அத்தியாயம்  ஹாமீம் அஸ்ஸஜ்தா  41 : 47-54 / 54
41:47 அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே சொந்த மானது. மொட்டுக்களிலிருந்து வெளிவருகின்ற கனிகள் பற்றியெல்லாம் அவன்தான் அறிகின்றான். எந்தப் பெண் கருவுற்றிருக்கிறாள், எவள் குழந்தை பெறுகின்றாள் என்பதையும் அவன் அறிகின்றான். இறைவன் இம்மக்களை அழைத்து, “எனக்கு இணையாக ஏற்படுத்தப்பட்டவை (கடவுளர்) எங்கே?” என்று கேட்கும் நாளில் இவர்கள் கூறுவார்கள்: “எங்களில் (இதற்கு) சாட்சியம் அளிப்பவர் எவரும் இலர் என்று நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்.” 41:48 அப்பொழுது இதற்கு முன்பு இவர்கள் அழைத்துக் கொண்டிருந்த கடவுளர் அனைவரும் இவர்களை விட்டுக் காணாமல் போய்விடுவார்கள். மேலும் அப்பொழுது தங்களுக்கு இப்போது எந்தப் புகலிடமும் இல்லை என்பதை இந்த மக்கள் உணர்ந்து கொள்வார்கள். 41:49 நன்மையை வேண்டுவதில் மனிதன் எப்போதும் சோர்வுறுவதில்லை. ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டு விட்டால், நம்பிக்கை இழந்தவனாகவும் மனம் நொந்தவனாகவும் ஆகிவிடுகின்றான். 41:50 ஆனால், அவனைப் பீடித்திருந்த துன்பம் அவனைவிட்டு நீங்கிய பிறகு நாம் நம்முடைய அருளை அவனுக்குச் சுவைக்கக் கொடுத்தால் அப்போது அவன் கூறுகின்றான்: “நான் இதற்கு அருகதையுள்ளவன் ஆவேன். மேலும், மறுமைநாள் எப்பொழுதேனும் வரும் என்று நான் நினைக்கவில்லை. இனி, உண்மையில் என் அதிபதியிடம் நான் திரும்பக் கொண்டு செல்லப்பட்டாலோ அங்கேயும் எனக்கு இன்பம்தான் கிடைக்கும்!” எனினும் நிராகரிப்போருக்கு அவர்கள் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அவசியம் நாம் காண்பித்துத் தருவோம். மேலும், அவர்களை மிகவும் அருவருக்கத்தக்க வேதனையைச் சுவைக்கச் செய்வோம். 41:51 மனிதனுக்கு நாம் அருட்பேறுகளை வழங்கும்போது அவன் புறக்கணிக்கின்றான். கர்வத்துடன் நடந்து கொள்கின்றான். ஆனால், அவனை ஏதேனும் ஆபத்து தீண்டிவிடும்போது நீண்ட நெடிய இறைஞ்சுதல்களைப் புரியத் தொடங்குகின்றான். 41:52 (நபியே! இவர்களிடம்) கூறும்: “நீங்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லையா? இந்தக் குர்ஆன் உண்மையில் இறைவனிடமிருந்து வந்திருந்தும், இன்னும் இதனை நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்களெனில், இதனை எதிர்ப்பதில் வெகுதூரம் சென்றுவிட்டவனைவிட அதிகம் வழிதவறிய மனிதன் வேறு யார் இருக்க முடியும்?” 41:53 அதிவிரைவில் நாம் இவர்களுக்கு நம்முடைய சான்றுகளை அனைத்துத் திசைகளிலும் அவர்களுக்குள்ளேயும் காண்பித்துக் கொடுப்போம் இந்தக் குர்ஆன் சத்தியமானது எனும் உண்மை இவர்களுக்குத் தெளிவாகிவிடும் வரையில்! உம் இறைவன் ஒவ்வொன்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான் என்பது போதுமானதா, இல்லையா? 41:54 பாருங்கள்! இந்த மக்கள் தங்கள் இறைவனை சந்திக்கும் விஷயத்தில் ஐயம் கொண்டிருக்கின்றார்கள். கேட்டுக் கொள்ளுங்கள். திண்ணமாக, அவன் ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான்.
அத்தியாயம்  அஷ்ஷýரா  42 : 1-53 / 53
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
42:1 ஹா, மீம், 42:2 ஐன், ஸீன், காஃப், 42:3 வல்லமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமான அல்லாஹ், உமக்கும் உமக்கு முன் வாழ்ந்து சென்ற (இறைத் தூது)வர்களுக்கும் இவ்வாறே வஹி* அறிவித்துக் கொண்டிருக்கின்றான். 42:4 வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியவை. அவன் உயர்வுடையோனும் மகத்துவமிக்கவனுமாவான். 42:5 மேலே இருந்து வானங்கள் வெடித்து விடலாம். ஆனால் வானவர்கள் தம் இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருப்பதுடன் பூமியில் வாழ்வோரின் பாவமன்னிப்புக்காக வேண்டிக் கொண்டுமிருக்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! உண்மையில், அல்லாஹ்வே பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான். 42:6 எவர்கள் அவனை விடுத்து தமக்கு வேறு சில பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனரோ அவர்களை அல்லாஹ்வே கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர். 42:7 (ஆம், நபியே! இவ்வாறே நாம்) அரபிமொழியிலுள்ள இந்த குர்ஆனை உமக்கு வஹி அறிவித்துள்ளோம். (மக்காவாகிய) நகரங்களின் தாயையும் அதனைச் சூழ இருப்பவர்களையும் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும்; மேலும், ஒன்று திரட்டப்படும் நாளினைப் பற்றி நீர் அச்சுறுத்தவும் வேண்டும் என்பதற்காக! அந்நாள் வருவதில் எவ்வித ஐயமுமில்லை. ஒரு சாரார் சுவர்க்கத்திற்குச் செல்ல இருக்கின்றார்கள்; இன்னொரு சாரார் நரகத்திற்கு! 42:8 அல்லாஹ் நாடியிருந்தால், அவர்கள் அனைவரையும் ஒரே சமுதாயமாக அமைத்திருப்பான். எனினும், அவன் நாடுகின்றவர்களைத் தன் கருணையில் நுழையச் செய்கிறான். மேலும், கொடுமைக்காரர்களுக்கு எந்தப் பாதுகாவலரும் உதவியாளரும் இலர். 42:9 என்ன, இவர்கள் அவனை விடுத்து பிறரைத் தம் பாது காவலர்களாய் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அறிவீனர்களாய் இருக்கின்றார்களே! அல்லாஹ்வே பாதுகாவலனாவான். அவனே இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றான். மேலும், அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான். 42:10 உங்களுக்கிடையே எந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதில் தீர்ப்பு வழங்குவது அல்லாஹ்வின் பணியாகும். அந்த அல்லாஹ்தான் என் அதிபதி. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன்; மேலும், அவன் பக்கமே நான் திரும்புகின்றேன். 42:11 அவன் வானங்களையும் பூமியையும் படைத்தவன்; அவன்தான் உங்கள் இனத்திலிருந்தே உங்களுக்குத் துணைகளைப் படைத்தான். மேலும், இதேபோல் கால்நடைகளிலும் (அவற்றின் இனங்களிலிருந்தே) இணைகளைப் படைத்தான். மேலும், இவ்விதமாக அவன் உங்கள் சந்ததிகளைப் பெருகச் செய்கிறான். (உலகத்தின்) எந்தப் பொருளும் அவனுக்கு ஒப்பானதாய் இல்லை; அவன் அனைத்தையும் செவியுறுபவனும் பார்ப்பவனும் ஆவான். 42:12 வானங்களிலும் பூமியிலும் உள்ள கருவூலங்களின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. தான் நாடுகின்றவர்களுக்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகின்றான். நாடுகின்றவர்களுக்குக் குறைத்துக் கொடுக்கின்றான். திண்ணமாக, அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவன் ஆவான். 42:13 எந்த தீனை வாழ்க்கைநெறியை நூஹுக்கு அவன் வகுத்தளித்திருந்தானோ, மேலும், (முஹம்மதே!) எந்த வாழ்க்கை முறையை உமக்கு நாம் வஹியின் மூலம் அறிவித்திருக்கின்றோமோ, மேலும் எந்த வழிகாட்டலை இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் வழங்கியிருக்கின்றோமோ அதே தீனை வாழ்க்கை முறையைத்தான் உங்களுக்காக அவன் நிர்ணயித்துள்ளான்; இந்த தீனை நிலைநாட்டுங்கள்; இதில் பிரிந்து போய்விடாதீர்கள்(எனும் அறிவுறுத்தலுடன்)! இந்த இணைவைப்பாளர்களை நீர் எந்த விஷயத்தின் பக்கம் அழைக்கின்றீரோ அது அவர்களுக்கு மிகவும் வெறுப்புக்குரியதாய் இருக்கின்றது. தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் தனக்குரியவர்களாய்த் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். மேலும், எவர்கள் அவன் பக்கம் திரும்புகின்றார்களோ அவர்களுக்குத் தன்னிடம் வருவதற்கான வழியை அவன் காண்பிக்கின்றான். 42:14 மக்கள் தங்களுக்கு ஞானம் வந்த பின்னர்தான் பிளவுபட்டுப் போனார்கள்; அதுவும் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்க நாடிய காரணத்தால்தான்! ஒரு குறிப்பிட்ட காலம் வரை தீர்ப்பு தள்ளிப் போடப்படும் என்று உம் இறைவன் முன்னரே கூறியிருக்காவிட்டால், அவர்களுடைய விவகாரம் தீர்க்கப்பட்டிருக்கும்! மேலும், உண்மை என்னவெனில், அந்த முன்னோர்களுக்குப் பிறகு யார் வேதத்துக்கு வாரிசாக்கப்பட்டார்களோ அவர்களும் அதனைக் குறித்து கடும் மனக்குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்தில் உழன்று கொண்டிருக்கின்றார்கள். 42:15 (இத்தகைய நிலை உருவாகிவிட்டிருக்கிறது.) எனவே (முஹம்மதே!) இப்போது நீர் அதே தீனின் பக்கம் அழையும்; உமக்கு ஏவப்பட்டபடி அதில் உறுதியுடன் இரும்! மேலும், இம் மக்களின் ஆசாபாசங்களுக்கு இணங்கிவிடாதீர். மேலும் (இவர்களிடம்) கூறிவிடும்: “அல்லாஹ் எந்த வேதத்தை இறக்கியிருக்கின்றானோ அதன்மீது நான் நம்பிக்கை கொண்டேன்; நான் உங்களிடையே நீதி செலுத்த வேண்டும் என கட்டளையிடப்பட்டிருக்கின்றேன். அல்லாஹ்தான் எங்களுக்கும் அதிபதி; உங்களுக்கும் அதிபதி; எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே எந்த தர்க்கமும் இல்லை. அல்லாஹ் ஒருநாள் நம் அனைவரையும் ஒன்று திரட்டுவான். மேலும், அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியுள்ளது.” 42:16 அல்லாஹ்வின் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு (அப்படி ஏற்றுக்கொண்ட மக்களிடம்) எவர்கள், அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றார்களோ அவர்களின் தர்க்கம் அவர்களின் இறைவனிடத்தில் முற்றிலும் ஆதாரமற்றதாகும். மேலும், அவர்களின் மீது அவனுடைய கோபம் உண்டாகிறது. அவர்களுக்குக் கடும் வேதனையும் இருக்கிறது. 42:17 அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் மீஸானையும் (தராசையும்) சத்தியத்துடன் இறக்கியருளினான். உமக்குத் தெரியுமா என்ன? ஒருக்கால் தீர்ப்புக்குரிய நேரம் அருகிலேயே வந்துவிட்டிருக்கலாம். 42:18 எவர்கள் அ(து வருவ)தை நம்பவில்லையோ அவர்கள் அதற்காக அவசரப்படுகின்றார்கள். ஆனால், அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அதனைக் குறித்து அஞ்சுகின்றார்கள். மேலும், திண்ணமாக அது வரக்கூடியதே என்று அறிகின்றார்கள். நன்றாக செவிதாழ்த்திக் கேளுங்கள்! எவர்கள் அந்த நேரத்தின் வருகை குறித்து (ஐயத்தை ஏற்படுத்தக்கூடிய) விவாதங்கள் புரிகின்றார்களோ அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டிருக்கின்றார்கள். 42:19 அல்லாஹ் தன் அடிமைகள் மீது மிகவும் கிருபையுள்ளவன் ஆவான். யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமென்று நாடுகின்றானோ அதைக் கொடுக்கின்றான். அவன் பெரும் வல்லமை மிக்கவனும் யாவற்றையும் மிகைத்தவனும் ஆவான். 42:20 எவன் மறுமையின் விளைச்சலை விரும்புகின்றானோ அவனுக்கு அந்த விளைச்சலை நாம் அதிகரிக்கச் செய்கின்றோம். எவன் இம்மையின் விளைச்சலை விரும்புகின்றானோ அவனுக்கு அதனை இம்மையிலேயே அளிக்கின்றோம். ஆனால், மறுமையில் அவனுக்கு எந்தப் பங்கும் இல்லை. 42:21 அல்லாஹ் அனுமதி அளிக்காத தீனின் தன்மை கொண்ட ஒரு வழிமுறையை வகுத்துக் கொடுக்கின்ற இணைக்கடவுள்கள் இவர்களுக்கு இருக்கின்றனவா! தீர்ப்பு பற்றிய வாக்கு முடிவு செய்யப்படாமல் இருந்திருந்தால் இவர்களின் விவகாரம் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும். திண்ணமாக, இந்தக் கொடுமைக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது. 42:22 அந்நேரத்தில் கொடுமைக்காரர்கள் தாங்கள் சம்பாதித்தவற்றின் தீய விளைவு குறித்து அஞ்சிக் கொண்டிருப் பதை நீர் காண்பீர். ஆயினும், அது அவர்கள் மீது வந்தே தீரும். ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்கள் சுவனத்தோட்டங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்புகின்றவை அனைத்தையும் தம் இறைவனிடம் பெற்றுக் கொள்வார்கள். இதுவே மிகப்பெரும் அருளாகும். 42:23 இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்த தன் அடியார்களுக்கு இதைப் பற்றிதான் அல்லாஹ் நற்செய்தி சொல்கிறான். (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்: ‘நான் இந்தப் பணிக்காக உங்களிடமிருந்து எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், உறவினர்கள் மீது அன்பு காட்டுவதைக் கண்டிப்பாக நான் விரும்புகின்றேன். ஒருவர் ஏதேனும் நன்மை செய்வாராகில் நாம் அவருக்காக அந்நன்மையுடன் இன்னும் பல நன்மைகளை அதிகமாக்கிக் கொடுப்போம். திண்ணமாக, அல்லாஹ் மிகவும் பிழை பொறுப்பவனாகவும் மதிப்பவனாகவும் இருக்கின்றான்.’ 42:24 அல்லது “இந்த மனிதர் அல்லாஹ்வின் மீது பொய் புனைந்துரைக்கிறார்” என்று இவர்கள் கூறுகின்றார்களா? அல்லாஹ் நாடினால், உம்முடைய இதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான். அவன் பொய்மையை அழித்துத் தன் வார்த்தைகளால் மெய்மையை நிலைநாட்டுபவனாயிருக்கிறான். திண்ணமாக, உள்ளங்களில் மறைந்திருக்கும் இரகசியத்தை அவன் நன்கு அறிகின்றான். 42:25 மேலும், அவனே தன் அடிமைகளின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றான். மேலும், அவர்களின் குற்றங்களைப் பொறுத்தருளுகின்றான். இன்னும் உங்கள் செயல்கள் அனைத்தையும் அவன் நன்கு அறிகின்றான். 42:26 இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோரின் இறைஞ்சுதலை அவன் ஏற்றுக் கொள்கின்றான். தனது அருளிலிருந்து அவர்களுக்கு இன்னும் அதிகம் வழங்குகின்றான். நிராகரிப்பவர்களுக்கோ கடும் தண்டனை அவர்களுக்கு இருக்கின்றது. 42:27 அல்லாஹ் தன் அடிமைகள் அனைவருக்கும் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்கியிருந்தால், அவர்கள் பூமியில் அராஜகப் புயலை பரவச் செய்திருப்பார்கள். ஆகவே அவன் ஒரு கணக்குப்படி, தான் விரும்புகிற அளவில் இறக்கி வைக்கின்றான். திண்ணமாக, அவன் தன் அடிமைகள் பற்றி நன்கு புரிந்தவனாகவும், அவர்களைக் கவனிப்பவனாகவும் இருக்கின்றான். 42:28 மக்கள் நிராசை அடைந்த பின்னர் மழையைப் பொழிவிப்பவனும் அவனே; மேலும், தன் கருணையைப் பரப்புகின்றான். அவனே மிகப் பெரும் புகழுக்குரிய பாதுகாவலன் ஆவான். 42:29 இந்த வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், இவற்றில் பரந்து காணப்படுகின்ற உயிரினங்களும் அவனுடைய அத்தாட்சிகளுள் உள்ளவையாகும். அவன் விரும்பும்போது அவற்றை ஒன்றுதிரட்டும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான். 42:30 உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்த ஒரு துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்தவைதான். மேலும், அவன் பெரும்பாலான பிழைகளைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகின்றான். 42:31 நீங்கள் பூமியில் (உங்கள் இறைவனைத்) தோல்வியுறச் செய்யக்கூடியவர்கள் அல்லர். மேலும், அல்லாஹ்விற்கு எதிரில் எந்த ஆதரவாளனும் உதவியாளனும் உங்களுக்கு இல்லை. 42:32 கடலில், மலைகளைப் போல் காட்சி தரும் இந்தக் கப்பல்களும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! 42:33 அல்லாஹ் நாடினால் காற்றை அசைவற்றதாக்கி விடுவான்; பிறகு அவை கடலின் மேற்பரப்பில் அப்படியே நின்று போய்விடும். அதிக அளவு பொறுமையைக் கடைப்பிடிக்கக்கூடிய மேலும், நன்றி செலுத்தக் கூடிய ஒவ்வொருவருக்கும் இதில் நிறைய சான்றுகள் இருக்கின்றன. 42:34 அல்லது (அதில் பயணம் செய்வோரின்) எண்ணற்ற பாவங்களை மன்னித்து விடும் நிலையிலேயே அவர்களின் ஒரு சில தீவினைகள் காரணமாக அவர்களை மூழ்கச் செய்தும் விடுகின்றான். 42:35 அந்நேரத்தில் நம்முடைய அத்தாட்சிகள் குறித்து தர்க்கம் புரிவோருக்குத் தெரிந்துவிடும், தங்களுக்கு எந்தப் புகலிடமும் இல்லை என்று! 42:36 உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் இந்த உலகின் சிலநாள் வாழ்க்கைக்குரிய சாதனங்கள்தாம். ஆனால், அல்லாஹ்விடம் இருப்பதோ சிறந்ததும் நிலையானதுமாகும். அது, நம்பிக்கை கொண்டவர்களாயும் தங்கள் இறைவனை முழுவதுஞ் சார்ந்தவர்களாயும் யார் இருக்கின்றார்களோ அவர்களுக்குரியதாகும். 42:37 மேலும், அவர்கள் பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துக் கொள்கின்றார்கள். கோபம் வந்துவிட்டால் பொறுத்துக் கொள்கிறார்கள். 42:38 மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை ஏற்றுக் கொள்கின்றார்கள். தொழுகையை நிலைநாட்டுகின்றார்கள். மேலும், அவர்கள் தங்களின் செயல்களை ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்து நடத்துகின்றார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்கிறார்கள். 42:39 மேலும், அவர்கள் தங்கள் மீது அநீதி இழைக்கப்படும்போது அதை எதிர்த்துப் போராடுகின்றார்கள் 42:40 தீமையின் கூலி அதே போன்ற ஒரு தீமையே ஆகும். இனி எவர் மன்னித்துவிடுகின்றாரோ மேலும், சீர்திருத்தம் செய்கின்றாரோ அவருடைய கூலி அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் கொடுமைக்காரர்களை நேசிப்பதில்லை. 42:41 எவர்கள் தம் மீது கொடுமை இழைக்கப்பட்ட பின் பழி வாங்குகின்றார்களோ அவர்கள் மீது ஆட்சேபணை கூற முடியாது. 42:42 ஆட்சேபணைக்குரியவர்கள் யாரெனில், இதர மக்கள் மீது கொடுமை இழைப்பவர்களும் இன்னும் நியாயமின்றி பூமியில் அதீத செயல்கள் புரிபவர்களும்தாம். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. 42:43 ஆயினும், யார் பொறுமையை மேற்கொள்ளவும் மன்னித்துவிடவும் செய்கின்றார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும். 42:44 எவரையாவது அல்லாஹ்வே வழிகேட்டில் ஆழ்த்திவிட்டால் அவரைப் பாதுகாப்பவன் அல்லாஹ்வுக்குப் பிறகு வேறுயாரும் இல்லை. நீர் காண்பீர்: இந்தக் கொடுமைக்காரர்கள் வேதனையைப் பார்க்கும் போது, “இனி திரும்பிச் செல்வதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?” என்று கேட்பார்கள். 42:45 மேலும் நீர் காண்பீர்: நரகத்தின் முன் இவர்கள் கொண்டு வரப்படும்போது, அவமானத்தால் தலைகுனிந்து விடுவார்கள். (மேலும் அந்நரகத்தை) கடைக்கண்ணால் பார்ப்பார்கள். (அந்நேரத்தில்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டிருந்தார்களோ அவர்கள் கூறுவார்கள்: “மறுமைநாளாகிய இன்று தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும் நஷ்டத்தில் ஆழ்த்திக் கொண்டவர்கள் யாரோ, அவர்கள்தாம் உண்மையில் இழப்புக்குரியவர்கள்!” எச்சரிக்கையாயிருங்கள்! கொடுமைக்காரர்கள் நிரந்தரமான தண்டனையில் வீழ்வார்கள். 42:46 மேலும், அல்லாஹ்விற்கு எதிராக அவர்களுக்கு உதவுகிற எந்த ஓர் ஆதரவாளரும் அவர்களுக்கு இருக்கமாட்டார்கள். எவரையாவது அல்லாஹ் வழிகேட்டில் ஆழ்த்திவிட்டால் பிறகு அவனைக் காப்பாற்றுவதற்கு எந்த வழியும் இல்லை. 42:47 அந்த ஒருநாள் வருவதற்கு முன்பு உங்கள் இறைவனின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். அந்நாளைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்த முகாந்திரமும் அல்லாஹ்வின் சார்பிலிருந்து இல்லை. அந்நாளில் உங்களுக்கு எந்தப் புகலிடமும் இருக்காது; உங்கள் நிலைமையை மாற்ற முயல்வோர் எவரும் உங்களுக்கு இருக்கமாட்டார். 42:48 இனியும் இந்த மக்கள் புறக்கணிக்கின்றார்களெனில், (நபியே!) இவர்களைப் பாதுகாப்பவராய் உம்மை நாம் அனுப்பி வைக்கவில்லை. தூதுச் செய்தியைச் சேர்ப்பிப்பது மட்டுமே உமது பொறுப்பு. மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவனுக்கு நாம் நம்முடைய அருட்பேற்றைச் சுவைக்கச் செய்தால் அதன் பேரில் அவன் பூரிப்படைகின்றான். மேலும், அவனுடைய கைகள் செய்த தீவினையின் காரணத்தினால், ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டுவிட்டால், அவன் மிகவும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான். 42:49 அல்லாஹ், பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளனாவான்; தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான்: தான் நாடுவோருக்குப் பெண்மக்களை வழங்குகின்றான்; தான் நாடுவோருக்கு ஆண்மக்களை வழங்குகின்றான். 42:50 தான் நாடுவோருக்கு ஆண்மக்களையும், பெண்மக்களையும் சேர்த்து வழங்குகின்றான். மேலும், தான் நாடுவோரை மலடுகளாகவும் ஆக்குகின்றான். திண்ணமாக, அவன் அனைத்தையும் அறிந்தவனும் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனும் ஆவான். 42:51 எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவது இல்லை. ஆயினும் வஹியின் (சைக்கினையின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை (வானவரை) அனுப்பிவைத்தோ அல்லாமல் (நேரடியாகப்) பேசுவதில்லை. அவர் அவனுடைய அனுமதி கொண்டு அவன் நாடுவதை அறிவித்துவிடுகிறார். திண்ணமாக, அவன் உயர்வுமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான். 42:52 மேலும், இவ்வாறே (நபியே!) நம் கட்டளையின் வாயிலாக ஒரு ரூஹை* உமக்கு வஹி அறிவித்தோம். வேதம் என்பதென்ன, ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன என்பதெல்லாம் உமக்குத் தெரியாதிருந்தது. ஆனால் அந்த ரூஹை நாம் ஒளியாக ஆக்கினோம். நம் அடியார்களில் நாம் நாடுவோருக்கு அதன்மூலம் வழிகாட்டுகிறோம். திண்ணமாக, நீர் நேரியவழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றீர். 42:53 வானங்கள், பூமி ஆகியவற்றிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் உரிமையாளனாகிய அல்லாஹ்வின் வழியை தெரிந்து கொள்ளுங்கள்! எல்லா விவகாரங்களும் அல்லாஹ்விடமே திரும்புகின்றன.
அத்தியாயம்  அஸ்ஸுக்ருஃப்  43 : 1-23 / 89
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
43:1 ஹாமீம். 43:2 இந்தத் தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக! 43:3 நாம் இதனை அரபி மொழியிலுள்ள குர்ஆனாக அமைத்துள்ளோம். நீங்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக! 43:4 மேலும், உண்மையில் இது ‘உம்முல் கிதாபில்’* பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்மிடம் உயர் அந்தஸ்துடையதும் ஞானம் நிறைந்ததுமான வேதமாகும் அது! 43:5 நீங்கள் வரம்புமீறிச் சென்றுவிட்டிருக்கின்றீர்கள் என்பதற்காக நாம் உங்கள் மீது வெறுப்படைந்து இந்த அறிவுரையை உங்களிடம் அனுப்பாமல் நிறுத்திவிடுவோமா, என்ன? 43:6 முன்பு வாழ்ந்து சென்ற சமூகங்களில் எத்தனையோ தூதர்களை நாம் அனுப்பியிருந்தோம்; 43:7 அவர்களிடம் வந்த எந்தத் தூதரையும் அவர்கள் பரிகாசம் செய்யாமல் இருந்ததில்லை! 43:8 ஆக, எந்த மக்கள் இவர்களைவிட பன்மடங்கு வலிமை மிக்கவர்களாய் இருந்தார்களோ அவர்களை நாம் அழித்துவிட்டோம். முன்பு வாழ்ந்த சமூகங்களின் முன்னுதாரணங்கள் சென்றுவிட்டிருக்கின்றன. 43:9 நீர் அவர்களிடம் “வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்தவன் யார்?” என்று கேட்பீராயின், “வல்லமையும் பேரறிவும் கொண்டவன்தான் அவற்றைப் படைத்தான்” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள். 43:10 அவன்தான் உங்களுக்காக இந்த பூமியைத் தொட்டில் ஆக்கினான் அதிலே உங்களுக்காக பாதைகளை அமைத்தான்; நீங்கள் (நாடிய இடங்களுக்கான) வழியை அடைவதற்காக! 43:11 மேலும், வானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நீரை இறக்கினான். அதன் மூலம் இறந்த பூமிக்கு உயிர் கொடுத்தெழுப்பினான். இவ்வாறே (ஒருநாள் பூமிக்குள்ளிருந்து) நீங்கள் வெளிக்கொணரப்படுவீர்கள். 43:12 அவனே அனைத்து ஜோடிகளையும் படைத்தான். மேலும், உங்களுக்காகக் கப்பல்களையும், கால்நடைகளையும் வாகனங்களாய் அமைத்தவனும் அவனே! 43:13 நீங்கள் அவற்றின் முதுகுகளின் மீது ஏறி அமர்வதற்காகவும், அவற்றின் மீது அமர்ந்த பிறகு உங்கள் இறைவனின் பேருதவியை நீங்கள் நினைவுகூர்ந்து இவ்வாறு பிரார்த்திப்பதற்காகவும்தான்: “தூய்மையானவன்; மேலும், இவற்றையெல்லாம் எங்களுக்கு வசப்படுத்தித் தந்தவன்! இவற்றை அவன் வசப்படுத்தித் தராவிட்டால் அவற்றை வசப்படுத்தும் ஆற்றல் எங்களிடம் இருக்கவில்லை. 43:14 மேலும், நாங்கள் எங்கள் இறைவனிடம் ஒருநாள் திரும்பிச் செல்லக்கூடியவர்களாவோம்.” 43:15 இவர்கள் (இவை அனைத்தையும் அறிந்து ஏற்றுக் கொண்ட பிறகும்) அவனுடைய அடியார்களில் சிலரை அவனுடைய ஓர் அம்சமாக ஆக்கிவிட்டார்கள். உண்மையாதெனில், மனிதன் வெளிப்படையாக நன்றி கொன்றவனாயிருக்கின்றான். 43:16 என்ன, இறைவன் தன்னுடைய படைப்புகளிலிருந்து தனக்காகப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு உங்களுக்கு ஆண்மக்களை வழங்கியிருக்கின்றானா? 43:17 மேலும் (இவர்களுடைய நிலைமை என்னவெனில்) எந்தப் பிள்ளைகளைக் கருணைமிக்க அந்த இறைவனோடு இவர்கள் பாவித்துச் சொல்கின்றார்களோ அந்தப் பிள்ளைகள் இவர்களில் எவரேனும் ஒருவருக்குப் பிறந்திருப்பதாக நற்செய்தி சொல்லப்பட்டால், அவருடைய முகத்தில் இருள் சூழ்ந்து விடுகின்றது. 43:18 மேலும், அவர் பெரும் துக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறார். என்ன, ஆபரணங்களில் வளர்க்கப்படுகின்ற, விவாதத்தில் தன் கருத்தை முழுமையாகத் தெளிவுபடுத்த முடியாத பிள்ளைதான் அல்லாஹ்வின் பங்கில் வரவேண்டுமா? 43:19 இவர்கள் கருணைமிக்க இறைவனின் சிறப்புக்குரிய அடியார்களான வானவர்களைப் பெண்களெனத் தீர்மானித்துக் கொண்டனர். அவர்களுடைய உடலமைப்பை இவர்கள் பார்த்ததுண்டா? இவர்களின் சாட்சியம் எழுதி வைக்கப்படும். அதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும். 43:20 மேலும், இவர்கள் கூறுகின்றார்கள்: “(நாங்கள் அவர்களை வணங்கக்கூடாது என) கருணைமிக்க இறைவன் நாடியிருந்தால், ஒருபோதும் நாங்கள் அவர்களை வணங்கியிருக்கமாட்டோம்.” இந்த விவகாரத்தின் யதார்த்த நிலையை இவர்கள் உறுதியாக அறிந்திருக்கவில்லை. இவர்கள் வெறும் ஊகங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறார்கள்! 43:21 அல்லது இதற்கு முன்பு இவர்களுக்கு நாம் ஏதாவது வேதத்தை வழங்கியிருக்கின்றோமா? அந்த ஆதாரத்தை (தம்முடைய ‘வானவர் வழிபாட்டுக்கான’ அடிப்படையாக) இவர்கள் பெற்றிருக்கிறார்களா? 43:22 இல்லவே இல்லை! மாறாக, இவர்கள் கூறுகின்றார்கள்: “எங்கள் முன்னோர் ஒரு வழிமுறையில் செல்வதைக் கண்டோம்; அவர்களின் அடிச்சுவட்டில் நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம்” 43:23 இவ்வாறு உமக்கு முன்பு எந்த ஊரில் எந்த எச்சரிப்பாளரை நாம் அனுப்பினாலும் அவ்வூரின் சுகபோகிகள் எங்கள் முன்னோர் ஒரு வழிமுறையில் செல்வதைக் கண்டோம்; அவர்களின் அடிச்சுவட்டில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்றுதான் கூறினார்கள்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)