அத்தியாயம்  அஸ்ஸுமர்  39 : 32-75 / 75
39:32 எவன் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தானோ மேலும், உண்மை தன் எதிரில் வந்தபோது அதனையும் பொய்ப்படுத்தினானோ, அவனைவிடப் பெரிய கொடுமைக்காரன் யார்? என்ன, இத்தகைய நன்றி கொன்றவர்களுக்கு நரகில் தங்குமிடம் எதுவும் இல்லையா? 39:33 ஆனால், எந்த மனிதர் உண்மையைக் கொண்டு வந்தாரோ, மேலும், எவர்கள் அவரை உண்மையாளர் என்று ஏற்றுக்கொண்டார்களோ அப்படிப்பட்டவர்கள்தாம், வேதனையிலிருந்து தப்பிக்கக் கூடியவர்கள். 39:34 அவர்களுக்கு, அவர்கள் விரும்புகின்றவை அனைத்தும் அவர்களின் இறைவனிடம் கிடைக்கும். நன்மை செய்வோரின் கூலி இதுதான்; 39:35 அவர்கள் செய்து கொண்டிருந்த மிகத் தீமையான செயல்களை அல்லாஹ் அவர்களின் கணக்கிலிருந்து நீக்கிவிட வேண்டும்; மேலும், அவர்கள் ஆற்றிவந்த மிகச் சிறந்த செயல்களைக் கவனித்து அவர்களுக்குக் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக! 39:36 (நபியே!) அல்லாஹ் தன் அடியானுக்குப் போதுமானவனில்லையா, என்ன? இவர்கள் அவனல்லாதவர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகிறார்கள். உண்மை யாதெனில், அல்லாஹ் எவனை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றானோ, அவனுக்கு வழிகாட்டக்கூடியவர் எவருமிலர். 39:37 மேலும், எவருக்கு அவன் நேர்வழி காட்டுகின்றானோ அவரை வழிகெடுப்பவனும் எவருமில்லை. அல்லாஹ் வல்லமைமிக்கவனாகவும், பழிவாங்குபவனாகவும் இல்லையா, என்ன? 39:38 வானங்களையும், பூமியையும் படைத்தது யார் என்று இவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று இவர்கள் பதிலுரைப்பார்கள். (இவர்களிடம்) கேளும். (உண்மை இதுவாயின்) அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கும் தெய்வங்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்? அல்லாஹ் எனக்கு ஏதேனும் தீங்கு இழைக்க நாடினால் அந்தத் தீங்கிலிருந்து என்னை அவை காப்பாற்றி விடுமா? அல்லது அல்லாஹ் என்மீது கருணைபொழிய நாடினால் அந்தத் தெய்வங்களால் அவனுடைய கருணையைத் தடுத்து நிறுத்த முடியுமா? (சரி, இவர்களிடம்) கூறிவிடும்: “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; சார்ந்திருப்பவர்கள் அனைவரும் அவனையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றார்கள்.” 39:39 (இவர்களிடம் தெளிவாகக்) கூறும்: “என் சமூகத்தாரே! நீங்கள் உங்கள் போக்கில் செயல்பட்டுக் கொண்டிருங்கள். நான் (என்னுடைய) பணியைச் செய்து கொண்டிருப்பேன். 39:40 இழிவு தரும் வேதனை யாருக்கு வரும், நீங்காத தண்டனை யார்மீது இறங்கும் என்பது உங்களுக்கு விரைவில் தெரிந்துவிடும்.” 39:41 (நபியே!) நாம் மனிதர்கள் அனைவருக்காகவும் சத்தியத்துடனான இந்த வேதத்தை உம்மீது இறக்கியிருக்கின்றோம். இனி, யாரேனும் நேரிய வழியில் நடந்தால் அது அவருக்கே நன்மை தரும். யாரேனும் வழி தவறினாலும், வழி தவறியதன் தீயவிளைவு அவரையே சாரும். நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர். 39:42 அல்லாஹ்தான் மரணத்தின்போது உயிர்களைக் கைப்பற்றுகின்றான். (அவ்வாறே) இதுவரை மரணிக்காதவர்களின் உயிர்களைத் தூக்கத்தின்போது கைப்பற்றுகின்றான். பிறகு, எவர்கள் மீது மரணத்தை விதிக்கின்றானோ, அவர்களின் உயிரைத் தடுத்து வைத்துக்கொள்கின்றான். மற்றவர்களின் உயிர்களை, ஒரு குறிப்பிட்ட தவணைவரை திருப்பி அனுப்புகின்றான்; சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் மாபெரும் சான்றுகள் உள்ளன. 39:43 என்ன, இவர்கள் இத்தகைய இறைவனை விட்டுவிட்டு மற்றவர்களைப் பரிந்துரையாளர்களாக எடுத்துக் கொண்டார்களா? அவர்களிடம் கேளும்: “அவர்களிடம் எந்த அதிகாரமும் இல்லை என்றாலும், அவர்கள் எதையும் புரியாமலிருந்தாலுமா பரிந்துரை செய்யப்போகிறார்கள்?” 39:44 கூறுவீராக: ஷஃபாஅத் பரிந்துரை முற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே உரிமையாளன். பிறகு, நீங்கள் அவனிடமே திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள். 39:45 ஏக அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்படுமாயின் மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் குமைய ஆரம்பிக்கின்றன. ஆனால், அவனை விடுத்து மற்றவர்களைப் பற்றிக் கூறப்படுமாயின் உடனே அவர்கள் மகிழ்ச்சியினால் பூரிப்படைகின்றார்கள். 39:46 நீர் கூறும்: “இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிபவனே! நீயே உன்னுடைய அடிமைகளுக்கிடையே அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்ற விஷயங்களில் தீர்ப்பு வழங்குவாய்.” 39:47 இந்தக் கொடுமைக்காரர்களிடம் பூமியிலுள்ள அனைத்துச் செல்வங்களும் இருந்த போதிலும், அவற்றுடன் இன்னும் அதே அளவு செல்வம் இருந்தாலும், மறுமைநாளில் கொடிய தண்டனையிலிருந்து தப்புவதற்காக அவை அனைத்தையும் ஈடாகக் கொடுத்திட அவர்கள் தயாராகிவிடுவார்கள். அவர்கள் என்றுமே நினைத்து கூடப் பார்க்காதவை அங்கு அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு முன்னால் வெளிப்படும். 39:48 அவர்களுடைய சம்பாதனையின் தீயவிளைவுகள் அனைத்தும் (அங்கு) அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். மேலும், அவர்கள் எதனைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கின்றார்களோ அது அவர்களை முழுமையாகச் சூழ்ந்துகொள்ளும். 39:49 இதே மனிதனைக் கொஞ்சம் துன்பம் தொட்டுவிட்டால் அவன் நம்மை அழைக்கின்றான். பிறகு, நாம் அவனுக்கு நம் சார்பிலிருந்து அருட்கொடையை அளி(த்து மகிழ்வி)க்கும்போது, இது எனக்கு என்னுடைய அறிவின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றான். உண்மையில் இது ஒரு சோதனையாகும். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. 39:50 இவர்களுக்கு முன்பு வாழ்ந்து சென்றவர்களும் இதையே கூறினார்கள். ஆயினும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை. 39:51 பின்னர், தங்களுடைய சம்பாத்தியத்தின் தீயவிளைவுகள் அவர்களைப் பீடித்துக்கொள்ளும். மேலும், அவர்களில் யார் கொடுமை புரிந்தார்களோ அவர்களையும் அவர்களுடைய சம்பாத்தியத்தின் தீயவிளைவுகள் பிடித்துக் கொள்ளும்! அவர்கள் நம்மைத் தோல்வியுறச் செய்யக்கூடியவர்களல்லர். 39:52 அல்லாஹ் தான் நாடுகின்றவர்க்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்க்குக் குறைவாகக் கொடுக்கின்றான் என்பதை இவர்கள் அறியவில்லையா? இதில் சான்றுகள் உள்ளன; நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு! 39:53 (நபியே!) கூறுவீராக: “தங்கள் ஆன்மாக்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக, அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். 39:54 திரும்பி விடுங்கள், உங்கள் இறைவனின் பக்கம்! மேலும், அடிபணிந்து விடுங்கள் அவனுக்கு உங்கள்மீது வேதனை வருவதற்கு முன்பாகவே! பிறகு, எங்கிருந்தும் உங்களுக்கு உதவி கிடைக்காது. 39:55 உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்பட்ட வேதத்தின் சிறந்த அம்சத்தைப் பின்பற்றுங்கள்; நீங்கள் உணராதிருக்கும் நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக! 39:56 இனி, “ஐயகோ! அல்லாஹ்வின் விஷயத்தில் நான் குறைபாடு செய்துவிட்டேனே! அது மட்டுமின்றி நான் பரிகாசம் செய்தவர்களுடனும் சேர்ந்துவிட்டேனே!” என்று புலம்பக்கூடிய அல்லது, 39:57 “அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால் நானும் இறையச்சமுள்ளவர்களில் ஒருவனாக இருந்திருப்பேனே!” என்று புலம்பக்கூடிய, 39:58 அல்லது, வேதனையைப் பார்க்கும் நேரத்தில் “அந்தோ! மற்றொரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தால் நானும் நற்செயல் புரிவோர்களில் ஒருவனாய் ஆகிவிடுவேனே!” என்று புலம்பக்கூடிய நிலை எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. 39:59 (அப்பொழுது அவனுக்கு இந்தப் பதில் கிடைக்கும்:) “அவ்வாறல்ல...! என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்திருந்தன அல்லவா? அவற்றை நீ பொய் என்று கூறினாய். மேலும், தற்பெருமை கொண்டாய்; நிராகரிப்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்!” 39:60 (இன்று) எவர்கள் இறைவன் மீது பொய் புனைந்துரைக்கின்றார்களோ, அவர்களின் முகங்கள் மறுமைநாளில் கறுத்துப்போயிருப்பதை நீர் காண்பீர். பெருமையடித்தவர்களுக்கு நரகம் போதிய தங்குமிடமாக இல்லையா, என்ன? 39:61 (இதற்கு மாறாக) எவர்கள் இங்கு இறையச்சம் கொண்டு வாழ்கின்றார்களோ, அதன் விளைவாய் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி வாய்ப்புகள் நிமித்தம் அவர்களுக்கு அல்லாஹ் ஈடேற்றம் அளிப்பான். அவர்களை எந்தத் தீங்கும் அணுகாது. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். 39:62 அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் படைத்தவனாவான். அவனே ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளனாக இருக்கின்றான். 39:63 வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள்தாம் இழப்புக்குரியவர்கள். 39:64 (நபியே!) இவர்களிடம் கூறுவீராக: “அறிவிலிகளே! அல்லாஹ்வை விட்டுவிட்டு மற்றவர்களை நான் வணங்க வேண்டுமென்று என்னிடம் நீங்கள் கூறுகின்றீர்களா? 39:65 (நீர் இவ்விஷயத்தை இவர்களுக்குத் தெளிவுபடக்கூறிவிட வேண்டும்:) உமக்கும், உமக்கு முன் வாழ்ந்து சென்ற அனைத்து நபிமார்களுக்கும் இவ்வாறு வஹி* அனுப்பப்பட்டுள்ளது; நீர் இறைவனுக்கு இணைவைத்தால், உம்முடைய செயல் வீணாகிப் போய்விடும்; நீர் நிச்சயமாக நஷ்டமடைந்தவராகி விடுவீர்; 39:66 எனவே (நபியே!) நீர் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிபணிவீராக! மேலும், நன்றி செலுத்தும் அடியார்களுடன் ஆகிவிடுவீராக!” 39:67 இந்த மக்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவேயில்லை. (அவனுடைய நிறைவான வல்லமையின் நிலை என்னவெனில்) மறுமைநாளில் பூமி முழுவதும் அவனின் கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அவனுடைய வலக்கையில் சுருட்டப்பட்டு இருக்கும். அவன் தூய்மையானவன்; உயர்ந்தவன்; இம்மனிதர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களை விட்டு! 39:68 மேலும், அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மடிந்து வீழ்வார்கள். ஆனால், அல்லாஹ் யாரை உயிருடன் விட்டு வைக்க நாடியிருந்தானோ அவர்களைத் தவிர! பின்னர் மற்றொரு எக்காளம் ஊதப்படும். உடனே அனைவரும் எழுந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். 39:69 பூமி தன் இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும்; வினைச் சுவடிகள் கொண்டு வந்து வைக்கப்படும்; இறைத்தூதரும் அனைத்துச் சாட்சியாளர்களும் கொண்டு வரப்படுவார்கள். மக்கள் மத்தியில் முற்றிலும் நியாயமான வகையில் தீர்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது. 39:70 மேலும், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் புரிந்திருந்த செயல்களுக்கேற்ப முழுமையான கூலி வழங்கப்படும். மக்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். 39:71 (இந்தத் தீர்ப்புக்குப் பிறகு) நிராகரித்தவர்களாய் இருந்தவர்கள் நரகத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய் ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவ்வாறாக, அவர்கள் அந்நரகத்தை நெருங்கியதும், அதன் வாயில்கள் திறக்கப்படும். மேலும் அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள்: “உங்களுடைய இறைவனின் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டக்கூடியவர்களும், நீங்கள் இந்த நாளைச் சந்திக்க வேண்டிய ஒரு நேரம் வரும் என்று உங்களை எச்சரிக்கை செய்யக்கூடியவர்களுமான இறைத்தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” அதற்கவர்கள், “ஆம்! வந்திருந்தார்கள். ஆயினும், வேதனையின் தீர்ப்பு நிராகரிப்பாளர்கள் மீது உறுதியாகிவிட்டது” என்று பதிலளிப்பார்கள். 39:72 அப்போது கூறப்படும்: “நுழையுங்கள் நரகத்தின் வாயில்களில்! நீங்கள் என்றென்றும் இங்குதான் கிடக்க வேண்டியுள்ளது! பெருமையடிப்பவர்களுக்கு இது எத்துணைக் கெட்ட தங்குமிடமாகும்!” 39:73 மேலும், எவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து வாழ்ந்தார்களோ அவர்கள் சுவனத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய்க் கொண்டு செல்லப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் அதனை நெருங்கியதும் அதன் வாயில்கள் முன்னரே திறந்து வைக்கப்பட்டிருக்க அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: உங்கள் மீது ஸலாம் சாந்தி உண்டாகட்டும்! நீங்கள் நல்ல விதமாக இருங்கள். என்றென்றும் தங்கியிருப்பதற்காக இதில் நுழைந்து விடுங்கள்! 39:74 அப்போது அவர்கள் கூறுவார்கள்: “இறைவனுக்கே புகழ் அனைத்தும்! அவன் எங்களிடம் தன் வாக்குறுதியை உண்மைப்படுத்திக் காட்டினான். மேலும் எங்களை பூமிக்கு வாரிசுகளாக்கினான். இனி நாங்கள் சுவனத்தில் விரும்புகின்ற இடத்தில் தங்கிக் கொள்ளலாம். ஆகா! எத்தனை சிறந்த கூலி இருக்கிறது, செயல்படக்கூடியவர்களுக்கு!” 39:75 மேலும், நீர் காண்பீர்; அர்ஷைச்* சூழ்ந்த வண்ணம் வானவர்கள் தம் இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள். மேலும், மக்களிடையே முற்றிலும் நியாயமான வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும். புகழ் அனைத்தும் அகிலத்தார் அனைவரையும் பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே!
அத்தியாயம்  அல் முஃமின்  40 : 1-40 / 85
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
40:1 ஹா மீம்; 40:2 இவ்வேதம் அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டிருக்கின்றது. அவனே வல்லமை மிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன்! 40:3 பாவத்தை மன்னிப்பவன்; பாவமன்னிப்புக் கோரி மீளுவதை ஏற்றுக் கொள்பவன். கடும் தண்டனையளிப்பவன்; அருட்பேறு உடையவன்! அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டி யிருக்கிறது. 40:4 அல்லாஹ்வுடைய வசனங்களில் யாரும் தர்க்கம் புரிவதில்லை; நிராகரித்தவர்களைத் தவிர! இதன்பிறகு உலகநாடுகளில் அவர்களுடைய நடமாட்டம் உம்மை எந்த வகையிலும் ஏமாற்றிவிட வேண்டாம். 40:5 இவர்களுக்கு முன்பு நூஹுடைய சமூகத்தாரும் பொய்யென வாதிட்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பிறகு, வேறு பல கூட்டத்தினரும் இவ்வாறு செய்துள்ளனர். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்களுடைய தூதரைப் பிடிக்கப் பாய்ந்தனர். அவர்கள் அனைவரும் அசத்தியத்தின் ஆயுதங்களால் சத்தியத்தை வீழ்த்திட முயன்றனர். ஆனால், இறுதியில் நான் அவர்களைப் பிடித்துக் கொண்டேன். 40:6 பிறகு பாருங்கள், என்னுடைய தண்டனை எத்துணைக் கடுமையானது! ‘அவர்கள் நரகத்தில் நுழைபவர்களே!’ எனும் உம் அதிபதியின் தீர்ப்பு, இவ்வாறு அந்த நிராகரிப்பாளர்கள் அனைவர் மீதும் சார்ந்து விட்டது. 40:7 அர்ஷை* சுமந்து கொண்டிருக்கும் வானவர்களும் அதனைச் சுற்றியிருப்பவர்களும் தம் இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருகிறார்கள். (அவர்கள் கூறுகிறார்கள்:) “எங்கள் அதிபதியே! உனது கருணையாலும், உனது ஞானத்தினாலும் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கிறாய். எவர்கள் பாவ மன்னிப்புக்கோரி உன்னுடைய வழியைப் பின்பற்றினார்களோ அவர்களை மன்னிப்பாயாக! மேலும், அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக! 40:8 மேலும், நீ அவர்களுக்கு வாக்களித்த நிலையான சுவனங்களில் அவர்களை நுழையச் செய்வாயாக! அவர்களுடைய தாய் தந்தையர்களிலும், மனைவியரிலும் மற்றும் அவர்களுடைய வழித்தோன்றல்களிலும் நல்லவர்களாய் இருப்பவர்களையும் (அவர்களுடன் சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக!) திண்ணமாக, நீ வலிமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறாய். 40:9 மேலும், நீ அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாற்றுவாயாக! மறுமை நாளில் எவரை நீ தீமைகளிலிருந்து காப்பாற்றுகிறாயோ, அவர்மீது பெருங்கருணையைப் பொழிந்துவிட்டாய். இதுவே, மகத்தான வெற்றியாகும்.” 40:10 எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களை (மறுமை நாளில்) அழைத்துக் கூறப்படும்: “இறைநம்பிக்கை கொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்தீர்கள். அப்போது அல்லாஹ் உங்கள் மீது கொண்ட கோபம் (இன்று) நீங்கள் உங்கள் மீது கொள்கின்ற கோபத்தை விடவும் கடுமையானது.” 40:11 அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ உண்மையில் எங்களுக்கு இரு தடவை இறப்பும், இரு தடவை வாழ்வும் அளித்துவிட்டாய்! இப்போது நாங்கள் எங்கள் தவறுகளை ஒப்புக்கொள்கிறோம். இனி, இங்கிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?” 40:12 (பதில் கூறப்படும்:) இந்நிலை உங்களுக்கு ஏற்பட்டதற்குக் காரணம், ஏக அல்லாஹ்வின் பக்கம் மட்டும் அழைக்கப்பட்டபோது நீங்கள் ஏற்க மறுத்ததும், அவனோடு மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளப்பட்டபோது அதை ஏற்றுக் கொண்டதும்தான்! இனி தீர்ப்பு வழங்குவது, மேலானவனும் உயர்ந்தவனுமாகிய அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது. 40:13 அவன்தான் உங்களுக்குத் தன்னுடைய சான்றுகளைக் காண்பிக்கிறான். மேலும், வானத்திலிருந்து உங்களுக்காக உணவை இறக்குகிறான். ஆனால், அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிறவன் மட்டுமே (இந்தச் சான்றுகளைக் கொண்டு) படிப்பினை பெறுகிறான். 40:14 எனவே (அல்லாஹ்வின் பக்கம் திரும்புகின்றவர்களே!) உங்கள் தீனை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிய வண்ணம் அவனையே அழையுங்கள்; உங்களுடைய இந்தச் செயல் இறைநிராகரிப்பாளர்களுக்கு எவ்வளவு வெறுப்பூட்டக்கூடியதாய் இருந்தாலும் சரியே! 40:15 அவன் உயர்ந்த அந்தஸ்துகளை உடையவன்; அர்ஷின் உரிமையாளன்; அவன் தன்னுடைய அடியார்களில் தான் நாடுகின்றவர் மீது தனது கட்டளையால் ரூஹை இறக்கி வைக்கிறான்; சந்திக்கவிருக்கும் நாளைக் குறித்து அவர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! 40:16 அந்நாளிலோ மக்கள் எந்தத் திரையுமின்றி வெளிப்பட்டுவிடுவார்கள். அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வை விட்டு மறைந்திருக்காது. (அன்று அழைத்துக் கேட்கப்படும்:) “இன்று ஆட்சியதிகாரம் யாருக்குரியது?” (அனைத்துலகமும் கூறும்:) “எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகன் ஆகிய அல்லாஹ்விற்குரியது.” 40:17 (அப்போது கூறப்படும்:) “இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதைச் சம்பாதித்தானோ, அதற்குரிய கூலி வழங்கப்படும். இன்று எவர் மீதும் எந்தவித அநீதியும் ஏற்படாது. திண்ணமாக, அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிக விரைவானவன்!” 40:18 (நபியே!) அண்மித்துவிட்டிருக்கும் அந்த நாளினைக் குறித்து இவர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வீராக! அன்றோ இதயங்கள் தொண்டையை அடைத்துக் கொள்ளும். மேலும், மக்கள் துக்கத்தை மென்று விழுங்கிக் கொண்டிருப்பார்கள். அப்போது கொடுமைக்காரர்களுக்கு இரக்கம் காட்டுகிற எந்த நண்பனும் கிடைக்கமாட்டான். ஏற்றுக்கொள்ளத் தக்க எந்தப் பரிந்துரையாளனும் கிடைக்க மாட்டான். 40:19 கண்களின் கள்ளத்தனங்களையும், நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அல்லாஹ் அறிகின்றான். 40:20 மேலும், அல்லாஹ் பாரபட்சமின்றி துல்லியமான தீர்ப்பு வழங்குவான். ஆனால், அல்லாஹ்வை விடுத்து யாரை இவர்கள் (இணைவைப்பாளர்கள்) அழைக்கிறார்களோ அவர்கள் எந்த விஷயத்திலும் தீர்ப்பு வழங்கக்கூடியவர்களல்லர். ஐயமின்றி, அல்லாஹ்தான் அனைத்தையும் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 40:21 இவர்கள் என்றாவது பூமியில் சுற்றித் திரிந்து, தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்ததில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக வலிமையுடையவர்களாய் இருந்தார்கள். மேலும், இவர்களைவிட அதிகமாகப் பூமியில் பெரும் பெரும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைப் பிடித்துக் கொண்டான். மேலும், அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுவோர் எவரும் இருக்கவில்லை. 40:22 அவர்களுக்கு நேர்ந்த இந்த கதிக்குக் காரணம், அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தும், அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதுதான். இறுதியில், அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். திண்ணமாக, அவன் வலிமை மிக்கவனாகவும் கடுமையாகத் தண்டிப்பவனாகவும் இருக்கிறான். 40:23 திண்ணமாக, நாம் மூஸாவை நம் அத்தாட்சிகளுடனும், தெளிவான நியமனச் சான்றுகளுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். 40:24 ஆனால் அவர்கள் கூறிவிட்டார்கள், “சூனியக்காரர், பெரும் பொய்யர்” என்று! 40:25 பின்னர், அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “எவர்கள் நம்பிக்கை கொண்டு இவர்களுடன் சேர்ந்துவிட்டார்களோ, அவர்கள் அனைவரின் ஆண் மக்களையும் கொன்றுவிடுங்கள்; பெண்மக்களை உயிரோடு விட்டுவிடுங்கள்.” ஆனால், நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி வீணாகவே போயிற்று. 40:26 ஃபிர்அவ்ன் (ஒரு நாள் தன் அவையோரிடம்) கூறினான்: “விடுங்கள் என்னை! நான் இந்த மூஸாவைக் கொன்று விடுகின்றேன். அவர் அழைத்துப் பார்க்கட்டும், தன் அதி பதியை! இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார் அல்லது நாட்டில் அராஜகம் விளைவிப்பார் என்று நான் அஞ்சுகிறேன்!” 40:27 மூஸா கூறினார்: “கணக்கு வாங்கப்படும் நாளின் மீது நம்பிக்கை கொள்ளாத அனைத்து ஆணவக்காரர்களை விட்டும் நான் என்னுடையவும், உங்களுடையவும் அதிபதியிடம் பாதுகாப்பு தேடியிருக்கிறேன்.” 40:28 (இந்தச் சந்தர்ப்பத்தில்) ஃபிர்அவ்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த தம் நம்பிக்கையை மறைத்து வைத்திருந்த இறைநம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்: “ஒரு மனிதர், அல்லாஹ்தான் என் இறைவன் என்று கூறுகிறார் என்பதற்காகவா அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராயிருந்தால், அவருடைய பொய் அவருக்கே கேடாக அமையும். ஆனால், அவர் உண்மையாளராய் இருந்தால், எந்த பயங்கரமான விளைவுகளைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ, அவற்றில் சில அவசியம் உங்களைப் பீடிக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. 40:29 என் சமுதாய மக்களே! இன்று உங்களுக்கு ஆட்சியதிகாரம் இருக்கிறது; பூமியில் நீங்கள் மேலோங்கியவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால், இறைவனுடைய தண்டனை நம்மீது வந்து விட்டால் நமக்கு உதவக்கூடியவர் யார் இருக்கிறார்?” ஃபிர்அவ்ன் கூறினான்: “எனக்குப் பொருத்தமாகத் தென்படுகின்ற கருத்தைத்தான் நான் உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். மேலும், நேரான வழியைத்தான் நான் உங்களுக்குக் காண்பிக்கின்றேன்.” 40:30 இறைநம்பிக்கை கொண்டிருந்த அந்த மனிதர் கூறினார்: “என்னுடைய சமுதாய மக்களே! இதற்கு முன் பல கூட்டத்தார்களின் மீது வந்த அந்த நாள் உங்களின் மீதும் வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகின்றேன். 40:31 நூஹின் சமூகத்தினர், ஆத், ஸமூத் சமூகத்தினர் மற்றும் அவர்களுக்குப் பின்வந்த சமுதாயத்தினர் ஆகியோர் மீது வந்த நாளைப் போன்று! மேலும், உண்மையில் அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு எந்த அநீதியும் இழைக்க வேண்டுமென்று கருதுவதில்லை. 40:32 மேலும் என் சமூகத்தாரே! அழுது புலம்பி ஒருவர் மற்றவரை அழைக்கும் நாள் உங்களுக்கு வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். 40:33 அன்று நீங்கள் திரும்பிப் பாராமல் ஓடிக்கொண்டிருப்பீர்கள். ஆனால், அவ்வேளை அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார். உண்மையாதெனில், எவனை அல்லாஹ் வழிகெடுக்கின்றானோ அவனுக்கு வழிகாட்டுபவர் எவரும் இருப்பதில்லை. 40:34 இதற்கு முன் யூஸுஃப், உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்கள் அவர் கொண்டு வந்த அறிவுரைகள் குறித்து சந்தேகத்தில் விழுந்து கிடந்தீர்கள். பிறகு அவர் மரணமடைந்தபோது நீங்கள் கூறினீர்கள், “அவருக்குப் பின் அல்லாஹ் எந்தத் தூதரையும் ஒருபோதும் அனுப்பமாட்டான்” என்று இவ்வாறு வரம்பு மீறுவோர், ஐயம் கொள்வோர் அனைவரையும் அல்லாஹ் வழிகேட்டில் தள்ளுகிறான். 40:35 அவர்கள் எத்தகையவர்கள் எனில், அல்லாஹ்வின் வசனங்களைக் குறித்து தர்க்கம் புரிகிறார்கள், எவ்விதச் சான்றும் ஆதாரமும் தங்களிடம் வராமலேயே! இந்த நடத்தை அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டோரிடமும் மிகவும் வெறுப்புக்குரியதாகும். இவ்வாறே ஒவ்வொரு ஆணவக்காரனுடையவும் கொடுங்கோலனுடையவும் உள்ளத்தின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான். 40:36 ஃபிர்அவ்ன் கூறினான்: “ஹாமானே! நீ எனக்கு ஓர் உயர்ந்த கோபுரம் எழுப்பு. ஏனெனில், நான் வழிகளைச் சென்றடைவதற்காக 40:37 வானத்தின் வழிகளை! மேலும், மூஸாவின் இறைவனை நான் எட்டிப்பார்க்க வேண்டும். நான் இந்த மூஸாவைப் பொய்யராகத்தான் கருதுகின்றேன்!” இவ்வாறு ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. மேலும், அவன் நேரிய வழியை விட்டுத் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சிகள் அனைத்தும் அவனது அழிவுப்பாதையில்தான் செலவாயின. 40:38 இறைநம்பிக்கை கொண்டிருந்த அந்த மனிதர் கூறினார்: “என் சமுதாய மக்களே! நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குச் சரியான வழியைத்தான் காட்டுகின்றேன். 40:39 என் சமூகத்தினரே! இந்த உலக வாழ்க்கை சில நாட்கள்தாம்! திண்ணமாக, மறுமைதான் நிலையான தங்குமிடமாகும்; 40:40 தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)