அத்தியாயம்  அர்ரஃத்  13 : 19-43 / 43
13:19 உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதம் உண்மையானதுதான் என்று அறிபவனும், இந்த உண்மையை அறியாமல் குருடனாக இருப்பவனும் சமம் ஆவார்களா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்றுக்கொள்பவராய் இருக்கின்றனர். 13:20 அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறை வேற்றுவார்கள். உறுதிப்படுத்திய பிறகு அவ்வுடன்படிக்கைகளை முறிக்க மாட்டார்கள். 13:21 மேலும், அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள். 13:22 மேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்; தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்கள். மேலும், தீமையை நன்மையைக் கொண்டு களைகின்றார்கள். மறுமையின் நல்ல முடிவு இவர்களுக்கே உரித்தானது. 13:23 அதாவது, நிலையான சுவனங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. அவற்றில் அவர்கள் நுழைவார்கள். (அவர்களுடன்) அவர்களின் மூதாதையர், மனைவியர், மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் ஆகியோரில் எவர்கள் நன்னடத்தை கொண்டவர்களோ அவர்களும் நுழைவார்கள். வானவர்கள் எல்லாப் புறங்களிலிருந்தும் அவர்களை வரவேற்க வருவார்கள். 13:24 மேலும், அவர்களிடம் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்; (உலகில்) நீங்கள் பொறுமையுடன் வாழ்ந்து வந்த காரணத்தால் இன்று இதற்குத் தகுதி பெற்றிருக்கிறீர்கள்.” மறுமையின் இல்லம் எத்துணை அருமையானது! 13:25 ஆனால் அல்லாஹ்வின் உடன்படிக்கைகளை உறுதிப்படுத்திய பின்னர் அவற்றை முறித்து விடுகின்றவர்களும், மேலும் எந்த உறவுமுறைகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கின்றானோ அந்த உறவுமுறைகளைத் துண்டித்து விடுகின்றவர்களும், மேலும் உலகில் குழப்பம் செய்கின்றவர்களும் சாபத்திற்கு உரியவர்களாவர். மேலும், அவர்களுக்கு மறுமையில் கொடிய தங்குமிடமே கிடைக்கும்! 13:26 அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு தாராளமாக உணவு வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்களுக்கு அவன் அளவோடு வழங்குகின்றான். எனினும் இவர்கள் உலக வாழ்க்கையில் மூழ்கி, அதைக் கொண்டே பெரிதும் மனநிறைவு அடைகின்றார்கள். ஆனால் மறுமைக்கு எதிரில் இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமேயன்றி வேறில்லை! 13:27 (முஹம்மதின் தூதுத்துவத்தை) நிராகரித்தவர்கள், “இவருக்கு, இவருடைய இறைவனிட மிருந்து ஏதேனும் ஒரு சான்று ஏன் இறக்கியருளப்படவில்லை?” என்று கேட்கிறார்கள். நீர் சொல்லும்: “தான் நாடுபவர்களை அல்லாஹ் வழி கேட்டில் ஆழ்த்துகின்றான். மேலும், தன் பக்கம் திரும்புகிறவர்களுக்குத் தன்னை நோக்கி வருவதற்கான வழியை அவன் காட்டுகின்றான்.” 13:28 இவர்கள்தாம் (இந்த நபியின் அழைப்பை) ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன! 13:29 பிறகு, எவர்கள் (சத்திய அழைப்பை) ஏற்றுக்கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மகிழ்வும் நல்ல முடிவும் இருக்கின்றன. 13:30 (நபியே!) இவ்வாறே உம்மை நாம் ஒரு சமூக மக்களுக்கு நபியாக அனுப்பியிருக்கின்றோம்; அவர்களுக்கு முன்னால் பல சமுதாயங்கள் வாழ்ந்து மறைந்து விட்டிருக்கின்றன. உம்மை எதற்காக அனுப்பியிருக்கிறோம் எனில், கருணை மிக்க இறைவனை அவர்கள் மறுப்பவர்களாய் இருக்கும் நிலையில், உமக்கு வஹி மூலம் நாம் அறிவித்த செய்தியை அவர்களுக்கு நீர் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக! (இவர்களிடம்) நீர் கூறுவீராக: “அவனே என் இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவனையே முற்றிலும் நான் சார்ந்திருக்கின்றேன். அவனே என்னுடைய புகலிடம் ஆவான்.” 13:31 வேறொரு குர்ஆன் (இறக்கியருளப்பட்டு அதன்) மூலம் மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது பூமியை பிளக்கச் செய்தாலும், அல்லது இறந்தவர்களை எழுப்பிப் பேசச் செய்தாலும் என்ன நேர்ந்திடப்போகிறது? (இதுபோன்ற சான்றுகளைக் காண்பிப்பது சிரமமான செயலே அல்ல) உண்மையில் அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன. பிறகு என்ன, இறை நம்பிக்கையாளர்கள் (நிராகரிப்பாளர்களின் கோரிக்கையின் பேரில் ஏதேனும் அற்புதம் வெளிப்பட வேண்டும் என்று இன்னும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களா?) மேலும், அல்லாஹ் நாடினால் எல்லா மனிதர்களையும் நேர்வழியில் செலுத்தியிருப்பான் என்பதை (அறிந்து) அவர்கள் அந்த ஆசையைக் கைவிட்டிருக்க வேண்டாமா? எவர்கள் இறைவனை நிராகரிக்கும் போக்கை மேற்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்த தீயசெயல்களின் காரணத்தால் ஏதேனும் ஒரு துன்பம் வந்துகொண்டே இருக்கும்; அல்லது அத்துன்பம் அவர்கள் வீட்டின் அருகில் இறங்கிக்கொண்டே இருக்கும். அல்லாஹ்வின் வாக்குறுதி (மறுமை) வரும்வரை, இப்படலம் நீடிக்கும். திண்ணமாக, அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்வதே இல்லை. 13:32 உமக்கு முன்னரும் இறைத்தூதர்கள் பலர் நிச்சயமாகப் பரிகாசம் செய்யப்பட்டனர். ஆனால், நான் நிராகரிப்பாளர்களுக்குத் தவணை அளித்தேன். இறுதியில் அவர்களைப் பிடித்துக் கொண்டேன். பாருங்கள், என்னுடைய தண்டனை எவ்வளவு கடினமாக இருந்தது! 13:33 பிறகு என்ன! ஒவ்வொரு ஆன்மாவின் சம்பாதனையையும் எந்த இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றானோ அந்த இறைவனுக்கா இவர்கள் (இவ்வளவு துணிச்சலாக) இணை வைக்கின்றார்கள்? (நபியே!) இவர்களிடம் கூறும்: “(உண்மையில் அவை இறைவனால் உருவாக்கப்பட்ட இணைகளாக இருந்தால்) சற்று அவற்றின் பெயர்களைச் சொல்லுங்களேன்!” பூமியில் அல்லாஹ்வுக்குத் தெரியாத (புதிய செய்தி) ஒன்றை அவனுக்கு நீங்கள் சொல்லித் தருகிறீர்களா? அல்லது உதட்டளவில் ஏதேனும் உளறிக் கொண்டிருக்கிறீர்களா? உண்மை என்னவெனில், எவர்கள் சத்திய அழைப்பினை ஏற்க மறுத்தார்களோ அவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் நேர்வழியிலிருந்து தடுக்கப்பட்டுள்ளார்கள். இனி, அல்லாஹ் யாரை வழிகேட்டில் ஆழ்த்தி விடுகின்றானோ அவருக்கு வழிகாட்டுபவர் எவருமிலர்; 13:34 இத்தகையோருக்கு உலக வாழ்க்கையிலேயே வேதனையுண்டு. மேலும் மறுமையின் வேதனை இதைவிடக் கடுமையானதாகும். அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுவோர் எவருமிலர். 13:35 இறையச்சம் உடையோருக்காக வாக்களிக்கப்பட்டுள்ள சுவனத்தின் தன்மை என்னவெனில், அதன் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதன் கனிகளும் நிலையானவை. அதன் நிழலும் நிலையானது. இறையச்சமுள்ளோருக்குக் கிடைக்கும் நல்ல முடிவாகும் இது. ஆனால், சத்தியத்தை நிராகரிப்போரின் முடிவோ நரக நெருப்பே ஆகும்! 13:36 (நபியே!) முன்னர் எவர்களுக்கு நாம் வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள், உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதத்தின் மூலம் மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால், பல்வேறு கூட்டங்களைச் சார்ந்த சிலர் இவ்வேதத்தில் சிலவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. (நபியே!) தெளிவாகக் கூறிவிடும்: “அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டுமென்றும், அவனுக்கு யாரையும் இணைவைக்கக்கூடாதென்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனவே, நான் அவன் பக்கமே அழைக்கின்றேன். மேலும், அவன் பக்கமே நான் திரும்ப வேண்டியுள்ளது.” 13:37 இதே வழிகாட்டலுடன் அரபி மொழியிலான இக்கட்டளையை குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம். இந்த ஞானம் உம்மிடம் வந்த பின்னரும் அவர்களுடைய விருப்பங்களுக்கு நீர் இணங்கிச் சென்றால், அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு உதவி புரிபவர் யாரும் இரார். மேலும், அவனுடைய பிடியிலிருந்து உம்மைக் காப்பாற்றுபவரும் எவரும் இரார். 13:38 உமக்கு முன்பும் தூதர்கள் பலரை நாம் அனுப்பியுள்ளோம். மேலும், மனைவிமக்களையுடையவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருக்கின்றோம். மேலும், அல்லாஹ்வின் அனுமதியின்றி (சுயமாக) ஒரு சான்றைக் கொண்டுவரும் ஆற்றல் எந்தத் தூதருக்கும் இருக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு வேதம் இருக்கிறது. 13:39 தான் நாடுவதை அல்லாஹ் அழித்துவிடுகின்றான்; தான் நாடுவதை நிலைப்படுத்துகின்றான். உம்முல் கிதாப்* அவனிடமே உள்ளது. 13:40 (நபியே!) அவர்களுக்கு நாம் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்ற தீய விளைவுகளில் ஒரு பகுதியை (நீர் உயிர் வாழும்போதே) நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது (அதற்கு முன்பே) உம்மை நாம் எடுத்துக் கொண்டாலும் (எந்நிலையிலும்) தூதை எடுத்துரைப்பது மட்டுமே உமது பணியாகும். கணக்கு வாங்குவது நமது பணியாகும். 13:41 திண்ணமாக, நாம் இந்த பூமியில் வந்துகொண்டிருக்கிறோம் என்பதையும், அதன் சுற்றளவை நாற்புறங்களிலிருந்தும் குறைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் இவர்கள் கவனிக்கவில்லையா? மேலும், அல்லாஹ் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றான். அவனுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கூடியவர் எவருமிலர். மேலும், அவன் கணக்கு வாங்குவதில் மிக விரைவானவன் ஆவான். 13:42 இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் (பெரும் பெரும்) சூழ்ச்சிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் திட்டவட்டமான சூழ்ச்சி முழுவதும் அல்லாஹ்வின் கையில் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் என்னென்ன சம்பாதித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை அவன் அறிவான். மேலும், இறுதி முடிவு யாருக்கு நல்லவிதமாக அமையும் என்பதை இந்நிராகரிப்பாளர்கள் அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள். 13:43 “நீர் இறைவனால் அனுப்பப்பட்டவர் அல்லர்” என்று இந்த நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர். நீர் கூறும்: “எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வின் சாட்சியம் போதுமானது; மேலும், அவனுடைய வேதத்தின் அறிவைப் பெற்றிருப்பவர்களின் சாட்சியம் போதுமானது!”
அத்தியாயம்  இப்ராஹீம்  14 : 1-52 / 52
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
14:1 அலிஃப், லாம், றா. (முஹம்மதே!) இது ஒரு வேதமாகும். இதனை உம்மீது நாம் இறக்கியுள்ளோம்; மக்களை, அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் நீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக! (அதாவது) யாவற்றையும் மிகைத்தோனும் தனக்குத்தானே புகழுக்குரியோனுமாகிய 14:2 மேலும், வானங்கள் பூமியிலுள்ள அனைத்துக்கும் உரியவனுமாகிய அல்லாஹ்வின் பாதையின்பால் (கொண்டுவர வேண்டும் என்பதற்காக). சத்தியத்தை ஏற்க மறுப்பவர்களுக்கு அழிவைத் தரும் கடும் தண்டனை இருக்கிறது; 14:3 அவர்கள் எத்தகையவர்களெனில் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கைக்கு முன்னுரிமை வழங்குகிறார்கள்; மேலும், அல்லாஹ்வின் வழியிலிருந்து மக்களைத் தடுக்கிறார்கள். அவ்வழி (தங்கள் விருப்பப்படி) கோணலாகிவிட வேண்டும் என்று நாடுகிறார்கள். இத்தகையவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டிருக்கிறார்கள். 14:4 தூதர்கள் அனைவரையும், அவரவரின் சமுதாய மொழியிலேயே தூதுச் செய்தி அறிவிப்பவர்களாய் நாம் அனுப்பி வைத்தோம் (செய்தியை) அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாக அவர் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக! பின்னர் அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிபிறழச் செய்கின்றான்; நாடுகின்றவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான். 14:5 (இதற்கு முன்பு) மூஸாவையும் நம்முடைய சான்றுகளுடன் அனுப்பி, “உம் சமுதாயத்தினரை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வாரும்; மேலும், அல்லாஹ்வின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களை நினைவூட்டி, அவர்களுக்கு அறிவுரை வழங்கும்!” என்று கட்டளையிட்டிருந்தோம். பொறுமையாளராகவும் நன்றி செலுத்துபவராகவும் திகழும் ஒவ்வொருவருக்கும் இந்தச் சம்பவங்களில் பல சான்றுகள் இருக்கின்றன. 14:6 மூஸா தம்முடைய சமூகத்தாரிடம் இவ்வாறு கூறியதை நினைவு கூருங்கள்: “அல்லாஹ் உங்களுக்குச் செய்துள்ள பேருதவிகளை நினைத்துப் பாருங்கள்! உங்களுக்குக் கடுமையான துன்பம் இழைத்துக் கொண்டும், உங்கள் ஆண்மக்களைக் கொலை செய்து கொண்டும், உங்கள் பெண்மக்களை உயிருடன் விட்டு வைத்துக் கொண்டும் இருந்த ஃபிர்அவ்னின் ஆட்களிடமிருந்து அவன் உங்களை விடுவித்தான்! இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது. 14:7 மேலும், உங்கள் இறைவன் இவ்வாறு அறிவித்திருந்ததையும் நினைவு கூருங்கள்: “நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் நிச்சயம் நான் உங்களுக்கு மேன்மேலும் வழங்குவேன்; நீங்கள் நன்றி கொல்வீர்களாயின் திண்ணமாக எனது தண்டனை மிகக்கடுமையானதாகும்.” 14:8 மேலும், மூஸா கூறினார்: “நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்றால், ஏன் பூமியில் உள்ள அனைவருமே நிராகரிப்பாளர்களாய் ஆகிவிட்டாலும் கூட திண்ணமாக அல்லாஹ் தேவைகளற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.” 14:9 உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற சமுதாயங்களின் செய்தி நூஹுடைய சமுதாயத்தினர் ஆத் மற்றும் ஸமூத் எனும் சமுதாயத்தினர், இன்னும் அவர்களுக்குப்பின் வந்த (ஏராளமான சமூகத்த)வர்களுடைய செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வே அறிவான். அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது அவர்கள் தம் வாயில் கைகளை வைத்துக் கொண்டு கூறினார்கள்: “நீங்கள் எந்தச் செய்தியோடு அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதனைத் திண்ணமாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், நீங்கள் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீர்களோ அதைக் குறித்து நாங்கள் கடும் சந்தேகத்தில் உழன்று கொண்டிருக்கிறோம்.” 14:10 தூதர்கள் கூறினார்கள்: “வானங்கள், பூமியின் படைப்பாளனாகிய இறைவனைக் குறித்தா உங்களுக்குச் சந்தேகம்? உங்கள் குற்றங்களை மன்னிக்கவும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவும் அவன் உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறான்.” அதற்கு அந்த மக்கள் கூறினார்கள்: “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே தவிர வேறு ஒன்றுமில்லை. எங்கள் மூதாதையர் எவற்றை வணங்கி வந்தார்களோ அவற்றை நாங்கள் வணங்குவதிலிருந்து எங்களைத் தடுக்கவே நீங்கள் விரும்புகிறீர்கள். அப்படியானால் ஒரு தெளிவான சான்றினைக் கொண்டு வாருங்கள்!” 14:11 அதற்கு அவர்களுடைய தூதர்கள் கூறினார்கள்: “உண்மையில் நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்! ஆனால், அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடுகின்றவர்களுக்குப் பேரருளை வழங்குகின்றான். மேலும், உங்களிடம் சான்றினைக் கொண்டு வருவது எங்களுடைய அதிகாரத்தில் இல்லை. சான்று, அல்லாஹ்வின் உத்தரவு கொண்டுதான் வெளிப்படுகின்றது. மேலும், இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வைச் சார்ந்து நிற்க வேண்டும். 14:12 அல்லாஹ்வையே நாங்கள் முழுவதும் சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? எங்கள் வாழ்க்கைப் பாதைகளில் அவன்தானே எங்களுக்கு நேர்வழியைக் காட்டினான். எங்களுக்கு நீங்கள் இழைத்துக் கொண்டிருக்கின்ற தொல்லைகளைத் திண்ணமாக நாங்கள் பொறுத்துக் கொள்வோம். எனவே, சார்ந்திருப்பவர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும்.” 14:13 இறுதியில் இறைமறுப்பாளர்கள் தம் தூதர்களிடம் கூறிவிட்டார்கள்: “நீங்கள் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையெனில், நிச்சயமாக எங்கள் ஊரிலிருந்து உங்களை வெளியேற்றிவிடுவோம்!” அப்போது அத்தூதர்களுக்கு அவர்களின் அதிபதி அறிவித்தான்: “நாம் இந்த அக்கிரமக்காரர்களை அழித்தே விடுவோம்! 14:14 மேலும், அவர்களுக்குப் பிறகு இப்பூமியில் உங்களை வசிக்கச் செய்வோம். என்னிடத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்று யார் பயப்படுகின்றாரோ, மேலும் என் எச்சரிக்கைக்கு யார் அஞ்சுகிறாரோ அவருக்குரிய வெகுமதியாகும் இது!” 14:15 அவர்கள் தீர்ப்பு வேண்டுமென விரும்பினார்கள். (ஆகையால் இவ்வாறு அவர்களுக்குத் தீர்ப்பு அளிக்கப்பட்டது). மேலும், சத்தியத்திற்கு விரோதியான ஒவ்வோர் ஆணவக்காரனும் இழப்புக்குள்ளாகி விட்டான். 14:16 இனி, அவனுக்கு நரகம்தான் இருக்கின்றது. அங்கு அவனுக்குச் சீழ் புகட்டப்படும். 14:17 அதனை அவன் கஷ்டப்பட்டு விழுங்க முயல்வான்; எனினும், அதனை எளிதில் விழுங்கிட அவனால் முடியாது. அனைத்துத் திசைகளிலிருந்தும் மரணம் அவனை நோக்கி வரும். ஆயினும், அவனால் மரணம் அடைய முடியாது. அதைத் தவிர ஒரு கடும்வேதனை அவன் உயிரை வதைத்துக் கொண்டிருக்கும். 14:18 எவர்கள் தம் அதிபதியை நிராகரித்தார்களோ அவர்களின் செயல்களுக்கான உவமை, கடும் புயல் வீசக்கூடிய ஒரு நாளில் அடித்துச் செல்லப்படும் சாம்பலைப் போன்றதாகும். தாங்கள் செய்த செயல்களிலிருந்து எந்தப் பலனையும் அவர்கள் பெற முடியாது. இதுவே அளவு கடந்த வழிகேடாகும். 14:19 நிச்சயமாக, அலலாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்தின் அடிப்படையில் படைத்து, நிலைபெறச் செய்துள்ளான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவன் நாடினால் உங்களை அழித்துவிட்டு (அந்த இடத்தில்) ஒரு புதிய படைப்பைக் கொண்டு வருவான். 14:20 இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்குச் சிறிதும் சிரமமானதல்ல! 14:21 மேலும், இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் திருமுன் ஒளிவு மறைவின்றி ஒன்று சேர்க்கப்படும்போது (உலகில்) பலவீனர்களாய் இருந்த மக்கள், ‘பெரிய மனிதர்களாய்க்’ கருதிக் கொண்டிருந்தவர்களை நோக்கி “(உலகில்) நாங்கள் உங்களைப் பின்பற்றி வந்தோம். (இப்போது) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்ற உங்களால் ஏதேனும் செய்ய முடியுமா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு (ஈடேற்றத்திற்கான) ஏதேனும் வழியைக் காட்டியிருந்தால், நாங்கள் அதனை உங்களுக்கும் நிச்சயம் காட்டித் தந்திருப்போம். இப்போது நாம் பதறினாலும் சரி, பொறுமையாய் இருந்தாலும் சரி இரண்டுமே நமக்கு சமம்தான்! எந்நிலையிலும் நாம் தப்புவதற்கு வழியே இல்லை!” 14:22 பிறகு விவகாரம் தீர்க்கப்பட்டுவிடும்போது ஷைத்தான் கூறுவான்: “திண்ணமாக அல்லாஹ் உங்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருந்தானோ அவை அனைத்தும் உண்மையானவையே! மேலும், நான் உங்களுக்கு அளித்திருந்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றித் தரவில்லை. உங்கள்மீது எனக்கு எந்த ஆதிக்கமும் இருக்கவில்லை. ஆனால் நான் செய்ததெல்லாம் என் வழியில் வருமாறு உங்களை அழைத்ததுதான்! நீங்கள் எனது அழைப்பைத் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டீர்கள். எனவே, இப்பொழுது என்னை இகழாதீர்கள்; உங்களையே இகழ்ந்து கொள்ளுங்கள்! (இங்கு) நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. உங்களாலும் எனக்கு உதவி செய்ய முடியாது. இதற்கு முன்பு இறைவனுக்கு இணையாக நீங்கள் என்னை ஆக்கியதற்கு நான் பொறுப்பல்ல. இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு திண்ணமாக துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது.” 14:23 ஆனால், எவர்கள் (இவ்வுலகில்) இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்கள் சுவனங்களில் நுழைவிக்கப்படுவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் தம் இறைவனின் அனுமதி கொண்டு என்றென்றும் வாழ்வார்கள். மேலும், ‘உங்கள்மீது சாந்தி நிலவட்டும்!” என்று அங்கு அவர்களுக்கு முகமன் கூறப்படும். 14:24 நல்ல வார்த்தை (கலிமா தய்யிபாவு)க்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப்பதிந்திருக்கின்றது; அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன; 14:25 எந்நேரமும் அம்மரம் தன் இறைவனின் ஆணைக்கேற்பக் கனிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் படிப்பினை பெற வேண்டுமென்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு இத்தகைய உவமைகளைக் கூறுகின்றான். 14:26 மேலும், கெட்ட வார்த்தைக்கு உவமை, ஒன்றுக்கும் உதவாத ஒரு கெட்ட மரத்தைப் போன்றதாகும். அந்த மரம் பூமியின் மேல் மட்டத்திலிருந்து பிடுங்கி எறியப்படுகின்றது; அதற்கு எவ்வித நிலையான தன்மையும் கிடையாது! 14:27 நம்பிக்கை கொண்டோருக்கு, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்பாட்டை அருளுகின்றான். ஆனால், அக்கிரமக்காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்கின்றான். அல்லாஹ், தான் நாடியவற்றைச் செய்(வதற்கு அதிகாரம் உள்ளவனாக இருக்)கின்றான். 14:28 அல்லாஹ்வின் அருட்கொடையைப் பெற்று பின்பு அதனை நன்றிகொல்லும் போக்கைக் கொண்டு மாற்றி (தங்களுடன்) தம் சமூகத்தையும் அழிவுக் கிடங்கில் தள்ளியவர்களை நீர் கவனிக்கவில்லையா? 14:29 (அந்த) நரகில் அவர்கள் எரிந்து கருகிவிடுவார்கள்! அது கொடிய இருப்பிடமாகும். 14:30 அல்லாஹ்வின் வழியிலிருந்து (மக்களைப்) பிறழச் செய்வதற்காக மற்றவர்களையும் அவனுக்கு நிகராய் ஆக்கினார்கள். (நபியே! அவர்களிடம்) கூறுவீராக: “நன்கு சுவைத்துக் கொள்ளுங்கள்; இறுதியில் நீங்கள் திரும்பிச் செல்வது நரகத்திற்குத்தான்!” 14:31 (நபியே!) நம்பிக்கை கொண்ட என் அடியார்களிடம், எவ்விதக் கொடுக்கல் வாங்கலும் நட்பும் பலன் தராத ஒருநாள் வருவதற்கு முன்பே தொழுகையை நிலைநாட்டும்படியும், மேலும், நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் (நற்பாதையில்) செலவிடும்படியும் கூறுவீராக! 14:32 அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் படைத்தவன். மேலும், அவன் வானத்திலிருந்து மழை பொழியச் செய்தான். பிறகு அதன் மூலம் உங்களுக்கு உணவாக விதவிதமான விளைபொருட்களை உற்பத்தி செய்தான். இன்னும், கப்பலை அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; அது அவனது கட்டளைக்கேற்பக் கடலில் செல்கிறது. மேலும், உங்களுக்கு ஆறுகளை வசப்படுத்தித் தந்தான். 14:33 மேலும், சூரியனையும் சந்திரனையும் அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் வண்ணம் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். மேலும், இரவையும் பகலையும் உங்களுக்காக வசப்படுத்தித் தந்தான். 14:34 மேலும், நீங்கள் அவனிடம் வேண்டிக்கொண்ட அனைத்தையும் அவனே உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடுவீர்களாயின், அவற்றை உங்களால் வரையறுக்கவே முடியாது. உண்மை யாதெனில், மனிதன் பெரும் அநீதியாளனாகவும், நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். 14:35 இப்ராஹீம் இவ்வாறு பிரார்த்தனை புரிந்ததை நினைவுகூருங்கள்: “என் இறைவனே! (மக்காவாகிய) இந் நகரத்தை அமைதி அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக! மேலும், என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக! 14:36 என் இறைவனே! திண்ணமாக இந்தச் சிலைகள் பெரும்பாலான மக்களை வழிகேட்டிலாழ்த்திவிட்டன; (என்னுடைய வழித்தோன்றல்களும் இவற்றால் வழி கெடலாம்; எனவே, அவர்களில்) எவர்கள் என்னுடைய வழிமுறையின்படி நடந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக என்னைச் சார்ந்தவர்களாவர். எவர்கள் எனக்கு முரணான வழியினை மேற்கொண்டார்களோ திண்ணமாக நீ பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றாய்; 14:37 எங்கள் இறைவனே! நான் என் மக்களில் சிலரை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியத்திற்குரிய உன்னுடைய இல்லத்தருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவனே! அவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்). எனவே, அவர்கள்மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய்த் திகழக்கூடும்! 14:38 எங்கள் இறைவனே! திண்ணமாக நாங்கள் மறைத்து வைக்கிற மற்றும் வெளிப்படுத்துகின்ற அனைத்தையும் நீ அறிவாய் பூமியிலும் சரி, வானத்திலும் சரி, எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல. 14:39 முதுமைக் காலத்தில் இஸ்மாயீல், இஸ்ஹாக் போன்ற மக்களை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! திண்ணமாக என்னுடைய இறைவன் பிரார்த்தனைகளைச் செவியேற்பவனாவான். 14:40 என் இறைவா! தொழுகையை நிலைநிறுத்துபவனாய் என்னை ஆக்குவாயாக! என் வழித்தோன்றல்களிலிருந்தும் (தொழுகையை நிலைநாட்டுபவர்களை) தோற்றுவிப்பாயாக! எங்கள் இறைவனே! மேலும், எனது இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! 14:41 எங்கள் இறைவனே! எனக்கும் என் பெற்றோருக்கும் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளில் மன்னிப்பை அருள்வாயாக!” 14:42 இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கின்றான் என்று (நபியே!) நீர் கருத வேண்டாம்! அவர்களை அவன் விட்டுவைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும்தான்! அந்நாளில் அவர்களின் விழிகள் மருளும்; 14:43 அவர்கள் தம் தலைகளை மேலே உயர்த்திக் கொண்டு ஓடுவார்கள்; அவர்களின் பார்வை நிலை குத்தியிருக்கும்; மேலும், அவர்களுடைய இதயங்கள் சூன்யமாகிவிட்டிருக்கும்! 14:44 வேதனை வரக்கூடிய அந்நாளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அன்று இந்த அக்கிரமக்காரர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! அவ்வாறு அளித்தால், உனது அழைப்பினை நாங்கள் விரைந்து ஏற்றுக் கொள்வோம். மேலும், (உன்) தூதர்களையும் பின்பற்றுவோம்.” (அப்போது அவர்களுக்கு இவ்வாறு தெளிவாகப் பதில் கூறப்படும்:) “எங்களுக்கு அழிவே இல்லை” என்று இதற்கு முன்னர் (பல முறை) சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தவர்கள்தாமே நீங்கள்! 14:45 உண்மையில் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் வாழ்ந்த ஊர்களில்தான் நீங்கள் வசித்து வந்தீர்கள்; அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டிருந்தது; மேலும், அவர்களை உதாரணமாகக் கூறியும் உங்களுக்கு உண்மையைப் புரிய வைத்திருந்தோம்! 14:46 அவர்கள் விதவிதமான சூழ்ச்சிகளைச் செய்து பார்த்தனர். அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளையே பெயர்த்துவிடக் கூடியவையாக இருப்பினும் அவர்களுடைய ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிக்கும் சூட்சுமம் அல்லாஹ்விடம் இருந்தது. 14:47 (நபியே!) அல்லாஹ் தன் தூதர்களிடம் அளித்துள்ள வாக்குறுதிக்கு மாறு செய்வான் என்று நீர் ஒருபோதும் கருதவேண்டாம். திண்ணமாக, அல்லாஹ் வல்லமையுடையவனும், பழிவாங்குபவனும் ஆவான். 14:48 அந்த நாளில் இந்த பூமி வேறு பூமியாகவும், இந்த வானங்கள் வேறு வானங்களாகவும் மாற்றப்பட்டு, அடக்கியாளும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் திருமுன்னர் ஒளிவு மறைவின்றி எல்லாரும் வந்து சேர்வார்கள் 14:49 அத்தகைய ஒரு நாளைக் குறித்து நீர் அவர்களை எச்சரிப்பீராக! அந்நாளில் குற்றவாளி(களின் கை கால்)கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதை நீர் காண்பீர். 14:50 அவர்கள் தார் ஆடைகளை அணிந்திருப்பார்கள். மேலும், அவர்களின் முகங்களை தீக்கொழுந்துகள் மூடியிருக்கும். 14:51 ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் செய்த செயல்களின் கூலியை அல்லாஹ் வழங்க வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்யப்படும்)! திண்ணமாக, அல்லாஹ் விரைவாய்க் கணக்கு வாங்குபவனாவான். 14:52 இது, மனிதகுலம் முழுவதற்கும் உரிய தூதுச் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்; மேலும், உண்மையில் இறைவன் ஒருவனே என்பதை அவர்கள் அறிந்திட வேண்டும்; மேலும், அறிவுடையவர்கள் படிப்பினை பெற்றிட வேண்டும் என்பதற்காகவே (இந்தத் தூதுச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.)
X
JuzHizbSura
1. Alif-Lam-Mim1(1:1) - (2:74)
2(2:75) - (2:141)
2. Sayaqūl3(2:142) - (2:202)
4(2:203) - (2:252)
3. Tilka -r-rusul5(2:253) - (3:14)
6(3:15) - (3:92)
4. Lan Tana Lu7(3:93) - (3:170)
8(3:171) - (4:23)
5. W-al-muḥṣanāt9(4:24) - (4:87)
10(4:88) - (4:147)
6. Lā yuẖibbu-llāh11(4:148) - (5:26)
12(5:27) - (5:81)
7. Wa ʾidha samiʿū13(5:82) - (6:35)
14(6:36) - (6:110)
8. Wa law ʾannanā15(6:111) - (6:165)
16(7:1) - (7:87)
9. Qāl al-malāʾ17(7:88) - (7:170)
18(7:171) - (8:40)
10. W-aʿlamū19(8:41) - (9:33)
20(9:34) - (9:92)
11. Yaʾtadhirūna21(9:93) - (10:25)
22(10:26) - (11:5)
12. Wa mā min dābbah23(11:6) - (11:83)
24(11:84) - (12:52)
13. Wa mā ʾubarriʾu25(12:53) - (13:18)
26(13:19) - (14:52)
14. ʾAlif Lām Rāʾ27(15:1) - (16:50)
28(16:51) - (16:128)
15. Subḥāna -lladhi29(17:1) - (17:98)
30(17:99) - (18:74)
16. Qāla ʾa-lam31(18:75) - (19:98)
32(20:1) - (20:135)
17. Aqtaraba li-n-nās33(21:1) - (21:112)
34(22:1) - (22:78)
18. Qad ʾaflaḥa35(23:1) - (24:20)
36(24:21) - (25:21)
19. Wa-qāla -lladhīna37(25:22) - (26:110)
38(26:111) - (27:55)
20. Am-man khalaq39(27:56) - (28:50)
40(28:51) - (29:45)
21. Utlu ma uhiya41(29:46) - (31:21)
42(31:22) - (33:30)
22. Wa-man yaqnut43(33:31) - (34:23)
44(34:24) - (36:27)
23. Wa-mā-liya45(36:28) - (37:144)
46(37:145) - (39:31)
24. Fa-man ʾaẓlamu47(39:32) - (40:40)
48(40:41) - (41:46)
25. ʾIlaihi yuraddu49(41:47) - (43:23)
50(43:24) - (45:37)
26. Ḥāʾ Mīm51(46:1) - (48:17)
52(48:18) - (51:30)
27. Qāla fa-mā khatbukum53(51:31) - (54:55)
54(55:1) - (57:29)
28. Qad samiʿa -llāhu55(58:1) - (61:14)
56(62:1) - (66:12)
29. Tabāraka -lladhi57(67:1) - (71:28)
58(72:1) - (77:50)
30. ʿAmma59(78:1) - (86:17)
60(87:1) - (114:6)