அத்தியாயம்  அந்நூர்  24 : 21-64 / 64
24:21 இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினால், மானக்கேடானவை மற்றும் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான். அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் உங்களில் எவருமே ஒருபோதும் மாசற்றவராய் விளங்கியிருக்க முடியாது. ஆயினும், அல்லாஹ், தான் நாடுகின்றவர்களைத் தூய்மையாக்குகின்றான். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான். 24:22 உங்களிடையே பண்பு நலன்களும், வசதிகளும் உடையவர்கள், ‘தங்களுடைய உறவினர்கள், வறியவர்கள் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்கள் ஆகியோருக்குக் கொடுத்துதவ மாட்டோம்’ என்று சத்தியம் செய்ய வேண்டாம். அவர்களை மன்னித்து விட வேண்டும்; பொறுத்துக்கொள்ளவும் வேண்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவதில்லையா என்ன? மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். 24:23 கற்புடைய, கள்ளங்கபடமற்ற, இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் மீது எவர்கள் அவதூறு கூறுகின்றார்களோ அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குக் கடும் வேதனையும் இருக்கிறது. 24:24 அவர்கள் செய்த தீவினைகளைக் குறித்து அவர்களுடைய நாவுகளும் அவர்களுடைய கைகளும், கால்களும் எந்நாளில் அவர்களுக்கு எதிராக சாட்சியம் கூறுமோ அந்த நாளினை அவர்கள் மறந்துவிட வேண்டாம். 24:25 அந்நாளில் அவர்களுக்குரிய நியாயமான கூலியை அல்லாஹ் அவர்களுக்கு நிறைவாக அளிப்பான். மேலும், அவர்களுக்குத் தெரிந்துவிடும்; அல்லாஹ்தான் உண்மையானவன்; உண்மையை உண்மையாக்கிக் காட்டுபவன் என்று! 24:26 ஒழுக்கங்கெட்ட பெண்கள், ஒழுக்கங்கெட்ட ஆண்களுக்கும், ஒழுக்கங்கெட்ட ஆண்கள், ஒழுக்கங்கெட்ட பெண்களுக்கும் உரியவர்களாவர். தூய்மையான பெண்கள் தூய்மையான ஆண்களுக்கும், தூய்மையான ஆண்கள் தூய்மையான பெண்களுக்கும் உரியவர்களாவர். புனைந்து உரைப்போரின் பழிச்சொற்களிலிருந்து அவர்களின் பண்பாடு தூய்மையானது. அவர்களுக்குப் பாவமன்னிப்பும் நற்பேறும் இருக்கின்றன. 24:27 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும், அவர்களுக்கு ஸலாம் கூறாத வரையிலும் நுழையாதீர்கள். இந்த வழிமுறைதான் உங்களுக்கு மிகச்சிறப்புடையதாகும். நீங்கள் இதனை நினைவில் வைப்பீர்கள் என எதிர்பார்க்கலாம். 24:28 ஆனால், அங்கு எவரையும் நீங்கள் காணவில்லையென்றால், உங்களுக்கு அனுமதி அளிக்கப்படாத வரையில் அங்கே நுழையாதீர்கள். மேலும், உங்களிடம் “திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறப்பட்டால், உடனே திரும்பிவிடுங்கள். இதுவே, உங்களுக்கு மிகத் தூய்மையான நடைமுறையாகும். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான். 24:29 ஆயினும் யாரும் குடியிருக்காத உங்களுக்குப் பலன் தரக்கூடிய ஏதாவது பொருள்கள் உள்ள வீடுகளில் நுழைவதில் உங்கள் மீது யாதொரு தவறுமில்லை. நீங்கள் வெளிப்படுத்துபவை மற்றும் மறைத்து வைப்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்! 24:30 (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான். 24:31 மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள் மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழுகின்ற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி எதுவும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி (வேறு எவரிடத்திலும்) தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம். தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக தங்களுடைய கால்களை(ப் பூமியில்) அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புக் கோரி மீளுங்கள். நீங்கள் வெற்றியடையக்கூடும். 24:32 உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்கும், மேலும், உங்களுடைய ஆண்பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் வறியவர்களாயிருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை தனவந்தர்களாக்குவான். அல்லாஹ் மிகவும் விசாலமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். 24:33 திருமணத்திற்குரிய வசதி வாய்ப்பைப் பெறாதவர்கள் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கும்வரை ஒழுக்கத்தூய்மையை மேற்கொள்ளட்டும். உங்களுடைய அடிமைகளில் எவர்கள் ‘முகாத்தபத்’* கோருகின்றார்களோ அவர்களிடம் நன்மை இருப்பதாக நீங்கள் அறிந்தால் அவர்களோடு ‘முகாத்தபத்’ செய்து கொள்ளுங்கள். மேலும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள். மேலும், உலக வாழ்க்கையின் இலாபங்களைத் தேடிக்கொள்வதற்காக உங்கள் அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்காக பலவந்தப்படுத்தாதீர்கள். அவர்கள் சுயமே ஒழுக்கத்தூய்மையை விரும்பும்போது அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால், அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்ட பின்பும் அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவனாகவும் மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். 24:34 மேலும், நாம் தெள்ளத்தெளிவாக வழிகாட்டும் வசனங்களை உங்களுக்கு அருளி இருக்கின்றோம்; உங்களுக்கு முன் சென்ற சமூகங்களின் (படிப்பினை மிக்க) உதாரணங்களையும் நாம் உங்கள் முன் வைத்துள்ளோம். மேலும், இறையச்சம் கொள்ளக் கூடியவர்களுக்குப் பயனளிக்கும் நல்லுரைகளையும் நாம் வழங்கியுள்ளோம். 24:35 அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான். (பேரண்டத்தில்) அவனது ஒளிக்கு உவமை இவ்வாறாகும்; ஒரு மாடத்தில் விளக்கு வைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விளக்கு ஒரு கண்ணாடிக் கூண்டினுள் இருக்கிறது; அக்கண்ணாடிக் கூண்டு முத்தாய் ஒளிரும் தாரகை போன்றுள்ளது. அவ்விளக்கு கிழக்கைச் சேர்ந்ததாயும், மேற்கைச் சேர்ந்ததாயும் இல்லாத, அருள் பெற்ற ஒலிவ மரத்தின் எண்ணெய் கொண்டு எரிக்கப்படுகின்றது. அதன் எண்ணெய் தானாக ஒளிரவே செய்யும்; நெருப்பு அதனைத் தீண்டாத போதிலும்! (இவ்வாறு) ஒளிக்கு மேல் ஒளி (அதிகமாவதற்கான அனைத்துக் காரணங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கின்றன.) அல்லாஹ் தான் நாடுவோர்க்கு தன்னுடைய ஒளியின் பக்கம் வழிகாட்டுகின்றான். அவன் உவமைகளின் வாயிலாக மக்களுக்கு விஷயத்தை விளக்குகின்றான். மேலும், அவன் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். 24:36 (அவனது ஒளியின்பால் வழிகாட்டுதலைப் பெற்றவர்கள்) எந்த இல்லங்கள் உயர்த்தப்படுவதற்கும், எங்கே தன் பெயர் நினைவுகூரப்படுவதற்கும் அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளானோ அந்த இல்லங்களில் காணப்படுகிறார்கள். அவற்றில் காலை, மாலை நேரங்களில் அவனைத் துதித்துக் கொண்டிருப்பவர்கள். 24:37 எத்தகையோர் எனில், இறைவனை நினைவுகூருவதை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவது மற்றும் ஜகாத் கொடுப்பதை விட்டும் வியாபாரமும் கொள்வினை கொடுப்பினையும் அவர்களைப் பாராமுகமாக்கி விடுவதில்லை; இதயங்கள் நிலைகுலைந்து, பார்வைகள் நிலைகுத்தி விடக்கூடிய ஒருநாள் குறித்து அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள். 24:38 (அவர்கள் இப்படி ஏன் செய்கின்றார்கள் என்றால்) அவர்கள் செய்த மிக அழகிய செயல்களுக்குரிய கூலியை அல்லாஹ் அவர்களுக்கு அருள்வதற்காகவும் அவனுடைய அருளால் இன்னும் அதிகமாக அவர்களுக்கு வழங்குவதற்காகவும்தான்! மேலும், அல்லாஹ் தான் நாடுவோர்க்கு கணக்கின்றி வழங்குகின்றான். 24:39 (இதற்கு மாறாக) எவர்கள் இறைவனை நிராகரித்தார்களோ அவர்களின் செயல்களுக்கு உவமை (நீரில்லாப்) பாலைவனத்தின் கானலாகும். தாகித்தவன் அதனை நீர் என்று கருதுகின்றான். இறுதியில் அவன் அந்த இடத்திற்கு வந்தபோது, அங்கு எதையும் காணவில்லை. ஆனால், அவன் அங்கு கண்டுகொண்டது அல்லாஹ்வை! அல்லாஹ்வோ அவனுக்குரிய கணக்கை முழுமையாகத் தீர்த்துவிடுகின்றான். அல்லாஹ் கணக்கு வாங்குவதில் விரைவானவனாக இருக்கின்றான். 24:40 அல்லது (நிராகரிப்பாளர்களின் செயல்கள்) ஆழ்கடலில் இருள்களைப் போன்று உள்ளன. அந்தக் கடலை ஓர் அலை மூடியுள்ளது; அதற்கு மேல் மற்றொரு அலை; அதற்கு மேல் மேகம்! (இப்படியாக) இருளுக்கு மேல் இருள் என எங்கும் இருள்மயம்! மனிதன் தனது கையை நீட்டினால் அதைக்கூட அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை வழங்கவில்லையோ பிறகு அவனுக்கு வேறு எந்த ஒளியுமில்லை! 24:41 வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும், சிறகடித்துப் பறக்கும் பறவைகளும் அல்லாஹ்வைத் துதித்துக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா என்ன? ஒவ்வொன்றும் தன்னுடைய தொழுகையையும் துதிமுறையையும் அறிந்திருக்கின்றது. மேலும், இவை செய்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். 24:42 வானங்கள் மற்றும் பூமியுடைய ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது! 24:43 நீங்கள் பார்க்கவில்லையா என்ன? அல்லாஹ் மேகத்தை மெல்ல மெல்ல நகர்த்துகின்றான். பின்னர், அதன் சிதறல்களை ஒன்றிணைக்கின்றான். பிறகு அதனை அடர்த்தியான மேகமாக ஆக்குகின்றான். பிறகு, அதற்கிடையிலிருந்து மழைத்துளிகள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நீர் பார்க்கின்றீர். மேலும், அவன் வானத்திலிருந்து அதிலே உயர்ந்து நிற்கின்ற மலைகளின் காரணத்தால் பனிக்கட்டிகளைப் பொழிவிக்கின்றான். பிறகு, அதன் மூலம், தான் நாடுகின்றவர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்களை அதிலிருந்து காப்பாற்றிக்கொள்கின்றான். அதனுடைய மின்னலின் ஒளி, பார்வைகளைப் பறிக்க முனைகின்றது. 24:44 இரவையும் பகலையும் அவன்தான் மாற்றிக் கொண்டிருக்கின்றான். திண்ணமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது, பார்வை உள்ளவர்களுக்கு! 24:45 மேலும், அல்லாஹ் ஒவ்வோர் உயிர்பிராணியையும் ஒரேவிதமான நீரிலிருந்து படைத்தான். அவற்றில் சில தம் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன. வேறு சில இரு கால்களால் நடந்து செல்கின்றன; இன்னும் சில நான்கு கால்களால் நடந்து திரிகின்றன. தான் நாடுகின்றவற்றை அல்லாஹ் படைக்கின்றான். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான். 24:46 உண்மையை மிகத்தெளிவாகக் காண்பிக்கும் வசனங்களை நாம் இறக்கியருளியிருக்கின்றோம். மேலும், அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு நேர்வழியின் பக்கம் வழிகாட்டுகின்றான். 24:47 “அல்லாஹ்வின் மீதும் தூதர் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; மேலும், கீழ்ப்படிதலை ஏற்றுக் கொண்டோம்” என்று இவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும் இதன்பின்னர், இவர்களில் ஒரு பிரிவினர் (கீழ்ப்படியாமல்) புறக்கணித்து விடுகின்றார்கள். இத்தகையோர் எவ்வகையிலும் நம்பிக்கையாளர்கள் அல்லர். 24:48 அவர்களுக்கிடையிலான வழக்குகளில் இறைத்தூதர் தீர்ப்பளித்திட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் வருமாறு அவர்கள் அழைக்கப்படும்போது அவர்களில் ஒரு சாரார் புறக்கணித்துச் செல்கின்றார்கள். 24:49 ஆனால் நியாயம் அவர்களுக்கு சாதகமாக அமையும்போது தாழ்மையோடு இறைத்தூதரிடம் வருகின்றார்கள். 24:50 அவர்களின் உள்ளங்களில் (நயவஞ்சகப்) பிணி தொற்றிக் கொண்டுள்ளதா? அல்லது அவர்கள் சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநீதி இழைத்திடுவார்களோ என்று அஞ்சுகின்றார்களா? உண்மை என்னவெனில், இவர்களே கொடுமையாளர்கள் ஆவர். 24:51 இறைநம்பிக்கை கொண்டவர்கள் தங்களுக்கிடையிலுள்ள வழக்குகளில் இறைத்தூதர் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் வருமாறு அழைக்கப்படும்போது, “நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம்!” என்று கூறுவதே அவர்களின் தன்மையாகும். இத்தகையோர்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள். 24:52 எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்துக் கொள்கின்றார்களோ, அவர்கள்தாம் வெற்றியாளர்களாவர். 24:53 (நயவஞ்சகர்களாகிய) இவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து, “தாங்கள் எங்களுக்கு ஆணையிட்டால் வீடுகளை விட்டு வெளியேறிவிடுகின்றோம்” என்று கூறுகின்றார்கள். அவர்களிடம் நீர் கூறும்: “சத்தியம் செய்யாதீர்கள். உங்களுடைய கீழ்ப்படிதல் எத்தகையது என்பது தெரிந்த விஷயம்தான்! திண்ணமாக நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் அறியாதவன் அல்லன்!” 24:54 நீர் கூறும்: “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். மேலும், தூதரைப் பின்பற்றுபவராய்த் திகழுங்கள்; ஆயினும், நீங்கள் புறக்கணித்தால் (நன்கு புரிந்து கொள்ளுங்கள்!) தூதரின் மீது எந்தக் கடமை சுமத்தப்பட்டுள்ளதோ, அந்தக் கடமைக்கு அவரே பொறுப்பு; உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமைக்கு பொறுப்பு நீங்களே! நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிவீர்களாயின், நீங்கள்தாம் நேர்வழியடைவீர்கள். (இல்லையெனில் கட்டளைகளைத்) தெள்ளத் தெளிவாக அறிவித்துவிடுவதைத் தவிர தூதர் மீது வேறெந்தப் பொறுப்புமில்லை. 24:55 உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களிடம் அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான். என்னவெனில், அவர்களைப் பூமியில் பிரதிநிதிகளாக்குவான்; அவர்களுக்கு முன் சென்று போன மக்களைப் பிரதிநிதிகளாக்கியது போன்று! மேலும், அவர்களுக்காக அல்லாஹ் எந்த மார்க்கத்தை விரும்பினானோ அந்த மார்க்கத்தை வலுவான அடிப்படைகள் மீது நிலைநாட்டுவான். மேலும், அவர்களின் (இன்று நிலவுகின்ற) அச்சநிலையை அமைதி நிலையாய் மாற்றித் தருவான். எனவே, அவர்கள் எனக்கே அடிபணியட்டும்; மேலும், என்னுடன் எதனையும் இணை வைக்காதிருக்கட்டும். மேலும், இதன் பின்னர் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களே பாவிகள் ஆவர். 24:56 மேலும், தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத்தையும் வழங்குங்கள். மேலும், தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்; உங்கள் மீது கருணை புரியப்படக் கூடும். 24:57 நிராகரித்துக் கொண்டிருப்பவர்களைக் குறித்து, அவர்கள் பூமியில் அல்லாஹ்வை தோல்வியுறச் செய்துவிடுவார்கள் என்று தப்பெண்ணம் கொள்ளாதீர்கள். அவர்களுடைய இருப்பிடம் நரகம்தான்; அது மிகவும் கெட்ட இருப்பிடமாகும். 24:58 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய அடிமைகளான ஆண்களும் பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறுவர்களும் மூன்று நேரங்களில் உங்களிடம் வருவதற்கு அனுமதி பெற்றுக் கொள்ளட்டும். வைகறை தொழுகைக்கு முன்னர்; மதியவேளையில் நீங்கள் உங்கள் ஆடைகளைக் களைந்திருக்கும்போது; இஷா தொழுகைக்குப் பின்னர். இம்மூன்று நேரங்களும் நீங்கள் மறைவாக இருக்கக்கூடிய நேரங்களாகும். இவற்றைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் அனுமதியின்றி வருவார்களாயின் உங்கள்மீதும், அவர்கள் மீதும் எவ்விதக் குற்றமுமில்லை. நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி வரவேண்டியுள்ளது. இவ்வாறு அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய அறிவுரைகளைத் தெளிவுபடுத்துகின்றான். மேலும், அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 24:59 மேலும், உங்கள் சிறுவர்கள் விவரம் தெரியும் பருவத்தை அடைந்து விட்டால், அவர்களுடைய பெரியவர்கள் எவ்வாறு அனுமதி கோருகிறார்களோ அவ்வாறு அவர்களும் அனுமதி பெற்று வரட்டும். இவ்வாறு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களிடம் விவரிக்கின்றான். மேலும், அவன் மிக அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். 24:60 எந்தப் பெண்கள் இளமைப் பருவத்தைக் கடந்து திருமணத்தில் விருப்பம் இல்லாதவர்களாய் இருந்துவிடுகின்றார்களோ அந்தப் பெண்கள் தங்கள் அழகை வெளிக்காட்டாதவர்களாய், தங்கள் மேலாடைகளைக் கழற்றி வைப்பதில் அவர்கள் மீது யாதொரு குற்றமுமில்லை; ஆயினும், அவர்களும் நாணமுள்ள பெண்களாய் நடந்து கொள்வதே அவர்களுக்கு மிக ஏற்றதாகும். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 24:61 குருடர், நொண்டி, நோயாளி போன்றவர்கள் (யாருடைய வீட்டில் சாப்பிடுவதிலும் அவர்கள்) மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஆனால், நீங்கள் உங்களின் வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தையரின் வீடுகளிலோ, உங்கள் அன்னையரின் வீடுகளிலோ அல்லது உங்கள் சகோதரர்களின் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ அல்லது உங்கள் சிறிய தந்தை பெரிய தந்தையரின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ அல்லது உங்கள் சிற்றன்னை, பெரியன்னையரின் வீடுகளிலோ அல்லது எந்த வீடுகளின் திறவுகோல்கள் உங்கள் பொறுப்பில் உள்ளனவோ அந்த வீடுகளிலோ அல்லது உங்கள் நண்பர்களின் வீடுகளிலோ சாப்பிடுவதில் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ சாப்பிடுவதிலும் உங்கள் மீது குற்றமில்லை. எவ்வாறாயினும் வீடுகளில் நீங்கள் நுழையும்போது நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஸலாம் கூறுங்கள். இது நல்லாசி எனும் முறையில் இறைவனிடமிருந்து நிர்ணயிக்கப்பட்டதும், பாக்கியங்கள் கொண்டதும், தூய்மையானதுமாகும். இவ்வாறு அல்லாஹ் அறிவுரைகளை உங்களுக்கு விவரிக்கின்றான்; இதனால் நீங்கள் சிந்தித்துணர்ந்து செயல்படக்கூடும்! 24:62 அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்களும், மேலும், ஏதேனுமொரு பொதுப் பணிக்காக அவர்கள் இறைத்தூதருடன் இருக்கும்போது அவரிடம் அனுமதி பெறாமல் அவரை விட்டுப் பிரிந்து போகாத வர்களுமே உண்மையான இறைநம்பிக்கையாளர்களாவர். (நபியே!) உம்மிடம் அனுமதி கோருபவர்கள்தாம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொண்டவர்கள். எனவே, அவர்கள் தங்களுடைய ஏதேனும் தேவைக்காக உம்மிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீர் விரும்பியவர்களுக்கு அனுமதி வழங்குவீராக! மேலும், இத்தகையோருக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோருவீராக! திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னித்தருள்பவனாகவும் பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான். 24:63 (முஸ்லிம்களே!) உங்களுக்கிடையே விடுக்கப்படும் தூதரின் அழைப்பை உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பது போன்று கருதிவிட வேண்டாம்! உங்களில் எவர்கள் ஒருவரையொருவர் திரையாக்கிக் கொண்டு மறைவாக நழுவிச் செல்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிகின்றான். இறைத்தூதரின் கட்டளைக்கு மாறு செய்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் கடும் சோதனை நேர்ந்துவிடுமோ, தம்மீது துன்புறுத்தும் வேதனை வந்துவிடுமோ என்று அஞ்சட்டும்! 24:64 அறிந்து கொள்ளுங்கள்! வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதனையும் அல்லாஹ் அறிகின்றான். மக்கள் அவனிடம் திரும்பக் கொண்டு வரப்படும் நாளில், அவர்கள் என்னவெல்லாம் செய்(துவிட்டு வந்)திருக்கின்றார்கள் என்பதை அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான். அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
அத்தியாயம்  அல் ஃபுர்கான்  25 : 1-21 / 77
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
25:1 பெரும்பாக்கியம் நிறைந்தவனாக இருக்கின்றான், தன்னுடைய அடியார் மீது (சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும்) இந்த ஃபுர்கானை (அதாவது குர்ஆனை) இறக்கி வைத்தவன். அகிலத்தார் அனைவருக்கும் (அவர்) எச்சரிக்கை செய்யக் கூடியவராக திகழ வேண்டும் என்பதற்காக! 25:2 அவன் எத்தகையவனெனில், வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே அதிபதி. மேலும், அவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் பங்கு உடையோர் எவரும் இல்லை! மேலும், அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்து, பிறகு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதியை நிர்ணயித்தான். 25:3 ஆனால், மக்கள் அவனை விடுத்து எத்தகைய கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றால், அந்தக் கடவுள்கள் எந்தப் பொருளையும் படைப்பதில்லை ஏன், அவர்களே படைக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். மேலும், தங்களுக்குக்கூட எத்தகைய இலாபத்தையும் நஷ்டத்தையும் அளிக்கும் அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை; மேலும், மரணிக்கச் செய்யவும், உயிர் கொடுக்கவும் (இறந்தவர்களை) மீண்டும் எழுப்பவும் அவர்களால் இயலாது! 25:4 எவர்கள் (நபியின் கூற்றை) ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “இந்த ஃபுர்கான் புனைந்துரைக்கப்பட்ட ஒன்றேயாகும்; இதனை இவரே இயற்றிக்கொண்டார். மேலும், (இது விஷயத்தில்) வேறு சில மனிதர்கள் இவருக்கு உதவியுள்ளார்கள்!” இத்தகைய பெரும் கொடுமை புரியும் அளவிற்கும், கடும் பொய்யைக் கூறும் அளவிற்கும் அவர்கள் இறங்கி வந்துவிட்டார்கள். 25:5 மேலும், இவர்கள் கூறுகின்றார்கள்: “இவை பழங்காலத்து மக்களால் எழுதப்பட்டவையாகும். இவர் அவற்றை நகல் எடுக்கச் செய்கின்றார். அவை, காலையிலும், மாலையிலும் இவருக்கு ஓதிக் காட்டப்படுகின்றன.” 25:6 (நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: “பூமி மற்றும் வானங்களில் உள்ள இரகசியங்களை அறிகின்றவன்தான் இதனை இறக்கி அருளினான். திண்ணமாக, அவன் அதிகம் மன்னிப்பவனாகவும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.” 25:7 மேலும், கூறுகின்றார்கள்: “இவர் எத்தகைய இறைத்தூதர்! உணவு உண்ணுகிறாரே; கடை வீதிகளில் நடமாடுகின்றாரே! இவரிடம் ஒரு வானவர் அனுப்பப்பட்டிருக்கக் கூடாதா? அவர், இவருடன் சேர்ந்து (ஏற்றுக் கொள்ளாதவர்களை) எச்சரிக்கை செய்வதற்காக! 25:8 அல்லது அவருக்கு ஏதேனுமொரு கருவூலமாவது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது (நிம்மதியாக) உணவு பெறுவதற்குரிய ஏதேனும் தோட்டமாயினும் இவருக்கு இருந்திருக்கக்கூடாதா?” மேலும், இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றார்கள்: “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரின் பின்னால்தான் நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள்!” 25:9 பாருங்கள்! உம் விஷயத்தில் எத்தகைய விந்தையான வாதங்களை இவர்கள் உம் முன் எடுத்துரைக்கின்றார்கள்! எந்த அளவுக்கு இவர்கள் வழிதவறிப் போய்விட்டார்களெனில் உறுதியாக நிற்பதற்கான எந்த விஷயமும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை. 25:10 பெரும் பாக்கியம் நிறைந்தவனாவான் அவன். தான் நாடினால், இவர்கள் சொன்னவற்றையெல்லாம் விட மிகச் சிறந்ததை உமக்கு வழங்கிட முடியும் (ஒன்றல்ல) கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் பல தோப்புகளையும், பெரும் பெரும் மாளிகைகளையும் (அவனால் வழங்கிட முடியும்). 25:11 உண்மை யாதெனில், இவர்கள் அந்த நேரத்தைப் பொய்யென்று வாதாடினர் யார் அந்த நேரத்தைப் பொய்யென்று வாதாடினார்களோ அவர்களுக்குக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம். 25:12 அது தொலைவான இடத்திலிருந்து இவர்களைப் பார்க்குமாயின், அதன் ஆவேசம் மற்றும் சீற்றத்தின் இரைச்சல்களை இவர்கள் கேட்பார்கள். 25:13 மேலும், கை, கால்கள் விலங்கிடப்பட்டு அதன் நெருக்கடியான ஓர் இடத்தில் அவர்கள் வீசி யெறியப்படுவார்கள். அங்கே அவர்கள் மரணத்தை அழைக்கத் தொடங்குவார்கள். 25:14 (அப்போது அவர்களிடம் கூறப்படும்:) “இன்று ஒரு மரணத்தையல்ல, பல மரணங்களை அழையுங்கள்!” 25:15 இவர்களிடம் கேளுங்கள்: “இந்த முடிவு சிறந்ததா? அல்லது இறையச்சம் கொண்ட தூய்மையாளர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நிலையான சுவனம் சிறந்ததா? அது எத்தகையது எனில், அவர்களின் (செயல்களுக்குக்) கூலியாகவும் (அவர்களுடைய பயணத்தின்) இறுதி இடமாகவும் இருக்கும். 25:16 அதில் அவர்களுடைய விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதனை வழங்குவது உம் இறைவனின் பொறுப்பில் உள்ள நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வாக்குறுதியாகும். 25:17 மேலும், அந்நாளிலேயே (உம் இறைவன்) இவர்களையும் ஒன்று திரட்டுவான். (இன்று) அல்லாஹ்வை விடுத்து இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் தெய்வங்களையும் கூப்பிடுவான். பிறகு, அவன் அவர்களிடம் கேட்பான்: “என்னுடைய இந்த அடிமைகளை நீங்கள்தாம் வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்களே வழி கெட்டுப் போனார்களா?” 25:18 அதற்கு அவர்கள் பணிந்து கூறுவார்கள்: “நீ தூய்மையானவன்! உன்னைத் தவிர வேறு யாரையும் எங்களுடைய பாதுகாவலர்களாக்கிக் கொள்வதற்கு எங்களுக்குத் துணிவு ஏது? ஆயினும், நீ இவர்களுக்கும் இவர்களுடைய மூதாதையர்களுக்கும் வாழ்க்கை வசதிகளை தாராளமாக வழங்கியிருந்தாய்; இறுதியில் இவர்கள் இந்தப் படிப்பினையை மறந்து விட்டனர். கடும் நாசத்திற்குரியவராகிவிட்டனர்!” 25:19 இவ்வாறு அவர்கள் (உங்களுடைய தெய்வங்கள்) பொய்யெனக் கூறிவிடுவார்கள், இன்று நீங்கள் வாதித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய விஷயங்களை! பிறகு (உங்களுக்கு ஏற்படும் நாசத்தை) உங்களால் தடுக்கவும் இயலாது; எங்கிருந்தும் உதவியைப் பெறவும் இயலாது. மேலும், உங்களில் எவரேனும் கொடுமை புரிந்தால் அவருக்குக் கடுமையான வேதனையை நாம் சுவைக்கக் கொடுப்போம். 25:20 மேலும் (நபியே!) உமக்கு முன்பு நாம் அனுப்பி வைத்திருந்த தூதர்கள் அனைவரும் உணவு உண்பவர்களாயும் கடைவீதிகளில் நடமாடுபவர்களாயும்தாம் இருந்தார்கள். உண்மையில் நாம் உங்களில் ஒரு சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கிவைத்துள்ளோம். நீங்கள் பொறுமையை மேற்கொள்வீர்களா? உம் இறைவன் அனைத்தையும் பார்ப்பவனாய் இருக்கின்றான். 25:21 எவர்கள் நம் திருமுன் வருவதைக் குறித்து சற்றும் கவலை கொள்ளாமல் இருக்கின்றார்களோ அவர்கள் கூறுகின்றார்கள்: “எங்களிடம் வானவர்கள் ஏன் அனுப்பப்படவில்லை? அல்லது எங்கள் இறைவனை நாங்கள் ஏன் காணுவதில்லை?” இவர்கள் தங்களையே பெரிதாக எண்ணி ஆணவம் கொண்டு திரிகின்றார்கள். மேலும், இவர்கள் தங்கள் அக்கிரமத்தில் பெரிதும் வரம்பு மீறிச் சென்றுவிட்டார்கள்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)