப்படுத்திவிடுவான். 6:165 உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கியவனும் அவனே! உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட உயர்ந்த படித்தரங்களை அவன் வழங்கியிருக்கின்றான்; அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக! நிச்சயமாக உம் அதிபதி தண்டனை வழங்குவதில் விரைவானவன்; மேலும் நிச்சயமாக அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங் கருணையாளனாகவும் இருக்கின்றான்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)