அத்தியாயம்  அந்நஹ்ல்  16 : 51-128 / 128
16:51 மேலும், அல்லாஹ் கட்டளையிடுகின்றான்: “இரண்டு கடவுளரை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! இறைவன் ஒரே ஒருவன்தான்! எனவே, எனக்கு அஞ்சுங்கள்!” 16:52 வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்கே உரியவையாகும். மேலும், அவனுடைய தீன் (நெறி) மட்டுமே (இந்தப் பேரண்டம் முழுவதிலும்) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறிருக்க அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களுக்கு நீங்கள் அஞ்சுவீர்களா? 16:53 மேலும், உங்களுக்குக் கிடைத்துள்ள அருட் கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். பிறகு உங்களுக்கு ஏதேனும் கஷ்டகாலம் வந்துவிடுமாயின் நீங்களே உங்கள் முறையீடுகளை எடுத்துக்கொண்டு அவனிடமே ஓடுகின்றீர்கள். 16:54 பிறகு அந்தக் கஷ்ட காலத்தை உங்களை விட்டு அல்லாஹ் நீக்கிவிட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் (அதை நீக்கியதற்காகச் செலுத்தும் நன்றியில்) தம் இறைவனுடன் மற்றவர்களையும் இணையாக்கத் தொடங்குகின்றனர்; 16:55 அல்லாஹ் அவர்களுக்குச் செய்த பேருதவிக்கு நன்றி கொல்வதற்காக! சரி, நன்கு அனுபவித்துக் கொள்ளுங்கள்! விரைவில் (அதன் விளைவை) தெரிந்து கொள்வீர்கள். 16:56 நாம் இவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து ஒரு பங்கை எவற்றின் உண்மையான நிலையை இவர்கள் அறிந்திருக்கவில்லையோ அவற்றுக்கு ஒதுக்குகிறார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இல்லாத ஒன்றை எவ்வாறு நீங்கள் புனைந்தீர்கள் என்று உங்களிடம் நிச்சயம் விசாரணை செய்யப்படும். 16:57 இவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண்மக்கள் உண்டென ஏற்றிச் சொல்கின்றார்கள். அவனோ, தூய்மையானவனாக இருக்கின்றான் ஆனால், அவர்களுக்கோ அவர்கள் விரும்புகின்றவை! 16:58 இவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை (பிறந்திருப்பது) பற்றி நற்செய்தி சொல்லப்பட்டால், அவரது முகத்தில் கருமை கவ்விக் கொள்கின்றது! துக்கத்தால் அவர் தொண்டை அடைத்துக் கொள்கிறது. 16:59 இந்தக் ‘கேவலமான’ செய்தி கிடைத்துவிட்டதே என்பதற்காக இனி யார் முகத்திலும் விழிக்கக்கூடாது என்று மக்களைவிட்டு ஒதுங்கிச் செல்கின்றார். அவமானப்பட்டுக் கொண்டு அப்பெண் குழந்தையை வைத்திருப்பதா அல்லது அதனை மண்ணில் புதைத்து விடுவதா என்று சிந்திக்கின்றார் பாருங்கள்! இறைவனைப் பற்றி இவர்கள் எடுத்த முடிவு எத்துணைக் கெட்டது! 16:60 தீய தன்மைகளால் வர்ணிக்கப்பட வேண்டியவர்கள் மறுமையின்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் தாம்! ஆனால் அல்லாஹ்வுக்கோ அனைத்தையும்விட உயர்ந்த தன்மைகள் இருக்கின்றன. அவனோ யாவரையும் மிகைத்தவனாயும், விவேகத்தில் முழுமை பெற்றவனாயும் இருக்கின்றான். 16:61 மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்பதாயிருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான்! ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவன் அவகாசம் அளிக்கின்றான். பிறகு அந்த நேரம் வந்துவிடுமாயின் ஒரு வினாடிகூட அவர்களால் பிந்தவும் முடியாது; முந்தவும் முடியாது. 16:62 (இன்று) அவர்கள் தங்களுக்கே விருப்பம் இல்லாதவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கிறார்கள். அவர்களுக்கு நன்மையே உண்டு என அவர்களின் நாவு பொய்யுரைக்கின்றது. திண்ணமாக, அவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு என்பதிலும், எல்லோருக்கும் முன்பாக அவர்கள் அதில் கொண்டு சேர்க்கப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமே இல்லை. 16:63 அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (நபியே!) உமக்கு முன்பும் பல்வேறு சமூகங்களில் நாம் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம். ஆனால் (அப்போதும் என்ன நடந்ததெனில்) ஷைத்தான் அவர்களின் தீயசெயல்களை அவர்களுக்கு அழகுபடுத்திக் காட்டினான். (ஆகையால் தூதர்களின் நல்லுரைகளை அவர்கள் ஏற்றிடவில்லை.) அதே ஷைத்தான் இன்று இவர்களுக்கும் ஆதரவாளனாய் ஆகியிருக்கின்றான். எனவே, இவர்கள் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாகிக் கொண்டிருக்கின்றார்கள். 16:64 இவர்கள் எவற்றில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கின்றார்களோ அவற்றின் உண்மை நிலையை இவர்களுக்கு நீர் தெளிவாக்கிட வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வேதத்தை உம்மீது நாம் இறக்கியருளியிருக்கிறோம். மேலும், இவ்வேதம் தன்னை ஏற்றுக்கொள்கின்ற மக்களுக்கு வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கின்றது. 16:65 மேலும் (ஒவ்வொரு மழைக்காலத்திலும் நீங்கள் பார்க்கின்றீர்கள்:) அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான்; உடனே அதனைக் கொண்டு இறந்து போன பூமிக்கு உயிரூட்டினான். திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கிறது செவியேற்கும் மக்களுக்கு! 16:66 மேலும், கால்நடைகளிலும் நிச்சயம் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. சாணம், இரத்தம் ஆகியவற்றிற்கிடையே, அவற்றின் வயிற்றிலிருந்து தூய்மையான பாலை உங்களுக்கு நாம் புகட்டுகின்றோம்; அருந்துவோருக்கு அது இன்பமாய் இருக்கின்றது. 16:67 (இதே போன்று) பேரீச்சை மற்றும் திராட்சைப் பழங்களிலிருந்தும் உங்களுக்குப் புகட்டுகின்றோம்; அதிலிருந்து நீங்கள் போதைப் பொருளையும் தயாரிக்கின்றீர்கள்; இன்னும் தூய உண்பொருளையும்! திண்ணமாக அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கிறது. 16:68 மேலும், (பாருங்கள்!) உம் இறைவன் தேனீக்கு இவ்வாறு வஹி அறிவித்தான்: “மலைகளிலும் மரங்களிலும் பந்தல்(களில் படரும் கொடி)களிலும் நீ கூடுகளைக் கட்டிக்கொள்! 16:69 மேலும், பலதரப்பட்ட பழங்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக் கொள்! உன் இறைவன் சீராக அமைத்துத்தந்த வழியில் சென்று கொண்டிரு!” அந்தத் தேனீக்களின் உள்ளே இருந்து பலவிதமான நிறமுடைய ஒரு பானம் வெளிப்படுகின்றது. அதில் மக்களுக்கு நிவாரணம் இருக்கிறது. திண்ணமாக, சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கிறது. 16:70 மேலும் (பாருங்கள்!) அல்லாஹ் உங்களைப் படைத்தான்; பின்னர் உங்களை மரணமடையச் செய்கின்றான். மேலும், உங்களில் சிலர் தள்ளாத முதுமை வயதுவரை கொண்டு செல்லப்படுகின்றார்கள் எல்லாவற்றையும் அறிந்த பிறகு எதையும் அறியாமல் போவதற்காக! உண்மை யாதெனில், அல்லாஹ்தான் அறிவிலும் பேராற்றலிலும் முழுமையானவனாய் இருக்கின்றான். 16:71 மேலும், (பாருங்கள்!) அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட, வாழ்க்கை வசதியில் சிறப்பு அளித்துள்ளான். இத்தகைய சிறப்பு வழங்கப்பட்டவர்கள் தாமும் தம்முடைய அடிமைகளும் வாழ்க்கை வசதியில் சமபங்குடையவர்களாகும் வகையில் அதனை அவர்களுக்குப் பங்கிட்டு அளிப்பதில்லையே! எனவே, இவர்கள் அல்லாஹ்வின் பேருதவியை ஏற்க மறுக்கின்றனரா? 16:72 மேலும், அல்லாஹ் உங்களினத்திலிருந்தே உங்களுக்குத் துணைவியரை அமைத்தான்; அத்துணைவியர் மூலம் உங்களுக்கு மகன்களையும் பேரன்களையும் வழங்கினான். மேலும், நல்ல நல்ல பொருள்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்தான். பிறகு என்ன, இவர்கள் (இவை அனைத்தையும் பார்த்து, புரிந்தும்கூட) அசத்தியத்தை மேற்கொள்கின்றார்களா? அல்லாஹ்வின் பேருதவிகளை நிராகரிக்கின்றார்களா? 16:73 மேலும், அல்லாஹ்வை விட்டு விட்டு, வானங்களிலிருந்தோ, பூமியிலிருந்தோ இவர்களுக்குச் சிறிதள வேனும் உணவு வழங்கும் சக்தி இல்லாத ஏன், வழங்க முயன்றாலும் முடியாதவற்றையா இவர்கள் வணங்குகின்றார்கள்? 16:74 ஆக, அல்லாஹ்வுக்கு உவமைகளைப் பொருத்தாதீர்கள்! திண்ணமாக, அல்லாஹ் நன்கறிகின்றான். ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள். 16:75 அல்லாஹ் இவ்வாறு ஓர் உதாரணம் கூறுகின்றான்: பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை இருக்கிறார்; சுயமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லாதவர். மற்றொருவர் இருக்கின்றார்; அவருக்கு நாம் நம்மிடத்திலிருந்து நல்ல வாழ்க்கை வசதிகளை வழங்கியிருக்கின்றோம். அவர், அதிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார். (கூறுங்கள்!) இவ்விருவரும் சமமாவார்களா? அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆனால் (இந்நேரிய விஷயத்தை) அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை. 16:76 அல்லாஹ் இன்னும் ஓர் உதாரணத்தைக் கூறுகின்றான். இரண்டு மனிதர்கள் இருக்கின்றனர். ஒருவர் ஊமை. எந்த வேலையும் செய்ய இயலாத அவர் தன் எஜமானருக்கு ஒரு சுமையாகவும் இருக்கின்றார். எஜமானர் அவரை எங்கு அனுப்பினாலும் எந்தப் பயனுள்ள வேலையையும் செய்யமாட்டார். மற்றொருவர் நேரான வழியில் இருக்கின்றார்; நீதியுடன் வாழுமாறு ஏவுகின்றார். (கூறுங்கள்) இவ்விருவரும் சமமாவார்களா? 16:77 மேலும், வானங்கள் மற்றும் பூமியின் மறைவான உண்மைகளைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. மேலும், இறுதிநாள் நிகழ்வதற்கு அதிக நேரம் தேவையில்லை. கண் சிமிட்டும் நேரம், ஏன் அதைவிடவும் குறைந்த நேரம் போதுமானதாகும். உண்மை யாதெனில், அல்லாஹ் அனைத்தையும் செய்வதற்குப் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான். 16:78 அல்லாஹ் உங்களை உங்கள் அன்னையரின் வயிற்றிலிருந்து வெளிக்கொணர்ந்தான் நீங்கள் ஏதும் அறியாத நிலையில்! மேலும், செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், சிந்திக்கும் இதயங்களையும் உங்களுக்கு வழங்கினான் நீங்கள் நன்றி செலுத்தக் கூடியவர்களாய்த் திகழ வேண்டும் என்பதற்காக! 16:79 இவர்கள் பறவைகளைக் கவனித்ததில்லையா? அவை விண் வெளியில் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன? அல்லாஹ்வைத் தவிர அவற்றைத் தாங்கிக் கொண்டிருப்பவன் வேறு யார்? நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு திண்ணமாக, இதில் பல சான்றுகள் உள்ளன. 16:80 மேலும், அல்லாஹ் உங்களுக்காக உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான். மேலும், கால் நடைகளின் தோல்களின் மூலம் உங்களுக்கு எத்தகைய வீடுகளை உருவாக்கினானென்றால், நீங்கள் பயணம் செல்லும்போதும் அல்லது தங்கிவிடும் போதும் அவற்றை இலேசாகக் காண்கின்றீர்கள். மேலும், கால்நடைகளின் குறுமென் மயிர், முடி, ரோமம் ஆகியவற்றின் மூலம் (அணிவதற்கும் வீட்டு உபயோகத்திற்கும் உரிய) ஏராளமான பொருள்களை அவன் படைத்தான். வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவை உங்களுக்குப் பயன்படுகின்றன. 16:81 மேலும், அல்லாஹ்தான் படைத்துள்ள பொருள்களின் மூலம் உங்களுக்காக நிழல்களை அமைத்துத் தந்தான். மலைகளில் உங்களுக்காகப் புகலிடங்களை அமைத்தான். வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ஆடைகளையும் (நீங்கள் போர் புரியும்போது) உங்களைப் பாதுகாக்கும் கவச ஆடைகளையும் உங்களுக்கு வழங்கினான். இவ்வாறு தன் அருட்கொடைகளை உங்கள் மீது நிறைவு செய்கின்றான். இதனால் நீங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாய் திகழக்கூடும். 16:82 இனி இவர்கள் புறக்கணித்தால் (நபியே! சத்தியத்தை) இவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர உம்மீது வேறெந்தப் பொறுப்பும் இல்லை. 16:83 இவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் புரிந்து கொள்கின்றார்கள். பிறகு அவற்றை மறுக்கின்றார்கள். மேலும், இவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை ஏற்கத் தயாராய் இல்லை. 16:84 (மறுமைநாளில் என்ன நடக்கும் என்பது பற்றி அவர்கள் சிந்தித்திருக்கின்றார்களா?) அந்நாளில் நாம் ஒவ்வொரு சமூகத்தாரிலிருந்தும் ஒரு சாட்சியாளரை எழுப்பிக் கொண்டு வருவோம். பிறகு (தம் வாதங்களைச் சமர்ப்பிக்க) நிராகரிப்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவும் மாட்டாது. (இறைவனிடம் மன்னிப்புக் கோரி) அவனிடம் மீளும்படி அவர்களிடம் கோரப்படவும் மாட்டாது. 16:85 அநீதி இழைத்தவர்கள் வேதனையைக் கண் கூடாகக் கண்டுகொண்ட பிறகு அவர்களை விட்டு வேதனை கொஞ்சமும் குறைக்கப்பட மாட்டாது. (ஒரு விநாடிகூட) அவர்கள் தாமதப்படுத்தப்படவும் மாட்டார்கள். 16:86 மேலும் (உலகில்) இறைவனுக்கு இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்களுடைய போலிக்கடவுள்களைக் காணும்போது “எங்கள் இறைவனே! நாங்கள் உன்னைவிட்டு எவர்களை அழைத்து இறைஞ்சிக் கொண்டிருந்தோமோ அந்தக் கடவுள்கள் இவர்கள்தாம்!” என்று கூறுவார்கள். அதற்கு அக்கடவுள்கள், “நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள்!” என்று அவர்களிடம் தெளிவாகப் பதில் கூறும்! 16:87 அவ்வேளை இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் திருமுன் சரணடைந்து விடுவார்கள். (உலகில்) இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்தவை யாவும் இவர்களை விட்டு அடியோடு காணாமல் போய் விடும். 16:88 எவர்கள் தாங்களும் இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டு, மற்றவர்களையும் அல்லாஹ்வின் வழியில் செல்ல விடாமல் தடுக்கின்றார்களோ அவர்களுக்கு நாம் வேதனைக்கு மேல் வேதனையை அளிப் போம் உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த குழப்பங்களுக்குப் பகரமாக! 16:89 (நபியே! மறுமை நாளைக் குறித்து இவர்களுக்கு எச்சரிக்கை செய்து விடும்:) அந்நாளில் ஒவ்வொரு சமூகத்திலேயும் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடிய ஒருவரை அவர்களிலிருந்தே நாம் எழுப்புவோம். மேலும், இந்த மக்களைக் குறித்து சாட்சி வழங்க உம்மை நாம் கொண்டு வருவோம். (இவ்வாறு சாட்சி அளிப்பதற்கான முன்னேற்பாடாகத்தான்) உமக்கு இவ்வேதத்தை நாம் இறக்கியருளியுள்ளோம். அது, யாவற்றையும் மிகத் தெளிவாக விவரிக்கக்கூடியதாய் இருக்கிறது. முற்றிலும் (இறைவனுக்கு) கீழ்ப்படிந்து வாழும் மக்களுக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், அருளாகவும், ஒரு நற்செய்தியாகவும் இருக்கிறது. 16:90 திண்ணமாக, அல்லாஹ் நீதி செலுத்தும்படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளை யிடுகின்றான். மேலும், மானக்கேடான, வெறுக்கத்தக்க, மற்றும் அக்கிரமமான செயல்களை விலக்குகின்றான். நீங்கள் படிப்பினை பெறும் பொருட்டு உங்களுக்கு அறிவுரை கூறுகின்றான். 16:91 (அல்லாஹ்விடம்) நீங்கள் ஒப்பந்தம் ஏதும் செய்திருந்தால் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்களுடைய சத்தியங்களை உறுதிப்படுத்திய பின்னர் முறிக்காதீர்கள்! ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வை உங்களுக்குச் சாட்சியாக்கியுள்ளீர்கள். நீங்கள் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கறிகின்றான். 16:92 (சத்தியத்தை முறிப்பதன் மூலம்) உங்கள் நிலை, தானே சிரமப்பட்டு நூலை நூற்று பிறகு அதனைத் துண்டு துண்டாக்கி விட்டாளே, அத்தகைய பெண்ணின் நிலை போன்று ஆகிவிடக்கூடாது. (உங்களில்) ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை விட அதிக ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக, உங்கள் விவகாரங்களில் உங்கள் சத்தியங்களை ஏமாற்றும் ஆயுதமாக ஆக்கிக் கொள்கின்றீர்கள். உண்மையில் அல்லாஹ் இத்தகைய சத்தியங்களின் மூலம் உங்களைச் சோதிக்கின்றான். மேலும், நீங்கள் எவற்றில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ, அவற்றின் எதார்த்த நிலையை மறுமைநாளில் திண்ணமாக, உங்களுக்குத் தெளிவாக்கிவிடுவான். 16:93 (உங்களிடையே கருத்து வேறுபாடுகளே இருக்கக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே சமூகமாக ஆக்கியிருப்பான். ஆயினும், தான் நாடுவோரை அவன் வழிபிறழச் செய்கின்றான், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான். மேலும், உங்களுடைய செயல்கள் குறித்து உங்களிடம் திண்ணமாக கேள்வி கணக்கு கேட்கப்படும். 16:94 (முஸ்லிம்களே!) உங்களுடைய சத்தியங்களை உங்களில் ஒருவர் மற்றவரை ஏமாற்றுவதற்குரிய கருவியாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! அப்படி நீங்கள் செய்தால் உறுதியுடனிருக்கும் பாதம்கூட பிறகு சறுகிப்போய்விடும்; மேலும், அல்லாஹ்வின் பாதையிலிருந்து பிற மக்களை நீங்கள் தடுத்தீர்கள் என்பதால் தீயவிளைவைச் சுவைப்பீர்கள். கடுமையான தண்டனையும் உங்களுக்குக் கொடுக்கப்படும். 16:95 நீங்கள் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை அற்ப ஆதாயங்களுக்காக விற்றுவிடாதீர்கள்! நீங்கள் அறிவுடையோராய் இருப்பின் அல்லாஹ்விடம் இருப்பவைதாம் உங்களுக்கு மிகச்சிறந்தவையாகும். 16:96 உங்களிடம் இருப்பவையெல்லாம் செலவழிந்து போகக்கூடியவையே! அல்லாஹ்விடத்தில் உள்ளவைதாம் என்றைக்கும் நிலைத்திருப்பவை! மேலும், எவர்கள் பொறுமையைக் கைக்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்கின்ற உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம். 16:97 ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) தூய வாழ்வு வாழச் செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோர்க்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம். 16:98 மேலும், நீங்கள் குர்ஆனை ஓதத் தொடங்கும்போது, சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்! 16:99 எவர்கள் நம்பிக்கை கொண்டு தம்முடைய இறைவனையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றார்களோ அவர்கள் மீது ஷைத்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை. 16:100 எவர்கள் அவனைத் தங்களுடைய ஆதரவாளனாக ஏற்றுக் கொண்டு மேலும் (அவனுடைய தூண்டுதலினால்) அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றார்களோ, அவர்களிடமே அவனுடைய அதிகாரம் செல்லுபடியாகும். 16:101 ஒரு வசனத்திற்குப் பகரமாக வேறொரு வசனத்தை நாம் இறக்கியருளினால் எதை இறக்கியருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாவான் அப்போது இந்த மக்கள், “(இந்தக் குர்ஆனை) நீர்தான் புனைந்துரைக்கின்றீர்!” என்று கூறுகின்றார்கள். உண்மை யாதெனில், அவர்களில் பெரும் பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். 16:102 இவர்களிடம் கூறுவீராக: “என் இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குத்ஸ்’* முற்றிலும் சரியாக இதனைச் சிறுகச் சிறுக இறக்கி வைத்தார்; இறைநம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது உறுதிப் படுத்த வேண்டும்; மேலும், இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்கு, அவர்களின் வாழ்க்கை விவகாரங்களில் நேர்வழி காட்டவும் வேண்டும்; மேலும், வெற்றி, நற்பேறு பற்றி நற்செய்தி அறிவிக்கவும் வேண்டும் என்பதற்காக!” 16:103 மேலும், “ஒரு மனிதரே இதனை அவருக்கு கற்றுக் கொடுக்கின்றார்” என்று இவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறு வதைத் திண்ணமாக நாம் அறிவோம். ஆனால் உண்மையில் இவர்கள் சுட்டிக் காட்டுகின்ற மனிதருடைய மொழி வேற்று மொழி; இதுவோ தெளிவான அரபி மொழியாகும். 16:104 உண்மை யாதெனில், எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏற்றுக்கொள்வதில்லையோ அவர்களுக்கு நேரிய வழியை அடையும் பேற்றினை அல்லாஹ் ஒருபோதும் வழங்குவதில்லை. மேலும், அத்தகையோருக்குத் துன்புறுத்தும் வேதனைதான் இருக்கிறது. 16:105 (நபியாக இருப்பவர் பொய்யுரைகளைப் புனைந்துரைக்க மாட்டார். மாறாக) அல்லாஹ்வின் வசனங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள்தாம் பொய்யைப் புனைந்துரைப்பார்கள். உண்மை யாதெனில், அவர்களே பொய்யர்களாவர்! 16:106 எவரேனும் இறைநம்பிக்கை கொண்ட பிறகு கட்டாயத்திற்குள்ளாகி அவருடைய உள்ளம் இறைவனை ஏற்றுக் கொள்வதில் நிம்மதியுடன் இருக்கும் நிலையில் நிராகரித்தாரானால் அவர் மீது குற்றமில்லை! ஆனால் எவர் மனநிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக்கொள்கின்றாரோ, அவர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். இத்தகையவர்களுக்கு மாபெரும் வேதனையும் இருக்கிறது. 16:107 இதற்குக் காரணம், இவர்கள் மறுமையைவிட உலக வாழ்க்கையை அதிகம் நேசித்தார்கள் என்பதுதான். மேலும் (அல்லாஹ்வின் நியதி என்னவெனில்) நன்றி கொல்லும் மக்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. 16:108 இவர்கள் எத்தகையவர்கள் எனில், இவர்களின் இதயங்கள், செவிகள் மற்றும் கண்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். மேலும், இவர்கள் மெய்மறதியில் ஆழ்ந்திருக்கின்றார்கள். 16:109 திண்ணமாக, மறுமையில் இவர்களே இழப்புக்குரியவர்களாவர். 16:110 ஆனால், எவர்கள் (இறைநம்பிக்கை கொண்ட காரணத்தால்) துன்புறுத்தப்பட்டபோது வீடு வாசல்களைத் துறந்து, ஹிஜ்ரத் செய்தார்களோ மேலும் இறைவழியில் துன்பங்களைச் சகித்தார்களோ, மேலும், பொறுமையைக் கடைப்பிடித்தார்களோ அவர்களைத் திண்ணமாக, உம் இறைவன் பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். 16:111 (இவை அனைத்திற்கும் அந்த மறுமைநாளில் தீர்வு ஏற்படும்) அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பாதுகாப்பதற்காக வாதாடிக் கொண்டு வருவான். மேலும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செயல்களுக்கான கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். மேலும், அவர்களில் யாருக்கும் இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. 16:112 மேலும், அல்லாஹ் ஓர் ஊரை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றான். அவ்வூர் மக்கள் அமைதியுடனும் நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் வாழ்க்கைச் சாதனங்கள் தாராளமாய்க் கிடைத்துக் கொண்டிருந்தன. இந்நிலையில், அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி கொல்லலாயினர். அப்போது அல்லாஹ் அவர்கள் செய்து கொண்டிருந்த தீவினைகளின் விளைவை சுவைக்கச் செய்தான் பசி, அச்சம் எனும் துன்பங்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டன. 16:113 அவர்களிடம் அவர்களுடைய சமுதாயத்திலிருந்து ஒரு தூதர் வந்தார். ஆனால், அவரை அவர்கள் பொய்யர் என்று கூறினார்கள். இறுதியில் அவர்கள் அக்கிரமம் செய்பவர்களாய் ஆகிவிட்டபோது வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது. 16:114 எனவே, (மக்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையான, அனுமதிக்கப்பட்ட உணவுகளைப் புசியுங்கள்! மேலும், அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள்; நீங்கள் உண்மையில் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழ்பவர்களாய் இருந்தால்! 16:115 செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி மற்றும் அல்லாஹ்வைத் தவிர, மற்றவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணி ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆயினும், யாரேனும் இறைச்சட்டத்திற்கு மாறு செய்யும் நோக்கமில்லாமலும், தேவையான அளவை மீறாமலும் இப்பொருள்களில் ஏதேனும் ஒன்றைப் புசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானால் நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான். 16:116 உங்கள் நாவுகள் இன்ன பொருள் ‘ஹலால்’ (அனுமதிக்கப்பட்டது) இன்ன பொருள் ‘ஹராம்’ (தடுக்கப்பட்டது) என்று பொய்(ச் சட்டங்)களைக் கூறுவது போன்று அல்லாஹ்வின்மீது பொய்களை ஏற்றிச் சொல்லாதீர்கள்! யார் அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றார்களோ அவர்கள் ஒருபோதும் வெற்றி அடைவதில்லை. 16:117 இவ்வுலக வாழ்வின் இன்பமோ சொற்ப நாட்கள்தான்! இறுதியில் அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது. 16:118 இதற்கு முன்பு நாம் உம்மிடம் எடுத்துக்கூறிய சில பொருட்களை குறிப்பாக யூதர்களுக்குத் தடை விதித்திருந்தோம். இது அவர்களுக்கு நாம் இழைத்த அநீதியல்ல. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே இழைத்துக் கொண்ட அநீதியாகும். 16:119 ஆயினும், எவர்கள் அறியாமையின் காரணமாக தீயசெயல் புரிந்தார்களோ, பிறகு பாவமன்னிப்புக்கோரி தம் செயல்களை சீர்திருத்திக் கொண்டார்களோ, அவ்வாறு அவர்கள் பாவ மன்னிப்புக் கோரி சீர்திருந்திய பிறகு நிச்சயமாக உம் இறைவன் அவர்களை மன்னித்தருளக் கூடியவனாகவும் அவர்களுக்குக் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்; 16:120 உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாய்த் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராகவும் ஒருமனப்பட்டவராகவும் விளங்கினார். அவர் ஒருபோதும் இறைவனுக்கு இணைவைப்பவராய் இருந்ததில்லை. 16:121 தவிரவும், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக்கூடியவராய் இருந்தார். அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். மேலும், நேரிய வழியினையும் அவருக்குக் காண்பித்தான். 16:122 மேலும், அவருக்கு உலகில் நன்மையை நாம் வழங்கினோம். மறுமையிலும் நிச்சயமாக உத்தமர்களுள் ஒருவராய் அவர் திகழ்வார். 16:123 பிறகு நாம் உமக்கு இவ்வாறு ‘வஹி’* அனுப்பினோம்: நீர் இப்ராஹீமின் மார்க்கத்தை ஒருமனப்பட்டவராய்ப் பின்பற்றுவீராக! அவர் ஒருபோதும் இறைவனுக்கு இணைவைப்பவராய் இருந்ததில்லை. 16:124 எவர்கள் ‘ஸப்த்’ சனிக்கிழமை வரையறை குறித்து கருத்து முரண்பாடு கொண்டிருந்தார்களோ, அவர்கள் மீதே அது விதிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் எந்த விஷயங்களிலெல்லாம் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றார்களோ அவை அனைத்தையும் குறித்து இறுதித் தீர்ப்புநாளில் உம் அதிபதி நிச்சயம் தீர்ப்பு வழங்குவான். 16:125 (நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக! தன்னுடைய பாதையிலிருந்து வழிபிறழ்ந்தவர் யார் என்பதையும், நேர்வழியில் இருப்பவர்கள் யார் என்பதையும் உம் அதிபதி நன்கறிவான். 16:126 மேலும், நீங்கள் பழிவாங்கக் கருதினால், உங்கள் மீது எந்த அளவுக்கு அக்கிரமம் புரியப்பட்டதோ அதே அளவுக்குப் பழிவாங்குங்கள்! ஆயினும், நீங்கள் பொறுமையாக இருப்பீர்களாயின் திண்ணமாக இதுவே பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். 16:127 (நபியே!) நீர் பொறுமையுடன் பணியாற்றிக் கொண்டிருப்பீராக! மேலும், உம்முடைய இந்தப் பொறுமை அல்லாஹ்வின் பேருதவியினால்தான் கிடைக்கின்றது. அவர்களின் செயல்கள் குறித்து நீர் வருந்த வேண்டாம். அவர்களின் சூழ்ச்சிகளைக் குறித்து நீர் மனம் நொந்து போகவும் வேண்டாம். 16:128 எவர்கள் இறையச்சம் கொள்கின்றார்களோ மேலும், நன்னடத்தையை மேற்கொள்கின்றார்களோ அத்தகையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்.
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)