அத்தியாயம்  லுக்மான்  31 : 22-34 / 34
31:22 மேலும், எவர் தன்னுடைய நடத்தையையும் நல்லதாக்கிக் கொண்டு தன்னை முற்றிலுமாக அல்லாஹ்விடம் ஒப்படைத்தாரோ அவர் உண்மையில் நம்பகமான உறுதியானதொரு பிடிமானத்தை இறுகப்பிடித்துக் கொண்டவராவார். மேலும், அனைத்து விவகாரங்களுடையவும் இறுதி முடிவு அல்லாஹ்விடமே உள்ளது. 31:23 இனி யாரேனும் நிராகரித்தால், அவனுடைய நிராகரிப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். எம்மிடமே அவர்கள் திரும்பி வரவேண்டியுள்ளது. அப்போது அவர்கள் என்ன செய்து விட்டு வந்துள்ளார்கள் என்பதை அவர்களுக்கு நாம் அறிவித்து விடுவோம். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் மறைந்திருக்கும் இரகசியங்களை அறிந்தவனாக இருக்கின்றான். 31:24 சொற்ப காலம் உலகில் இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு நாம் வாய்ப்பளித்துக் கொண்டிருக்கின்றோம். பிறகு கடினமான ஒரு வேதனையின் பக்கம் அவர்களை நிர்ப்பந்தமாக இழுத்துக் கொண்டுவருவோம். 31:25 வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார் என்று நீர் இவர்களிடம் கேட்டால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள். “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று நீர் கூறும். ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை. 31:26 வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. திண்ணமாக, அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக் குரியவனுமாவான். 31:27 பூமியிலுள்ள மரங்கள் அனைத்தும் எழுதுகோல்களானாலும், கடல் முழுவதும் (மையாகிவிட்டாலும்) அதற்கு மேல் இன்னும் ஏழு கடல்களின் மை அளித்து உதவினாலும்கூட அல்லாஹ்வின் வாக்குகள் (எழுதித்) தீர்ந்து போகமாட்டா. திண்ணமாக அல்லாஹ் வலிமைமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான். 31:28 மனிதர்களாகிய உங்களைப் படைப்பதும், பின்னர், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதும் (அவனைப் பொறுத்து) ஒரே ஓர் உயிரைப் (படைத்துப் பின்னர் உயிர் கொடுத்து எழுப்புவது) போன்றதேயாகும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 31:29 நீங்கள் காணவில்லையா? அல்லாஹ்தான் இரவைப் பகலில் கோத்துக்கொண்டு வருகின்றான். பகலை இரவில் கோத்துக் கொண்டு வருகின்றான். மேலும், அவன் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை இயங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும், நீங்கள் செய்கின்றவற்றை, அல்லாஹ் நன்கு புரிந்தவன் (என்பதையும் நீங்கள் அறியவில்லையா?) 31:30 இவற்றிற்குக் காரணம் அல்லாஹ்தான் சத்தியமானவன் என்பதும், அவனைத் தவிர இவர்கள் வணங்குபவை அனைத்தும் அசத்தியமானவை என்பதும், மேலும், அல்லாஹ்வே உயர்ந்தவனாகவும் மேலானவனாகவும் இருக்கின்றான் என்பதுமேயாகும்! 31:31 நீங்கள் காணவில்லையா? அல்லாஹ்வின் அருளினால் கப்பல் கடலில் செல்கின்றது; அவன் தன்னுடைய சான்றுகளில் சிலவற்றை உங்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், பொறுமையாளராகவும், நன்றி செலுத்துபவராகவும் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்மையில் இதில் அநேக சான்றுகள் உள்ளன. 31:32 மேலும் (கடலில்) மலைகளைப் போன்ற அலை இவர்களைச் சூழ்ந்துகொண்டால், இவர்கள் தங்கள் தீனை மார்க்கத்தை அல்லாஹ்வுக்கே முற்றிலும் உரித்தாக்கியவர்களாய் அவனிடம் பிரார்த்திக்கின்றார்கள். பின்னர் அவன் அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும்போது அவர்களில் சிலர் மிதமான போக்கைக் கைக்கொள்கின்றனர். வேறு யாரும் நம்முடைய சான்றுகளை மறுப்பதில்லை; பெரும் துரோகிகளையும், முற்றிலும் நன்றி கெட்டவர்களையும் தவிர! 31:33 மனிதர்களே! உங்கள் அதிபதியின் கோபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். மேலும், ஒரு நாளைக் குறித்து அஞ்சுங்கள். அன்று எந்தத் தந்தையும் தன் மகனுக்காக எவ்வித உதவியும் செய்ய முடியாது. மேலும், எந்த மகனும் தன் தந்தைக்காக எவ்வித உதவியும் செய்ய முடியாது. நிச்சயமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எனவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம். மேலும், ஏமாற்றுக்காரனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். 31:34 (இறுதித் தீர்ப்புக்குரிய) அந்த வேளையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கின்றான். அன்னையரின் கருவறைகளில் வளர்ந்து கொண்டிருப்பவை என்ன என்பதையும் அவனே அறிவான். எந்த மனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகின்றான் என்பதை அறிவதில்லை. தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக, அல்லாஹ்தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
அத்தியாயம்  அஸ்ஸஜ்தா  32 : 1-30 / 30
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
32:1 அலிஃப், லாம், மீம். 32:2 எவ்வித ஐயமுமின்றி அகில உலகின் அதிபதியிடமிருந்தே இவ்வேதம் இறக்கியருளப்பட்டிருக்கின்றது. 32:3 “இவர் சுயமாக இதனை இயற்றியுள்ளார்” என்று இம்மக்கள் கூறுகின்றார்களா, என்ன? அவ்வாறில்லை. மாறாக, இது உம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமேயாகும்; அவர்களிடம் உமக்கு முன்பு எச்சரிக்கை செய்பவர் எவரும் வந்திருக்காத இந்தச் சமுதாயத்தினரை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! அவர்கள் அதன் மூலம் நேர்வழி பெறக்கூடும்! 32:4 அல்லாஹ் எத்தகையவன் எனில், வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையிலுள்ள அனைத்துப் பொருள்களையும் ஆறுநாட்களில் படைத்தான். பின்னர், அர்ஷின்* மீது அமர்ந்தான். அவனைத் தவிர உங்களுக்கு பாதுகாப்பளிப்பவரும் யாரும் இல்லை. மேலும், அவனிடம் பரிந்துரை செய்பவரும் எவருமில்லை. இனியும் நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்களா, என்ன? 32:5 அவன் வானங்கள் முதல் பூமி வரை உலகின் எல்லாக் காரியங்களையும் நிர்வகிக்கின்றான். அந்நிர்வாகத்தைப் பற்றிய அறிக்கை ஒருநாள் அவனிடம் உயர்ந்து செல்கின்றது. அந்நாள் உங்கள் கணக்குப்படி ஓராயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். 32:6 அவன்தான் மறைவான மற்றும் வெளிப்படையான அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், வலிமை மிக்கவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். 32:7 அவன் படைத்த எந்த ஒரு பொருளையும் அழகாகவே படைத்துள்ளான். அவன் களிமண்ணிலிருந்து, மனிதனைப் படைக்கத் தொடங்கினான். 32:8 பின்னர் அவனுடைய சந்ததிகளை அற்பமான நீரைப் போன்ற ஒருவித சத்திலிருந்து படைத்தான். 32:9 பிறகு, குறைபாடு இல்லாதவாறு அவனைச் சீரமைத்து அவனுள் தன்னுடைய உயிரை ஊதினான். மேலும், உங்களுக்குக் காதுகளையும், இதயங்களையும் கொடுத்தான். நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். 32:10 மேலும், “நாம் மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிட்ட பிறகு மீண்டும் புதிதாய்ப் படைக்கப்படுவோமா?” என்று இவர்கள் கேட்கின்றார்கள். உண்மை என்னவெனில், இவர்கள் தங்களுடைய இறைவனின் சந்திப்பையே நிராகரிப்பவர்களாய் இருக்கின்றார்கள். 32:11 இவர்களிடம் கூறும்: “உங்கள்மீது நியமிக்கப்பட்ட மரணத்தின் வானவர் உங்களை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்வார். பின்னர், உங்களுடைய இறைவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!” 32:12 அந்தோ! இந்தக் குற்றவாளிகள் தலை குனிந்தவர்களாய்த் தம் இறைவன் திருமுன் நிற்கும் வேளையில் நீங்கள் பார்க்க வேண்டுமே! (அவ்வேளை அவர்கள் இப்படிக் கூறிக்கொண்டிருப்பார்கள்:) “எங்கள் இறைவனே! நாங்கள் நன்கு பார்த்துவிட்டோம்; கேட்டுவிட்டோம். எனவே, எங்களைத் திரும்ப அனுப்பி வைப்பாயாக நாங்கள் நற்செயல் புரிவதற்காக! இப்போது எங்களுக்கு உறுதி வந்துவிட்டது!” 32:13 (விடை பகரப்படும்:) “நாம் நாடியிருந்தால் ஆரம்பத்திலேயே ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியைக் காட்டி இருப்போம். ஆயினும், ‘ஜின்கள் மற்றும் மனிதர்கள் அனைவரைக் கொண்டும் நான் நரகத்தை நிரப்புவேன்’ என்று கூறியிருந்த என்னுடைய வாக்கு நிறைவேறிவிட்டது! 32:14 எனவே, இப்போது சுவையுங்கள், நீங்கள் இந்நாளின் சந்திப்பை மறந்துவிட்டிருந்ததற்கான விளைவை! நாமும் இப்போது உங்களை மறந்துவிட்டோம். மேலும், சுவையுங்கள் நிரந்தரமான வேதனையை, நீங்கள் செய்த தீயசெயல்களுக்குப் பகரமாய்!” 32:15 நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்பவர்கள் யாரெனில், அவ்வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டி, அறிவுரை கூறப்படும்போது அவர்கள் ஸஜ்தாவில் விழுந்து விடுகின்றார்கள். மேலும், இறைவனைப் புகழ்ந்து துதிக்கின்றார்கள். மேலும், அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். 32:16 மேலும், அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளைவிட்டும் உயர்ந்து விடுகின்றன. அச்சத்துடனும், ஆவலுடனும் தங்கள் இறைவனை பிரார்த்திக்கின்றார்கள்! மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து செலவும் செய்கின்றார்கள். 32:17 அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள். 32:18 நம்பிக்கையாளராய் இருப்பவர் பாவம் செய்தவர் போல ஆகிவிடுவாரா? இவ்விருவரும் சமமாக முடியாது! 32:19 எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு சுவனபதிகளில் தங்குமிடங்கள் உள்ளன; அவர்களை உபசரிப்பதற்கு! அவர்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்குப் பகரமாக! 32:20 மேலும், எவர்கள் பாவத்தைச் செய்கின்றார்களோ, அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அவர்கள் அதிலிருந்து வெளியேற விரும்பும்போதெல்லாம் அதிலேயே தள்ளப்படுவார்கள். மேலும், அவர்களிடம் கூறப்படும்: “சுவையுங்கள், எந்த நரக வேதனையைப் பொய்யென்று கூறிக்கொண்டிருந்தீர்களோ அதே நரக வேதனையை!” 32:21 மேலும், அந்தப் பெரும் வேதனை வருமுன் இவர்களுக்கு இவ்வுலகில் (ஏதேனும் ஒரு சிறு) வேதனையை சுவைக்கக் கொடுப்போம்; இவர்கள் (தங்களது எதிர்ப்புப் போக்கைவிட்டு) விலகி விடக்கூடும் என்பதற்காக! 32:22 மேலும், தன்னுடைய இறைவனின் வசனங்கள் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்ட பிறகும் அதனைப் புறக்கணித்துவிட்டவனை விடக் கொடிய அக்கிரமக்காரன் யார்? இத்தகைய குற்றவாளிகளை நாம் பழிவாங்கியே தீருவோம்! 32:23 இதற்கு முன்பு நாம் மூஸாவுக்கு வேதம் வழங்கியிருந்தோம். ஆகையால், அதுபோன்ற வேதத்தை நீர் பெறுவதில் எவ்வித சந்தேகமும் உமக்கு வர வேண்டாம். அவ்வேதத்தை இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு ஒரு வழிகாட்டியாக ஆக்கினோம். 32:24 மேலும், அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, நம் வசனங்கள் மீது உறுதிப்பாடும் கொண்டிருந்தபோது அவர்களிலிருந்து தலைவர்களை நாம் தோற்றுவித்தோம். அவர்களோ நம் கட்டளையைக் கொண்டு வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள். 32:25 (இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள்) தமக்கிடையில் கருத்து வேறுபாடு கொண்டிருந்த விஷயங்களில் திண்ணமாக உம் இறைவனே மறுமைநாளில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். 32:26 இவர்களுக்கு முன்பு வாழ்ந்து சென்ற எத்தனையோ பல சமூகங்களை நாம் அழித்துவிட்டிருக்கின்றோம் (எனும் வரலாற்று நிகழ்ச்சியில்) இவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் கிடைக்கவில்லையா, என்ன? அவர்கள் வசித்த அதே இடங்களில் இன்று இவர்கள் நடந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள்! திண்ணமாக, இவற்றில் பெரும் சான்றுகள் உள்ளன. என்ன, இவர்கள் செவியுறுவதில்லையா? 32:27 மேலும், இவர்கள் (இக்காட்சியை ஒருபோதும்) பார்க்கவில்லையா, என்ன? வறண்டு போன தரிசு பூமியின் பக்கமாக நாம் நீரை ஒலித்தோடச் செய்கின்றோம். அதே பூமியிலிருந்து பயிர்களை முளைக்கச் செய்கின்றோம். அதிலிருந்து இவர்களுடைய கால்நடைகளுக்கும் தீனி கிடைக்கின்றது; இவர்களும் உண்ணுகின்றார்கள்! இவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லையா, என்ன? 32:28 மேலும், இந்த மக்கள் கேட்கின்றனர்: “இந்தத் தீர்ப்பு எப்போது ஏற்படும்? நீங்கள் உண்மை கூறுபவர்களாயிருந்தால்!” 32:29 இவர்களிடம் நீர் கூறும்: “தீர்ப்பு நாளன்று நம்பிக்கை கொள்வது, நிராகரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது. மேலும், அவர்களுக்கு எவ்வித அவகாசமும் கொடுக்கப்படாது!” 32:30 எனவே, இவர்கள் போக்கிலேயே இவர்களை விட்டுவிடும்; மேலும், எதிர்பார்த்திரும்; இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கட்டும்!
அத்தியாயம்  அல் அஹ்ஸாப்  33 : 1-30 / 73
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
33:1 நபியே! அல்லாஹ்வுக்கு அஞ்சும்! மேலும், நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். உண்மையில், அல்லாஹ்தான் நன்கு அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 33:2 உம் இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுகின்ற விஷயத்தை நீர் பின்பற்றும்! நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். 33:3 அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! பொறுப்பேற்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். 33:4 அல்லாஹ் எந்த மனிதனுள்ளும் இரு இதயங்களை அமைத்திடவில்லை, நீங்கள் “ளிஹார்”* செய்கின்ற உங்கள் மனைவிகளை உங்களுடைய அன்னையராய் அவன் ஆக்கவு மில்லை. மேலும், அவன் உங்களுடைய வளர்ப்பு மகன்களை உங்களின் சொந்த மகன்களாய் ஆக்கவுமில்லை. இவை நீங்களே உங்கள் வாய்களிலிருந்து வெளிப்படுத்தும் வெறும் வார்த்தைகளாகும். ஆனால், அல்லாஹ் சத்தியத்(தின் அடிப்படையிலான)தைக் கூறுகின்றான். மேலும்; அவனே நேரிய வழியின் பக்கம் வழி காட்டுகின்றான். 33:5 வளர்ப்பு மகன்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்து அழையுங்கள். இது அல்லாஹ்விடம் மிக்க நீதமானதாகும். ஆனால் அவர்களுடைய தந்தையர் யார் என்று நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுடைய மார்க்கம் சார்ந்த சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கின்றார்கள். தெரியாமல் நீங்கள் ஏதேனும் பேசிவிட்டால், அதற்காக உங்கள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஆயினும், மனப்பூர்வமாக நாடி நீங்கள் கூறினால் அது நிச்சயம் குற்றமாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான். 33:6 திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார். மேலும், நபியின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராவர். ஆயினும், அல்லாஹ்வின் வேதத்தின்படி ஏனைய பொது முஸ்லிம்களை விடவும், ஹிஜ்ரத்* செய்து வந்தவர்களை விடவும் இரத்தபந்த உறவினர்கள்தாம் ஒருவர் மற்றவருக்கு உதவி புரிவதில் அதிக உரிமையுடையவர்கள் ஆவர். ஆயினும், உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை (செய்ய விரும்பினால்) செய்துகொள்ளலாம். இந்த விதி இறைவேதத்தில் எழுதப்பட்டுள்ளது. 33:7 மேலும் (நபியே!) எல்லா நபிமார்களிடமிருந்தும் என்ன வாக்குறுதியை நாம் வாங்கினோமோ அதனை நீர் நினைவு கூரும்: உம்மிடமிருந்தும், மேலும் நூஹ், இப்ராஹீம், மூஸா மற்றும் மர்யத்தின் குமாரர் ஈஸா ஆகியோரிடமிருந்தும் (நாம் வாக்குறுதி வாங்கினோம்). அனைவரிடமிருந்தும் நாம் வலு வான வாக்குறுதி வாங்கியிருக்கின்றோம். 33:8 உண்மையாளர்களிடம் அவர்களின் உண்மை குறித்து (அவர்களின் இறைவன்) விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக! மேலும், நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார் செய்தே வைத்திருக்கின்றான். 33:9 நம்பிக்கையாளர்களே! (அண்மையில்) அல்லாஹ் உங்களுக்குச் செய்திருக்கின்ற பேருதவியை நினைவுகூருங்கள்: எதிரிப்படையினர் உங்களைத் தாக்க வந்தபோது, நாம் அவர்கள் மீது ஒரு கடும் புயல்காற்றை ஏவினோம். உங்கள் கண்களுக்குத் தென்படாத படைகளையும் அனுப்பினோம். அப்போது நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். 33:10 பகைவர்கள் மேலிருந்தும், கீழிருந்தும் உங்கள் மீது படையெடுத்து வந்த நேரத்தில் உங்கள் கண்கள் பீதியினால் மருண்டுவிட்டன; இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொண்டன! மேலும், நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி விதவிதமான சந்தேகங்கள் கொள்ளத் தலைப்பட்டீர்கள். 33:11 அந்த(க் கடினமான) நேரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நன்கு சோதிக்கப்பட்டார்கள். மேலும், கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார்கள். 33:12 மேலும், அந்த நேரத்தை நினைவுகூருங்கள்: ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் செய்திருந்த வாக்குறுதிகள் யாவும் ஏமாற்று வேலையே தவிர வேறொன்றும் இல்லை’ என்று நயவஞ்சகர்களும் மற்றும் எவர்களின் உள்ளங்களில் பிணி இருந்ததோ அவர்களும் வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருந்தார்கள்; 33:13 அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் “யத்ரிப் வாசிகளே! இனி, நீங்கள் இங்கு தங்கியிருக்க உங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. திரும்பிச் சென்றுவிடுங்கள்!” என்று கூறினார்கள்; மேலும், அவர்களில் மற்றொரு பிரிவினர் “எங்களுடைய வீடுகள் ஆபத்திற்குள்ளாகி இருக்கின்றன” என்று கூறி, நபியிடம் அனுமதி கோரிக் கொண்டிருந்தனர். ஆனால், அவை ஆபத்திற்குள்ளாகியிருக்கவில்லை. உண்மை யாதெனில், அவர்கள் (போர்க் களத்திலிருந்து) ஓடிவிடவே விரும்பினார்கள். 33:14 நகரின் நாற்புறங்களிலிருந்தும் எதிரிகள் ஊடுருவி, பிறகு குழப்பம் விளைவிக்குமாறு இவர்கள் அழைக்கப்பட்டிருந்தால், அதற்கு இவர்கள் தயாராயிருந்திருப்பார்கள். குழப்பத்தில் பங்கு பெறுவதில் அவர்களுக்குத் தயக்கம் ஏற்பட்டிருக்காது, சிறிதளவே தவிர! 33:15 இதற்கு முன்னரோ ‘புறங்காட்டி ஓடமாட்டோம்’ என்று அல்லாஹ்விடம் இவர்கள் வாக்குறுதி தந்திருந்தார்கள். மேலும், அல்லாஹ்விடம் அளித்திருந்த வாக்குறுதி விசாரிக்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. 33:16 (நபியே!) நீர் இவர்களிடம் கூறும்: “நீங்கள் மரணத்திலிருந்து அல்லது கொல்லப்படுவதிலிருந்து ஓடினால் அவ்வாறு ஓடுவது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. அதன் பின்னர் வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க சிறிதளவு சந்தர்ப்பமே உங்களுக்குக் கிடைக்கும். 33:17 மேலும், இவர்களிடம் கேளும்: “அல்லாஹ் உங்களுக்குத் தீங்களிக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவர் யார்? அவன் உங்கள் மீது கருணை பொழிய நாடினால் அவனுடைய கருணையைத் தடுக்க யாரால் முடியும்?” அல்லாஹ்வுக்கு எதிராக எந்த ஆதரவாளரையும் உதவியாளரையும் இவர்கள் காணமாட்டார்கள். 33:18 உங்களில் எவர்கள் (போர்ப் பணிகளில்) இடையூறு விளைவிக்கின்றார்களோ அவர்களையும், மேலும், “எங்களிடம் வந்துவிடுங்கள்” என்று தங்களின் சகோதரர்களிடம் கூறுகின்ற வர்களையும் அல்லாஹ் நன்கறிவான். மேலும், அவர்கள் போரில் பங்கு கொண்டாலும், பெயரளவுக்குத்தான் பங்கு பெறுவார்கள். 33:19 உங்களுக்கு உதவுவதில் அவர்கள் கடும் கஞ்சத்தனம் உள்ளவர்களாய் இருப்பார்கள். ஆபத்தான நேரம் வந்து விட்டாலோ, மரணத்தருவாயில் இருப்பவனுக்கு மயக்கம் வருவது போன்று கண்களைச் சுழற்றியவாறு உம் பக்கம் பார்ப்பார்கள். ஆனால், ஆபத்து நீங்கிவிட்டாலோ, இதே மக்கள் ஆதாயங்களின் மீது பேராசை கொண்டவர்களாய் (கத்தரிக்கோலைப் போன்று) கூர்மையான நாவுகளோடு உங்களை வரவேற்க வந்துவிடுகின்றார்கள். இத்தகையவர்கள் அறவே நம்பிக்கை கொள்ளவில்லை. எனவே, அல்லாஹ் இவர்களுடைய செயல்கள் அனைத்தையும் வீணாக்கிவிட்டான். மேலும், இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்து மிகவும் எளிதானதாகும். 33:20 இவர்கள் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்; தாக்க வந்த கூட்டத்தார் இன்னும் திரும்பிச் செல்லவில்லை என்று! அவர்கள் மீண்டும் தாக்க வந்துவிட்டாலோ, அப்போது எங்கேனும் (பாலைவனத்தில்) நாட்டுப்புற அரபிகளுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட வேண்டும். மேலும், அங்கிருந்தவாறு உம்முடைய நிலைமையைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். ஒரு வேளை இவர்கள் உங்கள் மத்தியில் இருந்தாலும் போரில் குறைவாகவே பங்கு பெறுவார்கள். 33:21 உண்மை யாதெனில், உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருந்தது உங்களில் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றவராகவும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவர்க்கும்! 33:22 மேலும், உண்மையான நம்பிக்கையாளர்கள் (நிலை இவ்வாறு இருந்தது: அதாவது) தாக்க வந்த கூட்டத்தாரை அவர்கள் பார்த்ததுமே உரக்கக் கூறினார்கள்: “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் வாக்களித்தது இதுதான்.” அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வாக்கு முற்றிலும் உண்மையாக இருந்தது. இந்நிகழ்ச்சி நம்பிக்கையையும் அடிபணிதலையும் அவர்களுக்கு இன்னும் அதிகப்படுத்திவிட்டது. 33:23 நம்பிக்கையாளரில் இத்தகையவர்களும் இருக்கின்றனர்: அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டிவிட்டிருக்கிறார்கள்; அவர்களில் சிலர் தமது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள்; இன்னும் சிலர் அதற்கான நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள் அவர்கள் (தம்முடைய நடத்தையில்) எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. 33:24 (இதுவெல்லலாம் நிகழ்ந்தது) எதற்காகவெனில், அல்லாஹ் வாய்மையாளர்களுக்கு அவர்களுடைய வாய்மைக்கான கூலியை வழங்குவதற்காகவும் மேலும், நயவஞ்சகர்களுக்கு நாடினால் அவன் தண்டனை அளிப்பதற்காகவும், நாடினால் அவர்களுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்வதற்காகவும்தான்! நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான். 33:25 அல்லாஹ் நிராகரிப்பாளர்களைத் திருப்பிவிட்டான். அவர்கள் எந்தப் பயனும் அடையாமல் தம் மன எரிச்சலுடனே அப்படியே திரும்பிவிட்டனர். நம்பிக்கையாளர்களின் சார்பில் போரிடுவதற்கு அல்லாஹ்வே போதுமாகிவிட்டான். அல்லாஹ் பேராற்றலுடையவனாகவும் யாவற்றையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான். 33:26 மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர்கள் இவ்வாறு தாக்க வந்த படையினர்க்கு உதவினார்களோ அவர்களை அல்லாஹ், அவர்களுடைய கோட்டைகளிலிருந்து இறக்கிக் கொண்டு வந்தான். மேலும், அவர்களுடைய உள்ளங்களில் திகிலை ஏற்படுத்தினான். நீங்கள் (இன்று அவர்களில்) ஒரு பிரிவினரை கொன்றுகொண்டும் மற்றொரு பிரிவினரைக் கைது செய்துகொண்டும் இருக்கிறீர்கள். 33:27 மேலும், அவன் அவர்களுடைய நிலத்திற்கும், அவர்களுடைய இல்லங்களுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும் உங்களை வாரிசுகளாக்கினான்; நீங்கள் கால் வைத்திருக்காத பூமியையும் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். 33:28 நபியே! நீர் உம்முடைய மனைவிமார்களிடம் கூறிவிடும்: “நீங்கள் உலகவாழ்வையும், அதன் அழகையும் விரும்புகிறீர்கள் என்றால், வாருங்கள்! நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன். 33:30 நபியின் மனைவியரே! உங்களில் எவரேனும் வெளிப்படையான, மானக்கேடான செயலைச் செய்தால் அவருக்கு இருமடங்கு வேதனை அளிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதான காரியமாகும். 33:31 மேலும், உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தால், மேலும், நற்செயல் புரிந்தால், அவர்களுக்கு நாம் இருமடங்கு கூலி வழங்குவோம். மேலும், நாம் அவர்களுக்காக கண்ணியமான நற்பாக்கியங்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளோம்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)